சாதி, மதம், இனம், நிற ரீதியான வேறுபாடுகள் எப்படி குழந்தைகள் மனதில் உருவாக்கப்படுகின்றன? - கென்னத் கிளார்க், மாமியா

 









கென்னத் கிளார்க் 


அமெரிக்க உளவியல் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ஆப்பிரிக்க அமெரிக்கர். பனாமாவில் பிறந்தவர் பின்னாளில், நியூயார்க்கின் ஹார்லேமிற்கு நகர்ந்தார். ஹோவர்ட் பல்கலைக்கழகத்தில் உளவியல் முதுகலைப் பட்டம் பெற்றார். படிக்கும்போது தனது வாழ்க்கைத்துணையை அடையாளம் கண்டு, அவருடன் இணைந்து ஆராய்ச்சி செய்தார். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் முதன்முதலாக முனைவர் பட்டம் பெற்ற ஆப்பிரிக்க அமெரிக்க தம்பதியினர் இவர்கள்தான். ஹார்லேமில் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் மேம்பாட்டிற்கான மையங்களை தொடங்கி நடத்தினர். 

கென்னத் கிளார்க், நியூயார்க்கில் உள்ள சிட்டி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்தார். 


முக்கிய படைப்புகள்


1947 ரேஷியல் ஐடென்டிஃபிகேஷன் அண்ட் பிரிஃபெரன்ஸ் இன் நீக்ரோ சில்ட்ரன்

1955 ப்ரீஜூடிஸ் அண்ட் யுவர் சைல்ட்

1965 டார்க் கெட்டோ

1974 பாதோஸ் ஆஃப் பவர்


சமூகத்தில் நிலவும் பாகுபாடு என்பது, குறிப்பிட்ட இனக்குழுவைச் சேர்ந்த மக்களை தாழ்ந்தவர்கள் என கூறுவது என கென்னத் கிளார்க் கூறினார். சாதி, மதம், இனம் சார்ந்த பாகுபாடுகளை ஆசிரியர், பெற்றோர், கல்வி நிறுவனங்கள் நேரடியாக ஊக்குவிப்பதில்லை. சமூக அமைப்பிலுள்ள ஏற்றத்தாழ்வுகளை குழந்தைகள் வளரும்போது பார்த்து கற்றுக்கொள்கிறார்கள். சில வெள்ளையின பெற்றோர், கருப்பின குழந்தைகளோடு சேர்ந்து விளையாடக்கூடாது, அவர்கள் ஆபத்தானவர்கள் என போதிக்கிறார்கள். இதனால் சமூகத்தில் பாகுபாடு மெல்ல வேரூன்றுகிறது. 


இதைப்பற்றி கென்னத் கிளார்க், அவரது மனைவி மாமியா என இருவரும் சேர்ந்து ஆராய்ந்தனர். இதற்காக வெள்ளை, கருப்பு நிற பொம்மைகளைத் தேர்ந்தெடுத்தனர். அதை மூன்று தொடங்கி ஏழுவயது வரை உள்ள கருப்பின சிறுவர்களைப் பயன்படுத்தி செய்தனர். இவர்கள், வெள்ளை நிறம் கொண்ட பொம்மைகளையே அதிகம் தேர்ந்தெடுத்தனர். கருப்பு நிறம் ஆபத்தானது, மதிப்பு குறைவானது என சமூகத்தில் அன்றைக்கு இருந்த மனநிலையை, பாகுபாட்டை பிரதிபலிக்கும் விதமாக ஆய்வு முடிவுகள் வந்தன. கருப்பின குழந்தைகளின் தேர்வு, அவர்களைப் பற்றி அவர்களுக்கு இருந்த தன்னம்பிக்கை பற்றாக்குறை, நம்பிக்கையின்மை, தவறான கருத்துகளையும் வெளிப்படுத்தியது. 


கென்னத் தம்பதியினர், குழந்தைகளிடம் எதற்காக வெள்ளை நிற பொம்மையை தேர்ந்தெடுத்தீர்கள் என்று கேள்வி கேட்டு அவர்களின் கருத்தை உறுதி செய்தனர். குழ்ந்தைகள், பொம்மை மோசமாக இருந்தாலும் கூட வெள்ளை நிறத்திற்காக அதை விரும்பினர். ஆப்பிரிக்க சமூகமே தன் மீது, தனது இனம் சார்ந்த தாழ்ந்த, கழிவிரக்க உணர்ச்சிகளைக் கொண்டிருந்தது. பெற்றோர், ஆசிரியர், நண்பர்கள், திரைப்படம், காமிக்ஸ், டிவி சேனல்கள் ஆகியவை நிறம் சார்ந்த கருத்துகளை உருவாக்கிக்கொள்ள உதவின. 1954ஆம் ஆண்டு ப்ரௌன், டோபேகா பள்ளி வாரியம் ஆகியோருக்கு இடையிலான வழக்கில் கென்னத் பிளாக் தனது ஆய்வு முடிவை முன்வைத்து பேசினார். அரசு பள்ளிகளில் ,நிறம் சார்ந்த பாகுபாடு கூடாது என்றார். இவரின் ஆய்வு அமெரிக்காவில் குடியுரிமை இயக்கங்கள் தோன்றவும், போராட்டங்களை செய்யவும் உதவியது. 

Kenneth Bancroft Clark (July 24, 1914 – May 1, 2005) and Mamie Phipps Clark (April 18, 1917 – August 11, 1983) were American psychologists who as a married team conducted research among children and were active in the Civil Rights Movement. They founded the Northside Center for Child ... Wikipedia

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்