உலக கோப்பை பந்துகள் - அடிடாஸ் தயாரித்து வழங்கும் கால்பந்துகளின் தன்மை

 






Uploading: 370468 of 370468 bytes uploaded.



உலகப்கோப்பை பந்துகளின் வரலாறு

பிபா அமைப்பு நடத்தும உலக கோப்பை கால்பந்து முக்கியமான போட்டி. இந்தியாவில் பெரும்பான்மையாக கிரிக்கெட்டிற்கு ஆதரவு இருந்தாலும் கூட முக்கியமான நகரங்களில் கால்பந்துக்கும் ஆதரவான ரசிகர்கள் கூட்டம் உண்டு. வடகிழக்கு இந்தியாவில் கால்பந்திற்கென வெறிகொண்ட ஆட்டக்காரர்களும், ரசிகர்களும் உண்டு. இங்கு நாம் பார்க்கப் போவது கால்பந்துகளைப் பற்றித்தான். கத்தாரில் நடைபெறும் உலக கோப்பை கால்பந்து போட்டியில் அல் ரிஹ்லா என்ற பெயரில் கால்பந்து அறிமுகமாகியுள்ளது.

அல் ரிஹ்லா என்ற அரபி மொழி சொல்லுக்கு பயணம் என்று பொருள். இபின் பத்துதா என்பவரைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? மொராக்கோ நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா என பல நாடுகளுக்கு சுற்றினார். டெல்லியில் உள்ள மன்னர் முகமது பின் துக்ளக்கையும் சந்தித்தவர்.

பந்தில் பயன்படுத்தப்பட்டுள்ள மை, சூழலுக்கு உகந்தது. நீரை அடிப்படையாக கொண்டது. கத்தாரின் கலாசாரத்தை மையமாக கொண்டு வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. பாலியூரெத்தின் வேதிப்பொருள் மூலம் கால்பந்து உருவாக்ககப்பட்டுள்ளது. இதில் வேகம், துல்லியம், காற்று அழுத்தம் ஆகியவை சிறப்பாக உள்ளதாக பிபா கூறியுள்ளது.  

மைதானத்தில் பந்தின் ஓட்டத்தை கணிக்கவென கூரையில் பனிரெண்டு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கால்பந்தில் ஐஎம்யூ என்ற சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. இது பந்து பற்றிய தகவலை எளிதாக நிலையத்தில் உள்ளோர் பெற உதவும்.

முதல் உலக கோப்பை போட்டி,  1930ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதில் அர்ஜென்டினா, உருகுவே இறுதிப்போட்டியில் சந்தித்தனர். முதல் பாதியில் அர்ஜென்டினா அணி பரிந்துரைத்த பந்தும், அடுத்த பாதியில் உருகுவே பரிந்துரைத்த பந்தும் பயன்படுத்தப்பட்டது. இறுதியில் உருகுவே தனது பந்தைப் பயன்படுத்தி வென்றது. அடுத்த கால்பந்து உலக கோப்பை 1950ஆம் ஆண்டு நடைபெற்றது. அப்போது பயன்படுத்தப்பட்ட பந்தில் காற்று அடிப்பதற்கான வால்வுகள் இருந்தன.

அடிடாஸ் பந்துகள்

 

டெல்ஸ்டார்

மெக்சிகோவில் நடைபெற்ற போட்டியில் முதல்முறையாக அடிடாஸ் பந்துகள் மைதானத்திற்கு வந்தன. இது கறுப்பு வெள்ளை வடிவத்தில் 32 கட்டங்கள் கொண்டது. 1974ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக அடிடாஸ் நிறுவனத்தின் பெயர் கால்பந்தில் பொறிக்கப்பட்டது.

 ஆஸ்டெக்

இந்த பந்து முழுக்க செயற்கை இழைகளால் செய்யப்பட்டது. தோல் பந்துகளை விட சிறப்பாக இருந்தது. நீருக்கு எதிராகவும் சிறப்பாக செயல்பட்டது. 

ட்ரைகலர்

ஃபிரான்ஸ் நாட்டில் இந்த வகை பந்து அறிமுகமானது. பல்வேறு நிறங்கள் இந்தப் போட்டியில்தான் அறிமுகமானது. பிரான்ஸ் நாட்டின் கொடி நிறங்கள் கால்பந்தில் அச்சிடப்பட்டிருந்தன.

ஜாபுலானி

பந்தில் நிறைய கட்டங்கள் குறைக்கப்பட்டு எட்டு கட்டங்கள்தான் இருந்தன. மேலும் பந்து வீரர்களால் அடிக்கப்படும்போது எங்கு போகும், எப்படி திரும்பும் என்பது ஜோதிடம் போல கணிக்க முடியாததாக இருந்தது. அடிடாஸ் பந்தை உருண்டையாக்கி இருந்தனர். இந்த பந்தின் தரத்தில் இத்தாலியின் கோல் கீப்பர் பஃப்போன், பிரேசிலின் கோல் கீப்பர் சீசர் ஆகியோர் அவநம்பிக்கை தெரிவித்தனர். 

பிராஜூகா

2014ஆம் ஆண்டு அடிடாஸ் கால்பந்திற்கான மாதிரிகளை வீர ர்களுக்கு கொடுத்து சோதித்தது. இந்த பந்தில் ஆறு பேனல்கள் இருந்தனர. பாலியூரெத்தினால் செய்யப்பட்டிருந்தது. ஜாபுலானியை விட சிறப்பாக இருந்த்து.  ரஷ்யாவில் நடைபெற்ற கடைசி உலக கோப்பையில் டெல்ஸ்டார் என்ற தனது முந்தைய கால்பந்தை பேனல் டிசைனை மட்டும் சற்றே கொடுத்தது அடிடாஸ்.


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்