இடுகைகள்

கருப்பு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சாதி, மதம், இனம், நிற ரீதியான வேறுபாடுகள் எப்படி குழந்தைகள் மனதில் உருவாக்கப்படுகின்றன? - கென்னத் கிளார்க், மாமியா

படம்
  கென்னத் கிளார்க்  அமெரிக்க உளவியல் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ஆப்பிரிக்க அமெரிக்கர். பனாமாவில் பிறந்தவர் பின்னாளில், நியூயார்க்கின் ஹார்லேமிற்கு நகர்ந்தார். ஹோவர்ட் பல்கலைக்கழகத்தில் உளவியல் முதுகலைப் பட்டம் பெற்றார். படிக்கும்போது தனது வாழ்க்கைத்துணையை அடையாளம் கண்டு, அவருடன் இணைந்து ஆராய்ச்சி செய்தார். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் முதன்முதலாக முனைவர் பட்டம் பெற்ற ஆப்பிரிக்க அமெரிக்க தம்பதியினர் இவர்கள்தான். ஹார்லேமில் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் மேம்பாட்டிற்கான மையங்களை தொடங்கி நடத்தினர்.  கென்னத் கிளார்க், நியூயார்க்கில் உள்ள சிட்டி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்தார்.  முக்கிய படைப்புகள் 1947 ரேஷியல் ஐடென்டிஃபிகேஷன் அண்ட் பிரிஃபெரன்ஸ் இன் நீக்ரோ சில்ட்ரன் 1955 ப்ரீஜூடிஸ் அண்ட் யுவர் சைல்ட் 1965 டார்க் கெட்டோ 1974 பாதோஸ் ஆஃப் பவர் சமூகத்தில் நிலவும் பாகுபாடு என்பது, குறிப்பிட்ட இனக்குழுவைச் சேர்ந்த மக்களை தாழ்ந்தவர்கள் என கூறுவது என கென்னத் கிளார்க் கூறினார். சாதி, மதம், இனம் சார்ந்த பாகுபாடுகளை ஆசிரியர், பெற்றோர், கல்வி நிறுவனங்கள் நேரடியாக ஊக்குவிப்பதி

இணைய உலகை ஆளும் கருப்பு உலக ராஜாக்கள்! எதிர்கொள்வது எப்படி?

படம்
        பிக்சாபே   கருப்பு உலக ராஜாக்கள் ! இன்று நம்முடைய தினசரி நடவடிக்கைகள் பலவும் இணையம் சார்ந்ததாக , ஸ்மார்ட்போனிலேயே செய்துகொள்ள முடிவதாக மாறிவிட்டன . அலுவலகப் பணிகளை வீட்டிலிருந்தே இணையம் மூலம் செய்யமுடிகிறது . பல்வேறு கட்டணங்களை ஸ்மார்ட்போனிலிலுள்ள செயலிகள் மூலம் கட்ட முடிகிறது . அதேசமயம் , இதில்தான் பல்வேறு தில்லுமுல்லும் , மோசடிகளும் நடந்தேறுகின்றன . மார்ச் 11 அன்று , உலக சுகாதார நிறுவனம் கோவிட் -19 நோயை பெருந்தொற்றாக அறிவித்தது . இக்காலத்தில் மக்களுக்கு ஏராளமான ஸ்பாம் எனும் குப்பை மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டன . இவற்றை அவசர உதவி தேவை என்று திறந்தவர்களின் தகவல்கள் திருடப்பட்டன . கணினியில் இருந்த தகவல்கள் அழிந்துபோயின . இதுபோன்ற சூழலைத் தடுக்கவே சீனா 1 லட்சம் , பாகிஸ்தான் 10 ஆயிரம் , இந்தியா 1000 பேர் என தொழில்நுட்ப வல்லுநர்கள் பணிக்கு எடுத்து தகவல்களை பாதுகாத்து வருகின்றனர் . இவர்களின் செயல்பாட்டை (Hackers as a service) என்று அழைக்கின்றனர் . பொருளாதார மந்தநிலை உள்ளபோதும் , ஹேக்கர்ஸ்களால் பல்வேறு இணையம் சார்ந்த குற்றச்செயல்கள் அதிகரித்து வருகின்றன அண்மையில் சீன ஹேக்கர்கள் ,

மழையில் நனையும்போது ஒருவரின் முடி அடர் கருப்பாக தெரிவது ஏன்?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி நீரில் நனைந்தவுடன் முடி ஏன் கூடுதல் கறுப்பாக தெரிகிறது? நீரில் நனைந்த பெண்ணைப் பார்த்துவிட்டு ஏக காலமாக ரசித்துவிட்டு அறிவியல் கேள்வியை கேட்கிறீர்கள். ரைட் அறிவியல் அதிலும் உண்டுதான். இதில் நீர் செய்யும் மாயாஜாலம் ஏதுமில்லை. நீர் வெளிப்படையாக வறண்ட கூந்தலை ஈரமாக்கி ஒன்றுசேர்க்கிறது. அதில் ஒளி படும்போது நமக்கு முடியின் நிறம் கூடுதல் கருப்பாக இருப்பது போல தோன்றுகிறது. கருப்பு நிறம் என்றால் அது எதையும் பிரதிபலிப்பதில்லை என்பதை அறிவீர்கள்தானே? நன்றி: பிபிசி

லவ் இன்ஃபினிட்டி: ஸ்கூல்லயே நாங்க காசனோவா கேங்!

படம்
pinterest/alexa mathews லவ் இன்ஃபினிட்டி குமார் சண்முகம் தொகுப்பு: கோமாளிமேடை டீம் என்னடா இது நேரடியாக காலேஜ் லவ், துயரம்னு போயிட்டேன்னு நினைக்கறீங்களா? நான் ஆல்வேஸ் காதல், பிரியத்திற்காக ஏங்கிக் கிடந்தவன்தான். பொண்ணுங்க மேல ஆண் இன்ட்ரெஸ்ட் காட்டுறது இயல்பானதுதானே ப்ரோ!  ஆனா கிராமத்துல அது பெரிய பிரச்னையாயிரும். ஒண்ணு மண்ணா திரியறதுனால என்ன பண்றீங்க அப்படீங்கிறதுன்னு ஒடனே வீட்டுக்கு வாட்ஸ்அப் வேகத்துல போயிரும். சம்பே பையன்தானுங்க இப்படி பண்ணிப்போட்டானுங்க ன்னு ஒரு நியூஸ் பரவுச்சுன்னு வைங்க. ஆல்ட் நியூஸ் செக்பண்ணிட்டு எங்கப்பா இருக்கமாட்டாரு. பராத்து கையி. ஒரே அப்பு. ரைட் செவுளு லெஃப்ட்ல ஒதுங்கிரும்.   எங்க ஸ்கூல்ல நாங்க படிக்கும்போதே செம டீம். அதாவது ஒரு கெத்தா சுத்துற கேங்குன்னு வெச்சுக்கோங்களேன். எங்களுக்கு அப்புறம் வந்த செட்டு பசங்க எல்லாம் தம்மாத்துண்டா இருந்தாங்க சைசுல மட்டும் இல்ல. தில்லா சைட் அடிக்கிறது, ஸ்கூல கட் அடிக்கிறதுன்னு எல்லாத்திலயும்தான். நான், பாலா, வித்யா, ரங்கன், குமரேசன், ராஜூ, ராம மூர்த்தி, பாலாஜின்னு செம செட். ஜில்லெட் ஷேவிங் செட்டு மாதிரி அவ