நான், எனது என்ற சொற்களே வாழ்பனுவத்தை அழிப்பன - ஜே கிருஷ்ணமூர்த்தி

 
















சரியான கல்வி

ஜே கிருஷ்ணமூர்த்தி



நான், எனது என்ற சொற்களை ஒருவர் பயன்படுத்தும்போது அவர் சுயத்துடன் தன்னை தீவிரமாக ஈடுபடுத்திக்கொள்கிறார். இந்த நிலையில் ஒருவரின் மனம் சுதந்திரமாக இயங்குதில்லை. அவர் பெறும் அனுபவங்களும் கூட வாழ்க்கை சவால்களை எதிர்கொள்ள உதவுவதில்லை. தான், எனது எனும் தீவிர தன்முனைப்பு  முரண்பாடுகள், வேதனை, குழப்பங்களை ஏற்படுத்துகிறது.  இவர்களுக்கு அனுபவங்களும் மேற்சொன்ன பாதிப்புகளிலிருந்து தப்பியவையாக இருக்காது.

குழந்தைகள் தங்கள் சுயத்திடமிருந்து தன்முனைப்பிடமிருந்து தப்பி விலகி இருக்க கற்றுக்கொடுப்பது சற்று வேதனை நிரம்பியதாகவே இருக்கும். பெற்றோர்கள், ஆசிரியர்கள் குழந்தைகளின் உறவுமுறைகள், நடவடிக்கை என பலவற்றையும் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும். பெற்றோர், கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் தங்களது தெளிவான கருத்துகளின் வழியே குழந்தைகளுக்கு உதவினால் அவர்களுக்குள் அன்பும் நல்ல விஷயங்களும் உருவாகும்.

கல்வி என்பது எப்போதும் நிகழ்காலத்திற்கானது. கற்றல் என்பது சூழல் தாக்கங்கள், வேறுவிதமான தன்மைகளைக் கொண்டிருக்காது. ஒருவரின் முரண்பாடுகள், துன்பங்களை நீக்கி அவரை கல்வியே முழுமையானவராக்குகிறது. இதற்கு சரியான கல்வி அவசியம். ஆசிரியர் கல்வியை சரியாக புரிந்துகொண்டால் மாணவரை தனியாக கவனித்து அறிந்து தெளிவார். இந்த முறையில் மாணவர்களின் உள்முகமான சிந்தனை சுதந்திரத்தை வளர ஊக்கப்படுத்துவார். ஒருவர் மனதில் கொண்டுள்ள உள்முக மதிப்புகளை புரிந்துகொண்டு கல்வி கற்பிப்பது சிறந்தது. ஒருவரின் ஆசை, வரம்புகள், பயம் ஆகியவை மனதைக் கட்டுப்படுத்துவன. ஒருவரை நிறைவு கொள்ளச் செய்யும் தன்னிறைவு இயல்பில் ஏராளமான முரண்பாடுகள், துயரங்கள் உருவாகின்றன.

இந்த முறையில் ஒருவர் நிபந்தனைகள் இன்றி வாழ்க்கையின் பொருளை கற்றுக்கொள்ள உதவி செய்ய முடியும். ஒருவரின் முழுமையான மேம்பாடு உலகில் அழிவை ஏற்படுத்தாதா என்று சிலர் கேட்கலாம். இப்போது மட்டும் உலகம் அமைதியாகவா இருக்கிறது?

உலக நாடுகளில்  ஏராளமான குழப்பங்கள் ஏற்பட்டுக்கொண்டுதான் உள்ளன. ஒருவர் தன்னைப் புரிந்துகொள்ளக் கூடிய வகையில் கூட கல்வி அமையக்கூடாதா? ஒருவருக்கு தன்னைப் பற்றி அறியக்கூடிய சுதந்திரம் கிடைத்து விட்டாலும் அவர் அங்கீகரிக்கும் மதிப்புகள் பற்றி கற்றுத்தர வேண்டியுள்ளது.

