ஒருதலைக்காதலில் இழுத்துவிடப்படும் பெருமாள் பக்தனின் நிலை! - நமோ வெங்கடேசா - வெங்கடேஷ், த்ரிஷா

 












 

நமோ வெங்கடேசா - தெலுங்கு 

விக்டரி வெங்கடேஷ், த்ரிஷா, பிரம்மானந்தம். முகேஷ் ரிஷி, அலி

இயக்கம் சீனு வைட்லா

 

வெங்கட்ரமணா, ஹைதராபாத்தில் தனது சித்தப்பா குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார். இவருக்கு தொழிலே கலை நிகழ்ச்சிகளை செய்வதுதான். இந்த நிலையில் வயசாகிறதே திருமணம் செய்யலாம் என நினைத்து ஜோதிடம் பார்க்கிறார்கள். ஆனால் ஜோதிடர் போட்ட சோளிகளில் ஒன்று எந்த பக்கமும் திரும்பாமல் நடுவில் நிற்கிறது. அதாவது கல்யாணம் நடந்தாலும் நடக்கும். இல்லையானாலும் சரி.

வெங்கட்ரமணாவைப் பொறுத்தவரை அவர் பிறரை ஏமாற்றுவதில்லை. அவரும் ஏமாறுவதில்லை. இப்படி இருப்பவருக்கு பாரிசில் நிகழ்ச்சி நடத்த அழைக்கிறார்கள். அழைத்த ஆள் லேசுபட்டவரில்லை. ஆனால் அவரையும் வெங்கட் ரமணா எந்த கல்மிஷம் இல்லாமல் நடந்துகொண்டு பீதிக்குள்ளாக்குகிறார். பிரசாத் என்ற நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் வெங்கட் ரமணாவை தனது சொந்தக்காரப் பெண் காதலிப்பது போல மாயையை உருவாக்குகிறார். அதையும் வெங்கி நம்புகிறார். ஆனால் உண்மையில் அவர் காதலிக்கும் பெண் யார், அவர் யாரை விரும்புகிறார், பிரசாத்தின் பழிவாங்கும் திட்டம் நிறைவேறியதா என்பதை நகைச்சுவையாக சொல்லியிருக்கிறார்கள்.

விக்டரி வெங்கடேஷ் படம் நெடுக நல்ல பிள்ளையாக வருகிறார். அவரின் வயதான தோற்றத்தை வைத்தே ஒரு காமெடி வேறு செய்திருக்கிறார்கள். மற்றபடி பிரம்மானந்தம், பிரிதிவிராஜ், ரகுபாபு, அலி காமெடிதான் படத்தை பெருமளவில் காப்பாற்றுகிறது.

படம் முழுக்க பெருமாள் பக்தி பெருக்கெடுத்து ஓடுகிறது. இதில் யாரும் தப்பிக்கவே முடியாது. படத்தின் தொடக்கத்திலேயே பிறருக்கு எந்த கெடுதலும் செய்ய நினைக்காத மனிதனின் கதை என்கிறார்கள். அதனால் நாயகனின் வாழ்க்கை பற்றியோ, குணம் பற்றியோ பெரிய எதிர்பார்ப்பு ஏதும் இல்லை.  படத்தில் ஐரோப்பிய மாப்பிள்ளையாக வந்து வாயில் வாழைப்பழத்தை வாங்குகிறார் ஜெய் ஆகாஷ்.

படத்தின் இறுதிக்காட்சி வரை வில்லன், தனது மருமகளின் சொத்தை கொள்ளையடிக்கும் வேகத்துடன் இருக்கிறார். ஆனால் வெங்கி நன்கு அடித்து புரட்டி எடுத்தபிறகு, மாமாவை விட்டுடுங்க என மருமகள் சொன்னதற்காக  அவள் மீது வரும் பாசமெல்லாம்… ம்மா, முடியல சாமி  முடியல…

யார்ரா கோமாளி நீ?

கோமாளிமேடை டீம்


கருத்துகள்