நிறுவனம் வளரும்போது மக்களின் நம்பிக்கையைப் பெறுவது முக்கியம்! - டிக்டாக் செயலி இயக்குநர் ஷூ ஸி சூ
டிக்டாக் இயக்குநர் ஷூ ஸி சூ
shou zi chew
டிக்டாக் செயலி, இசைத்துறையை சிதைக்கிறது என சில இசைக்கலைஞர்கள் புகார் சொல்கிறார்களே?
நான் அப்படி நினைக்கவில்லை. நீங்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துபவர் என்று முன்னர் கூறினீர்கள். ஆனால் அது உண்மையல்ல. எங்கள் தளத்தில் இருந்து அகற்றப்பட்ட சில பாடல்களை உங்களுக்கு காட்டுகிறேன். அதைப்பார்த்தால் உங்களுக்கு சில விஷயங்கள் புரியும்.
உங்களது செயலியின் வழியாக வெற்றி பெற்ற மனிதர்களையும் பார்த்திருக்கிறேன்.
டிக்டாக்கில் வீடியோக்களை உருவாக்குவதற்கான செலவு குறைவு. 15 நொடிகள் என பாடல்களை சுருக்குவதன் வழியாக நீங்கள் ஏராளமான புதிய பாடல்களைத் தேடி கேட்க முடியும். இப்படி செய்வது மக்களின் கவனத்தை நூறு சதவீதம் மடைமாற்றுகிறது என்று கூறமுடியாது. டிக்டாக்கில் வெற்றி பெற்ற பாடல்கள் பில்போர்ட் பட்டியலிலும் கூட வெற்றி பெற்றவையாக உள்ளன. இப்படி சொல்வதற்கு நிறைய எடுத்துக்காட்டுகள் உள்ளன. மக்கள் எதிர்பார்ப்பதற்கு ஏற்ப கிரியேட்டிவிட்டியாக செயல்படவேண்டியுள்ளது.
டிக்டாக்கின் அல்காரிதத்திற்கு ஏற்ப இசைக்கலைஞர்கள் தங்களை மாற்றிக்கொள்ளவேண்டும் என்று கூறுகிறீர்களா?
நிறையப்பேர் தங்களை மாற்றிக்கொண்டுவிட்டார்கள். இன்று, கார்டி பி, பாடல்களை பாடவிருக்கிறார். அவர் தன்னை நிறைய மாற்றிக்கொண்டுவிட்டார். டிக்டாக்கில் நிறைய பாடல்களை பாடியுள்ளார். வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறார். இசைக்கலைஞரான சார்லி புத், தான் எப்படி இசையை உருவாக்குகிறேன் என்று வெளிப்படையாக காட்சிபடுத்தவிருக்கிறார். திறமை மிகுந்த இசைக்கலைஞராக அவரைப் பார்க்க ஆச்சரியமாக உள்ளது.
இது ஆச்சரியமாக உள்ளது.
ரசிகர்கள், இசையை எப்படி கலைஞர்கள் உருவாக்குகிறார்கள் என்பதைப் பார்க்க ஆவலாக இருக்கிறார்கள். இசையை உருவாக்கும் விதத்தை, கிரியேட்டிவிட்டியாக பார்க்க நினைக்கிறார்கள். டிக்டாக்கில் உள்ள வீடியோக்கள் இந்த முறையில்தான் இருக்கும். பாலீஷ் செய்து சுத்திகரிப்பு செய்து ஒரு வீடியோவை செய்தால், அது இயல்பாக இருக்காது. மக்கள் இப்படித்தான் வீடியோக்களைப் பார்க்கிறார்கள்.
டிக்டாக் இசைக்கலைஞர்களுக்கு, சிறிய வீடியோக்களை செய்வதற்கு மறைமுகமாக அழுத்தம் கொடுக்கிறதா?
நீங்கள் கிளாசிக் பாடல்களைப் பற்றி பேசுகிறீர்கள். அப்படி எடுத்துக்கொண்டால், ட்ரீம்ஸ் என்ற பாடல் கூட டிக் டாக்கில் வெளியாகி, மீண்டும் மக்களிடையே பிரபலமானது.
அது கூட தற்செயலான முறையில்தான். அதை நீங்கள் முன்னரே கணிக்க முடியாது அல்லவா?
