வறுமையில் உள்ள மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை வழங்கிய தொழிலதிபர்!










 ரமோன் ஆங்க்

அதிபர், இயக்குநர், மிகுல் கார்ப்

வயது 69 பிலிப்பைன்ஸ் 

Ramon ang

miguel corp


சுயம்பாக முளைத்தெழுந்த தொழிலதிபர். மணிலாவில் ஏழை குழந்தைகளுக்கு பள்ளி கட்டுவதற்காக ஒன்பது மில்லியன் டாலர்களை தானமாக வழங்கியுள்ளார். மதுபானம், உணவு, வங்கி, ