எல்இடி விளக்கின் வரலாறு
எல்இடி விளக்கு |
ஆற்றலை சேமிக்கும்
விளக்கு -LED
விளக்கை யார்
கண்டுபிடித்தது என ரூபி வாய்ப்பாட்டில் பார்த்தால் அன்றைக்கு அனைவரும் நம்பிய அறிவியலாளரான
எடிசனைக் கூறுவார்கள். ஆனால் அவரே அவரது உதவியாளராக இருந்த நிகோலா டெஸ்லாவின் அறிவை
பயன்படுத்தி துரோகம் செய்துதான் தன்னை நிலைநிறுத்தினார். இதற்கு எடிசன் கடைசிவரை பல்வேறு
அரசியல் சதிகள் செய்துகொண்டே இருந்தார். எனவே
இதுபற்றி முழுமையாக அறிய கிழக்கு டுடேவில் ராம் எழுதும் நிகோலா டெஸ்லா தொடரை வாசித்துக்கொள்ளுங்கள்.
சாதாரணமாக
பல்பு என்றால் பிலிப்ஸ் குண்டு பல்பு அனைவருக்கும் நினைவு வரும். உருண்டையான பல்பில்
நடுவில் டங்க்ஸ்டன் இழை இருக்கும், மின்சாரம் அதில் பாயும்போது ஒளிரும். இரண்டே நிமிடங்களில்
பல்பின் கண்ணாடி கை பொறுக்க முடியாத வெப்பத்தை அடைந்துவிடும். இன்று அந்த பல்பு விடைபெற்றுவிட்டது.
அதே சைசில் மின்சாரத்தை சேமிக்கும் திறன் உள்ள எல்இடி வந்துவிட்டது.
குண்டு பல்புகளை
பயன்படுத்தும்போது அதிக மின்னாற்றல் செலவாகும். கிடைக்கும் வெளிச்சம் குறைவு. மேலும்
அதன் அருகில் நாம் உட்கார்ந்து வேலை செய்வது கடினம். இரவில் சூரியன் வந்துவிட்டதோ எனும்படி
சூடு இருக்கும். குளிருக்கு இந்த சூடு ஓகேதான். ஆனால் எப்போது இப்படி சூடு இருந்தால்
எப்படி?
1955ஆம் ஆண்டு
விளக்கில் டங்க்ஸ்டன் இழையுடன் ஹாலோஜன் வாயுவை செலுத்தினார்கள். இதனால் விளக்கின் பிரகாசம்
கூடியது. பிறகு 1976ஆம் ஆண்டு காம்பேக்ட் ப்ளூரசன்ட் விளக்குகள் சந்தைக்கு வந்துவிட்டன.
80 சதவீதம மின்சிக்கனம் கொண்டது. 8 ஆயிரம் மணிநேரங்கள் ஆயுள் கொண்டது. இந்த பல்பில்
பாதரசம் சிறிது உண்டு. மின்சாரம் ஒரு குழாய் வழியாக செல்லும். அதில் உள்ள ஆர்கன் என்ற
வாயு, பாதரசம் ஆகியவை ஆவியாகும். இதன் விளைவாக புற ஊதாக்கதிர்கள் உருவாகும். இவை பாஸ்பர்
என்ற வேதிப்பொருளில் பட்டுத்தான் விளக்கொளி நமக்கு கிடைக்கிறது. ஆனாலும் கூட இன்னும் சிக்கனம் என்றுதான் நாம் பயணித்து
எல்இடி கண்டறிந்தோம். இதில் 95 சதவீத மின்சிக்கனம் உண்டு. ஆனால் விலை அதிகம். இதில்
மின்சாரம் பாய்ந்து டையோட்டிலுள்ள எலக்ட்ரான்கள் காரணமாக மின்னொளி கிடைக்கிறது. சாதாரண
பல்பு மாதம், வாரம் என உயிரை விடும் என்றால் எல்இடி ஆண்டுகள் வரை தாங்கும். தோராயமாக
50 ஆயிரம் மணி நேரங்கள் என்பது கணக்கு.
பழுதான எரியாத
எல்இடி பல்புகளை எளிதாக கழிவு மேலாண்மை செய்ய முடியும். இதில் நச்சு உலோகங்கள் அளவில்
குறைவு. பிற பல்புகள் சூழலுக்கு தீங்கிழைப்பவை.
கருத்துகள்
கருத்துரையிடுக