இடுகைகள்

2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பசுமையின் காவலன்

பசுமையின் காவலன் பெங்களூரைச்சேர்ந்த சுற்றுச்சூழலியலாளர் ஒருவர் மாநகரங்களில் உள்ள மரங்களைப் பாதுகாப்பது, விழிப்புணர்வு ஏற்படுத்துவது காட்டுயிர் குறித்த தகவல் தெரிவிப்பது குறித்த தனித்துவமான திட்டங்களோடு இயங்கி வருகிறார்.                       ஆங்கிலத்தில்: மீரா பரத்வாஜ்                       தமிழில்: வின்சென்ட் காபோ     பெங்களூரைச்சேர்ந்த விஜய் நிஷாந்த் பெங்களூருவில் உள்ள இயற்கை வளம் செறிந்த பகுதிகளை வேகமான நகரமயமாதல் மற்றும் வளர்ச்சி எனும் பெயரில் அழியாமல் காப்பதற்கான தனித்துவமான திட்டங்களை தீவிரமாக செயல்படுத்தி வருகிறார். விருக்சா எனும் இத்திட்டத்தில் இவரோடு நான்கு உறுப்பினர்கள் குழுவாக இணைந்து செயல்பட்டு இதனை சாத்தியப்படுத்தி வருகின்றனர்.       ‘‘தாவரம் தொடர்பான தகவல்களை எழுத்து, படம் மற்றும் துல்லியமான தகவல்கள் அடிப்படையில் அவற்றினை தயாரித்து கொள்கிறோம். எங்களது மரநில அமைவு முறையினை சோதித்த டெல்லி, அகமதாபாத், ப்ரான்ஸ் நாட்டைச் சேர்ந்த உயரதிகாரிகள் தங்களது நகரங்களில் இத்திட்டத்தை செயல்படுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளனர் ’’ என்று உற்சாகமாய் பேசும் விஜய் நிஷாந்த்

கௌரவமிக்க ஒரு இந்தியத்தயாரிப்பு

            கௌர வமிக்க ஒரு இந்தியத்தயாரிப்பு                       ஆங்கிலத்தில்: அனுஜ்குமார்                           தமிழில்: வின்சென்ட் காபோ அமித்ராய் இயக்கியுள்ள ‘ஐ பேட் ’ திரைப்படம் திரைவிழாக்களில் இந்தியப்பெண்களின் குறிப்பிடத்தக்க அவசியமான தேவை குறித்து பேசியதில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.      தான் வாழும் உல்கஸ் நகரில் தயாரிக்கப்பட்ட ஜீன்ஸ் பேண்ட் மற்றும் சட்டையில் இருக்கும் அமித்ராயை நாம் எளிதில் புறக்கணித்து கடந்துபோய்விட முடியும்தான். ஆனால் அவர் இயக்கியுள்ள படங்களை அப்படி கடந்துவிட முடியாதபடி, திரையிலிருந்து கண்களை எடுக்க முடியாது தனித்துவ திரைமொழியால் வசீகரிக்கிறார் அமித் ராய். 2010 இல் ரோட் டூ சங்கம் திரைப்படம் இதற்கு உத்தரவாதம் தருவது போல் சாதாரண வாழ்வில் அசாதாரண கதாபாத்திரங்களை நடமாடச்செய்து காட்டியிருப்பார் அமித் ராய்.      மகாத்மா காந்தியின் சாம்பல் திரிவேணி ஆற்றில் கரைக்க எடுத்துச்செல்லப்படும் கார் ஒன்றினை பழுது பார்க்கும் பொறுப்பு ஹஸ்மதுல்லா எனும் மெக்கானிக்கிடம் ஒப்படைக்கப்படுகிறது. அதன் தொடர்ச்சியான சம்பவங்கள்தான் கதையாக அமைக்கப்பட்டிருக்க
படம்
நாம் தேர்ந்தெடுத்த பிரதமரிடம் நான் ஏன் பயப்படவேண்டும்?                                                                                             -பாபா ராம்தேவ்                                                             ஆங்கிலத்தில்: பிரக்யா சிங்                                                                         தமிழில்: அன்பரசு சண்முகம் பாபா ராம்தேவ் இந்தியாவிற்கான தனித்துவ யோகி என்பதில் சந்தேகமே இல்லை. பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்தின் தலைமையகத்தில்  மேரே அச்சே தின் சல் ரஹே ஹைன் என உரக்க கூறுகிறார். இதர வணிக சந்நியாசிகளை விட யோகாவினை பெருமளவு புகழ்பெறச்செய்த ராம்தேவ், எப்எம்சிஜி நிறுவனத்தின் வளர்ச்சி, அரசியல் திட்டங்கள், மற்றும் சகிப்புத்தன்மை குறித்து நம்மிடையே உரையாடியதன் சுருக்கம். உடனடி நூடுல்ஸ் வகை ஒன்றை அறிமுகம் செய்திருக்கிறீர்கள். ஆனால் அது உடனடியாக சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறதே?                 நூடுல்ஸ் விற்க எங்களிடம் முறையான உரிமம் உள்ளது. அதனை எங்களுக்கு உருவாக்கித் தருபவர்களும் தயாரிப்பதற்கான உரிமம் பெற்றுள்ளனர் எனும்போது ச
அரசுக்கு காங்கிரசின் உதவி தேவை; அது எங்களை புறக்கணித்துவிட முடியாது!                                            கே.வி. தாமஸ்                                 ஆங்கிலத்தில்: மனீஷ் ஆனந்த்                                 தமிழில்: அன்பரசு சண்முகம் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் பொதுக்கணக்குகள் கமிட்டி தலைவராகவும், மத்திய விவசாயம், நுகர்வோர் உரிமைகள், உணவு மற்றும் பொது வழங்குதல் துறை அமைச்சராக இருந்த கே.வி. தாமஸ் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் மற்றும் ஜி.எஸ்.டி. மசோதா குறித்து நம்மிடையே  உரையாடுகிறார். நாடாளுமன்ற குளிர்காலக்கூட்டத்தொடர் என்ன முறையில் எந்த விஷயங்களை விவாதிக்கும் என்று கருதுகிறீர்கள்?      பெரும்பான்மை பலத்துடன் மோடி அரசு ஆட்சிக்கு 16 மாதங்கள் ஆகிவிட்டன. பாரதீய ஜனதா கட்சி உருவாக்கிய கவர்ச்சியில் அது ஐந்து ஆண்டுகளையும் தாண்டி ஆட்சிசெய்யும் என்று பலரையும் நம்ப வைத்தது. ஆனால் இன்றோ மிக குறைவான காலத்திலேயே கட்சியின் முழு முதல் சர்வாதிகாரியாக பிரதமர் மோடி உருவாகிவிட்டார்.      நமது பாராளுமன்ற ஜனநாயக அரசில் பிரதமரும் ஒரு பகுதியும், சமமும் ஆனவர்தான்.