சரியான கல்வியைப் பிள்ளைகளுக்குக் கற்பிக்கும்போது மனதில் இயல்பை அவர்கள் அறிந்துகொள்வார்கள். மேலும் நிகழ்கால மதிப்பை உணருவதோடு அவற்றுக்கு எதிர்வினை ஆற்றாமல் கவனித்துக்கொண்டு இருப்பார்கள். இதன் வழியாக வாழ்க்கையின் போக்கை அவர்கள் புரிந்துகொள்வார்கள்.

மனிதர்கள் தங்களுக்குள் ஒற்றுமையாக இணைந்து செயல்படாதபோது கல்வி ஒருவரை விழிப்புணர்வு கொண்டவராக உருவாக்காது. கல்விமுறை மூலம் மனித உறவுகள், அடுத்த தலைமுறை மக்களின் மனம் ஆகியவை மாறும் என்பதற்கான நம்பிக்கை இல்லாமல் இருப்பது ஏன்?

 நாம் இதை முன்னமே முயன்று பார்க்கவில்லை. சரியான கல்வி என்பதில் நமக்கு பயம் உள்ளது. எனவே அதை செயல்படுத்திப் பார்க்க கூட விருப்பமின்றி இருக்கிறோம். நிகழ்கால நடைமுறைகளுக்கு ஏற்றபடி அதன் அருகேயுள்ள பழக்கங்களை சிந்தனைகளை ஏற்கிறோம். நடைமுறை வாழ்க்கைக்கு ஏற்றபடி பிள்ளைகளைக்  கட்டுப்படுத்துகிறோம். ஆனால் அதே நடைமுறைகள்தான் போரை, பட்டினியை உலகமெங்கும் உருவாக்கி வருகிறது.  இவற்றை உருவாக்கும் ஒன்றை நாம் கல்வி என்று கூற முடியுமா?

பல்வேறு விதிமுறைகளை வகுத்துக்கொண்டு அதன் வழியாக அறிவுக்கூர்மை, மகிழ்ச்சியை கெடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. பயம், பதற்றம், நம்பிக்கையின்மையோடு இருந்தால் அவரால் தனிப்பட்ட நபர்களை ஊக்குவிக்க முடியுமா ? அன்பையும் நல்லியல்புகளையும் ஒருவர் கடைபிடிக்க கல்விமுறை உதவாத போது, நமக்கும் பிள்ளைகளுக்கும் அது பாரமாக பெரும் சுமையாக மாறும்.

நிகழ்கால சூழலை மாணவர் அப்படியே ஏற்கவேண்டும் என  விதிகளை வகுப்பது முட்டாள்தனமானது. அதேநேரத்தில் கல்விமுறையில் ஏற்படும் புரட்சிக்கு, அதை செயல்படுத்தும் நாமே பொறுப்பு. இதன் பின்னர்தான். மோசமான ராட்சஷ புரட்சி இறுதியில் ஏற்படுகிறது. இந்த சம்பவம் இன்னொரு குழுவிற்கு அதிகாரத்தைச் செயல்படுத்தும் வாய்ப்பை அளிக்கிறது. குழுக்கள் பல்வேறாக இருந்தாலும் அவர்கள் அதிகாரத்தை எட்டும்போது பிறரை ஒடுக்குவதே வாடிக்கை. பலவந்தமாக செய்யும் செயல்பாடுகளுக்கான நிர்பந்தம் அல்லது உளவியல்ரீதியான கட்டாயப்படுத்தல் என இவற்றை அடையாளம் காணலாம்.

தி ரைட் கைண்ட் ஆஃப் எஜூகேஷன் நூலிலிருந்து….

புதுவிதமான வேறுபட்ட மனதையும் இதயத்தையும் கொண்ட தலைமுறையையும் கொண்டு வர நாம் தயாராக இருக்கிறோமா? அவர்களை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோமா? ஜே.கே

 

  

 

 

 


கருத்துகள்