4டி பிரின்டிங்கில் என்னவெல்லாம் சாத்தியமாகும்?

 












நல்ல செய்தி 


கண்டுபிடிப்புகள்


2021 ஆண்டு முழுக்க நாளிதழ்களில் காட்டுத்தீ பற்றிய செய்திகளைப் பார்த்திருப்பீர்கள். டிவி, சமூக வலைத்தளங்களிலும் செய்திகள் பகிரப்பட்டன. அமெரிக்க அரசு, காட்டுத்தீயை கட்டுப்படுத்தவென 4 பில்லியன் டாலர்களை ஒதுக்கியது. காட்டுத்தீயை முன்னதாக கண்டுபிடித்து கட்டுப்படுத்தினால்தான் இழப்பை கட்டுப்படுத்த முடியும். அதுதான் சரியான தீர்வு. ஜெர்மனி நாட்டின் பெர்லின் நகரைச் சேர்ந்த டிரையாட் என்ற ஸ்டார்ட்அப் நிறுவனம், காட்டுத்தீயை கட்டுப்படுத்துவதற்கான தீர்வுகளோடு வந்துள்ளது. 


இந்த நிறுவனத்தின் சென்சார்கள், காற்றில் உள்ள காட்டுத்தீ பரவலால் உருவாகும் வேதிப்பொருட்களை அடையாளம் காண்கிறது. உடனே வயர்லெஸ் முறையில் அதிகாரிகளுக்கு தகவல்களை அனுப்புகிறது. அண்மையில் செய்த சோதனையில் பதினைந்து நிமிடங்களில் சமிக்ஞைகளை அனுப்பி நம்பிக்கை அளித்துள்ளது. அமெரிக்காவில் இந்த புதிய சென்சார்களை வாங்கிப் பயன்படுத்த உள்ளனர். 2030ஆம் ஆண்டுக்குள் டிரையாட் தனது பேரளவிலான சென்சார்களை மரத்தில் பதிக்க திட்டமிட்டுள்ளது. 

2


முதுகெலும்பில் அடிபட்டவர்கள் திரும்பி இயல்பாக நடப்பது கடினம். பெரும்பாலும் படுக்கையில் அல்லது சக்கர நாற்காலியில் வாழ்க்கை கழியும். இதை தவிர்ப்பது கடினம். உடலின் அடிப்படை இயக்கத்திற்கு முதுகெலும்பு முக்கியமானது. அதிலிருந்து சமிக்ஞைகள், மூளைக்கு செல்லவேண்டும். அப்படி செல்லாதபோது உடல் இயங்காது. ஸ்விட்சர்லாந்து நாட்டு ஆராய்ச்சியாளர்கள், மூளை - முதுகெலும்பு இடைமுகத்தை உருவாக்கியுள்ளனர். இதன்மூலம், மூளை அனுப்பும் சமிக்ஞைகளை ஒருவர் எளிதாக அறியலாம். அவர் காயம்பட்டிருந்தாலும் கூட ஓரளவுக்கு பயன் அளிக்க கூடிய முறை. ஆனால் இம்முறை பரிசோதனை நிலையில்தான் உள்ளது. 


நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்தவரான நோயாளி, பனிரெண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சைக்கிள் ஓட்டிச்சென்று விபத்தில் சிக்கினார். அதன் விளைவாக, உடல் செயலிழந்து போனது. சக்கர நாற்காலியில்தான் வாழ்கிறார். அவருக்கு புதிய ஆராய்ச்சியின் பரிசோதனை விளைவாக, மெல்ல நடக்க பழகி வருகிறார். 

3

வீட்டு பயன்பாட்டுக்கான பொருட்களை தயாரிக்கும் ஐகியா நிறுவனத்தைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்த நிறுவனம் 4டி பிரின்டிங் முறையில் தட்டையான பலகையை தயாரித்து வருகிறது. இதன் மீது குறிப்பிட்ட அளவு வெப்பத்தை செலுத்தினால் அதை நாற்காலியாக பயன்படுத்த முடியும் என செய்திகள் வலம்வருகின்றன. 3டி பிரின்டிங் முறையைக் கடந்து  4டி பிரின்டிங் முறையால் நீர், வெப்பம், ஒளி ஆகியவற்றின் மூலம் சில மாற்றங்களை பொருட்களில் உருவாக்க முடியும் என்பது நல்ல விஷயம்தான். 


குறிப்பாக 4டி பிரின்டிங் முறையில் ஆடைகளை, படுக்கைகளை தயாரிக்க முயற்சி நடைபெறுகிறது. இந்த படுக்கைகளை எளிதாக நீட்ட, குறுக்க, மடிக்க, வளைக்க முடியும் என்பது முக்கியமான அம்சம். நிறத்தைக் கூட மாற்றிக்கொள்ளலாமாம். அமெரிக்க ராணுவம், இந்த வகையில் சீருடைகளை பிறருக்கு எளிதாக தெரியாத வண்ணம் வடிவமைக்க திட்டமிட்டு இயங்கி வருகிறது. 

rd
கார்ட்டூன் ஸ்டாக்

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்