இடுகைகள்

தலைமுடி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தலைமுடி மூலம் மனநோய்களை அறியலாம்!

படம்
            முடி மூலம் நோய்களை அறிய முடியுமா ? மூளையிலுள்ள ஹைப்பர் ஆக்டிவ் மரபணுக்கள் மன நலன் சார்ந்த பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தும் என்று அறிவியலாளர்கள் கருதுகிறார்கள் . மூளையில் நடக்கும் பிரச்னைகளுக்கு நாம் அதனை திறந்து பார்க்கவேண்டியதில்லை . முடியைப் பார்த்தாலே போதும் . மூளையில் உள்ள எம்பிஎஸ்டி மரபணு , கட்டற்று இயங்கும்போது பாதிப்பு ஏற்படுகிறது . இந்த மரபணுவினால் ஹைட்ரஜன் சல்பைடு அதிகளவு மூளையில் உருவாகிறது . இது ஆன்டி ஆக்சிடன்ட்தான் என்றாலும் அதிகளவு உருவாகும்போது மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது . ஹைட்ரஜன் சல்பைடு மைட்டோகாண்ட்ரியாவின் செயல்பாடுகளை முடக்குகிறது . மேலும் பிற நரம்பு செல்களின் தகவல்தொடர்பையும் பாதிக்கிறது . இதனால் ஸிசோபெரேனியா பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது . எம்பிஎஸ்டி மரபணுவால் மூளையில் ஏற்படும் பாதிப்பு மட்டுமன்றி , முடியில் ஸ்டெம் செல்லும் பாதிக்கப்படுகிறது . ஆர்என்ஏவை நகல் எடுத்து எம்பிஎஸ்டி என்சைம்களை உருவாக்க முயல்கிறது . இதனால் தலைமுடியை எடுத்து சோதித்தால் மூளையில் ஏற்பட்டுள்ள பாதிப்பை அடையாளம் கண்டு்விடலாம் .

தலைமுடியால் நமக்கு அலர்ஜி ஏற்படுமா?

படம்
மிஸ்டர் ரோனி நமது தலைமுடி நமக்கு அலர்ஜி ஏற்படுத்தும் வாய்ப்பு இருக்கிறதா? அலர்ஜி என்பது விலங்குகளின் அல்லது நமது தலைமுடியால் ஏற்படும் வாய்ப்பு இல்லை. காரணம், அவற்றில் கெராட்டின் என்ற புரதம் மட்டுமே இருக்கிறது. ஆய்வுப்படி இதில் நமக்கு பாதிப்பு ஏற்படுத்தும் எந்தப் பொருட்களும் கிடையாது. ஆனால், விலங்குகளின் எச்சில், தோல் செல்கள் நமக்கு அலர்ஜியை ஏற்படுத்த வாய்ப்பு ள்ளது. விலங்குகளின் முடி நமது உடலுக்குள் சென்றால் அவை பாதிப்பை ஏற்படுத்தலாம். அதுவும் பெரியளவு பாதிப்பு இருக்காது. நன்றி - சயின்ஸ் ஃபோகஸ்