அது ஒரு உணர்வுநிலைதான். அந்த நேரத்திற்கான உணர்வை பாடல் படம்பிடிக்கிறது. நிறைய விஷயங்களை செயலியில் நீங்களாகவே உருவாக்கிவிட முடியாது. அதுதான் இயற்கை. நாங்கள் உருவாக்கியிருப்பது ஒரு சாளரம், பாலம் அல்லது பரப்பு. மக்கள் இணைவதற்கான இடம். இதில் நடைபெறும் விஷயங்கள் இயற்கையானவை. புக்டாக்கில் மக்கள் நூல்களைப் பற்றி பகிர்ந்து வருகிறார்கள். அது 200 பில்லியன் பார்வைகளைக் கடந்து சென்றுவிட்டது. அறிவியல் தொடர்பாக மக்கள் வீடியோக்களில் பேசுகிறார்கள். பகிர்கிறார்கள். டிக்டாக் பன்மைத்தன்மை கொண்ட செயலி. நாங்கள் சாதிக்க வேண்டியதாக நினைத்த லட்சியமும் அதுதான். உலகம் முழுக்க ஏராளமான திறமைசாலிகள் இருக்கிறார்கள். அவர்களின் சிந்தனைகள் போட்டிபோடும் இடமாக டிக்டாக்கை உருவாக்க நினைத்தோம்.
இசைக்கலைஞர்களுக்கு உதவும் விதமான பொருட்களை உதவிகளை டிக்டாக் வழங்குகிறதா?
இது நல்ல கேள்வி. இசைக்கலைஞர்கள், அவர்களின் ரசிகர்களோடு இணைந்திருக்கும்படியாக பல்வேறு பொருட்களை வழங்குவதை பற்றி சிந்தித்துக்கொண்டு இருக்கிறோம். அதற்காகவே டிக்டாக் இசைவிழாக்களை நடத்த தொடங்கியிருக்கிறது. இந்த நிகழ்ச்சி டிக்டாக் செயலியில் நேரலையாக ஒளிபரப்பப்படுகிறது. இதனை மக்கள் எளிதாக அணுக முடியும்.
டிக்டாக் புகழ்வெளிச்சம் பெறுவதற்கான காரணம் என்ன?
நாங்கள் இந்த தொழிலில் இளமையான புதிய நிறுவனமாக இருப்பதுதான் காரணம் என நினைக்கிறேன். நீங்கள் வளரும்போது மக்களின் நம்பிக்கையை பெறுவது முக்கியம். ஒரு நிறுவனம் வளர்ந்து வரும்போது அதை அதன் பயனர்கள், பயனர் அல்லாதவர்கள் என அனைவருமே கவனிப்பார்கள். அவர்களின் நம்பிக்கையை வெல்வது முக்கியம். இசைவிழாக்களை நடத்துவதன் வழியாக நாங்கள் எங்களைப் பற்றி மக்களுக்கு புரிய வைக்க முயல்கிறோம்.
டிக்டாக் அல்காரிதத்தை ஏமாற்றி பதிவிடும் மக்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
எங்கள் செயலியைப் பயன்படுத்தும் மக்களின் பாதுகாப்பை விதிகளுக்கு உட்பட்டு நெறிமுறைப்படுத்த முயன்று வருகிறோம். செயலியின் விதிமுறைகளுக்கு உட்பட்டு மக்கள் தங்கள் கருத்துகளை சுதந்திரமாக வெளிப்படுத்தலாம். அதற்கு எந்த தடையுமில்லை. மக்களின் நம்பிக்கையும் முக்கியம் கூடவே, அவர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தவேண்டிய நிலையில் நாங்கள் இருக்கிறோம். அதேவகையில், பதிவுகள் விதிகளை மீறாத வகையில் இருப்பதையும் உறுதிப்படுத்திவருகிறோம்.
ஒரு நிமிடத்திற்கு அதிகமாக நீளும் வீடியோக்களுக்கு டிக்டாக் செயலில் பணம் கொடுக்கத் தொடங்கியுள்ளது. நொடிகளில் வீடியோக்களை உருவாக்கி பகிர்ந்த செயலி, தனது விதிகளை மாற்றிக்கொண்டுவிட்டதா?
