உதவாக்கரை பங்குகளை விற்று சாதனை படைத்த மனிதனின் எழுச்சியும், வீழ்ச்சியும் - தி வோல்ஃப் ஆப் வால்ஸ்ட்ரீட்

 













வோல்ஃப் ஆஃப் வால்ஸ்ட்ரீட்
லியனார்டோ டிகாப்ரியோ, மார்க்கரேட் ராபி
இயக்கம் மார்ட்டின் ஸ்கார்சி






அமெரிக்காவில் வால்ஸ்ட்ரீட் எனும் பங்குச்சந்தை நிறுவனம் பற்றி அறிந்திருப்பீர்கள். அதுதான் உலகளவில் பல்வேறு நாடுகளின் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் இடம். அங்கு வேலைக்கு வரும் பெல்ஃபோர்ட் என்ற மனிதன், பங்குச்சந்தை உலகில் மிகப்பெரும் மனிதராக எப்படி உருவானார் என்பதே படத்தின் கதை.

படம் மூன்று மணி நேரம் ஓடுகிறது என்றாலும் சொல்வதற்கு அத்தனை விஷயங்கள் உள்ளன. டிகாப்ரியோ பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். படத்தில் நிறைய முக்கியமான காட்சிகள் உள்ளன. அதில் அவர் முதன்முதலில் பங்குச்சந்தை பங்குகளை விற்க வாடிக்கையாளர்களுக்கு போன் செய்ய தன்னை எப்படி தயார் செய்துகொள்ளவேண்டும் என கற்றுக்கொள்ளும் காட்சி. இங்குதான் போதைப்பொருட்களை பயன்படுத்த கற்கிறார். அவர் வாழ்வின் இறுதிவரையில் போதைப்பொருட்களை பயன்படுத்தி தனது வாழ்க்கையின் உயரம் தொட்டு கீழே விழவும் இதே பழக்கம்தான் வழித்தடமாக அமைகிறது. பங்குகளை விலைபேசி விற்கும் அலுவலகத்தில் வேலை செய்கிறார். ஆனால் அங்கு அவர் வேலை செய்து பெரிதாக சாதிக்க முடியாத சூழல். எனவே, வேலையை விடுவதென தீர்மானித்து வேறு ஒரு இடத்திற்கு வருகிறார்.

அங்கு சிறு நிறுவன பங்குகளை வாடிக்கையாளர்களுக்கு விற்கிறார்கள். அந்த அலுவலகத்தில் சரியான ஆங்கில உச்சரிப்புடன் பேசுவதற்கு கூட ஆட்கள் இல்லை. எப்படி ஒரு பொருளை விற்பது என தெரியாமல் சுமாராக விற்றுக்கொண்டு இருக்கிறார்கள். பெல்ஃபோர்ட் அங்கு வந்து அந்த சூழ்நிலையை மாற்றுகிறார். அங்கு அவர் நான்காயிரம் ரூபாய்க்கு ஒரு உதவாக்கரை நிறுவனத்தின் பங்கை விற்கிறார். அவர் உல்டாவாக உண்மையை மறைத்து சில வாரங்களிலேயே மாதம் அவரது கமிஷனாக 50 சதவீதம் என 72 ஆயிரம் டாலர்களை சம்பாதிக்கிறார். இதைப்பார்த்து அவரது வீட்டுக்கு அருகில் வசிக்கும் ஒருவர் அவர் செய்யும் தொழிலைப் பற்றி விசாரிக்கிறார். அவர் நாற்காலிகளை விற்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். பெரிய வருமானம் ஒன்றும் வருவதில்லை. எனவே, டிகாப்ரியோவை அவர் விசாரிக்கிறார். இந்த உரையாடல் காட்சி சிறப்பானது. புதுவித போதைப்பொருளை சாப்பிட்டுவிட்டு போன் கூட பேசமுடியாமல் கீழே விழுந்து படிக்கட்டில் உருண்டு வந்து கார் ஏறும் காட்சி. இதில் டிகாப்ரியோ நடித்திருப்பதை பார்த்தால்தான் நீங்கள் அவரது நடிப்பை சரியாக உணர முடியும். 

பிறகுதான், டிகாப்ரியோ தனது நண்பர்களை மட்டுமே சேர்த்து அவர்களுக்கு எப்படி பங்குகளை விற்பது என பயிற்சி கொடுக்கிறார். இதனால் மிகச்சில மாதங்களிலேயே ஸ்ட்ராட்டன் ஓட்டமான் என்ற நிறுவனம் மிகப்பெரும் வளர்ச்சி பெறுகிறது. பங்குகளை விற்பனை செய்வதில் பெல்ஃபோர்ட் காட்டும் வெறி அவரை ஓநாய் என பத்திரிகையாளர்களை அழைக்க வைக்கிறது. படத்தில் டிகாப்ரியோ சில சமயங்களில் கேமராவைப் பார்த்து பேசினாலும் படத்தின் காட்சிகளுக்கு அது எந்த தடையையும் ஏற்படுத்தவில்லை. அவர் புகைப்படம் கட்டுரைகள் பத்திரிகளைகளில் வரத்தொடங்குகிறது. அதேசமயம் மோசடியான ஆள் என்று எஃப்பிஐயும் பெல்ஃபோர்ட் பற்றிய பல்வேறு விஷயங்களை சேகரிக்கத் தொடங்குகிறது.

பணம் வரத் தொடங்கியதும் ஒரு மனிதனின் வாழ்க்கை எப்படி சீர்கேடு அடைகிறது என்பதற்கு பெல்ஃபோர்ட் வாழும் உதாரணமாக மாறுகிறார். அவரது மனைவி இருக்கும்போது இன்னொரு பெண்ணுடன் உடலுறவு கொள்கிறார். இதற்கான காட்சிகளில் அவருக்கு மனசாட்சியின் உறுத்தல் இருக்கும். அதை மெல்ல போதைப்பொருட்களைப் பயன்படுத்தி உறக்கத்தில் ஆழ்த்திவிட்டு ஆசையின் வாசலைத் திறக்கிறார். அதில்தான் இரண்டாவது மனைவியை அடைகிறார்.

தனது அலுவலகத்தில் வேலை செய்யும் பணியாட்களுக்கு என போதைப்பொருட்களை வருவிக்கிறார். கூடுதலாக விலை மாதுக்களை  கூட்டி வந்து செக்ஸில் ஈடுபட வைக்கிறார்  இதன் மூலம் அங்கு வேலை செய்பவர்களை தீவிரமாக வேலை செய்ய வைக்கிறார். இதன் விளைவாக பெல்ஃபோர்ட்  சுவிஸ் வங்கியில் கணக்கு வைக்கும் அளவுக்கு உயர்கிறார்.

பங்குச்சந்தையில் எப்படி பணம் சம்பாதிக்கிறார்கள், அங்கு வேலை செய்பவர்களின் மனநிலை என பல விஷயங்களையும் இயக்குநர் மார்ட்டின் ஸ்கார்சி வெளிப்படையாகவே கூறியிருக்கிறார். இந்தப்படத்தில் டிகாப்ரியோவை விட பெல்ஃபோர் பாத்திரத்திற்கு வேறு யாரும் பொருத்தமானவர்கள் இல்லை என்ற அளவுக்கு நடித்திருக்கிறார். மார்கரேட் ராபியும் சிறப்பாக நடித்திருக்கிறார்.

பேராசை எல்லை கடந்தால் ஒரு மனிதனின் வாழ்க்கை என்னவாகும் என்பதற்கு பெல்ஃபோர்ட் என்ற மனிதனே உதாரணம். இது அவனின் கதை.

இறந்தாலும் பிறந்தாலும் பணம்தான் அல்டிமேட்

கோமாளிமேடை டீம்  

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்