கடந்த ஐந்து, ஆறு ஆண்டுகளில் நிறைய மக்கள் வீடியோக்களை உருவாக்கி வருகிறார்கள். அது செயலியில் அகற்றப்படாது. புதிய மக்கள் செயலியில் சேரும்போது, புதிய விஷயங்களுக்கான தேவை அதிகரிக்கிறது. எனவே, சற்று நீளமான வீடியோக்களை உருவாக்கி வருகிறோம். இதன் அர்த்தம், ஏற்கெனவே உள்ள வீடியோக்களை அகற்றப்போகிறோம் என்று அர்த்தமல்ல.
நீளமான வீடியோக்களுக்கு முதலீடு தேவைப்படுகிறது. நாங்கள் இந்த பிரிவில் சிறிய அளவில் பங்களிப்பு செய்திருக்கிறோம். இங்குள்ளவர்கள் அனைவருமே பணம் சம்பாதிக்க வரவில்லை என்பதே தெளிவாக கூறிவிடுகிறேன். நாங்கள் சில விஷயங்களை உருவாக்கி மக்கள் பயன்படுத்த தரவிருக்கிறோம். லைவ் ஸ்ட்ரீமிங் முறையை உருவாக்கியது கூட இந்த விதமாகத்தான்.
டிக்டாக் செயலில் உள்ள பயனர்களின் நடனமாடும் வீடியோக்களை அலிபாபா நிறுவன ஆய்வாளர்கள் எடுத்து அதை வைத்து எஞ்சின் ஒன்றை உருவாக்கினார்களே அதைப் பற்றி அறிந்திருக்கிறீர்களா?
இல்லையே
அதாவது, அலிபாபா நிறுவன ஆராய்ச்சியாளர்கள் உங்கள் செயலியில் உள்ள நடனமாடுபவர்களின் வீடியோக்களை எடுத்து அதிலுள்ள தகவல்களைப் பயன்படுத்தி எஞ்சின் ஒன்றை உருவாக்கினர். அதை வைத்து ஒன்றை எளிதாக அனிமேஷன் செய்யமுடியும். அப்படியென்றால், வெளியில் உள்ள ஒருவர் உங்கள் செயலியில் இருந்து பிறரின் தகவல்களை எடுத்துக்கொள்ள முடியும்தானே?
அது பொதுவான தகவல்களாக இருந்தால், சாத்தியம்தான்.
உங்கள் செயலில் பங்கேற்பவர்கள் அவர்களைப் பற்றிய தகவல்களை எடுத்து பிறர் தகவல்கள் சேகரிப்புக்கு பயன்படுத்துவதை ஏற்பார்களா?
பொதுத் தகவல்களை பிறர் எடுத்து தங்கள் பயிற்சிக்கு பயன்படுத்துவது பற்றி கூறுகிறீர்கள். இது கொஞ்சம் சிக்கலான பிரச்னைதான். நான் இது பற்றி நிறைய கவனம் செலுத்தவேண்டும். இதுபற்றி நிறைய விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்த விவகாரம் தொடர்ச்சியாக பேசப்பட்டு வருவதால், நான் இன்னும் கவனித்து ஆழமாக புரிந்துகொண்டு பேச விரும்புகிறேன்.
மக்களின் தகவல்களை பிறர் எடுத்து பயன்படுத்துவது தவிர்க்க ஏதேனும் பாதுகாப்பு அம்சங்களை வைத்திருக்கிறீர்களா?
நான் இதை இன்னும் கவனிக்க விரும்புகிறேன். மக்கள் தங்கள் வீடியோக்களை பப்ளிக் டொமைனில் பதிவு செய்து வெளியிட்டால் பிறர் எடுத்து பயன்படுத்த முடியும். அதை பிறர் பார்க்க முடியும்.
டிக்டாக் செயலி பற்றி மக்கள் தவறாக புரிந்துகொள்கிறார்கள் என்று நீங்கள் நினைக்கும் விஷயம் ஏதாவது இருக்கிறதா?
டிக்டாக்கை பயன்படுத்துபவர்களுக்கும் அதை பயன்படுத்தாதவர்களுக்கும் நிறைய இடைவெளி உள்ளது. அதை அவர்கள் பேசும்போதே உணர்ந்திருக்கிறேன். டிக்டாக்கை பயன்படுத்துபவர்கள் அதை சிறப்பாக புரிந்துகொண்டிருக்கிறார்கள்.
வயர்ட் இதழ்
டெக்ஸ்டர் தாமஸ்
நேர்காணலின் சுருக்கமான வடிவம்.
கருத்துகள்
கருத்துரையிடுக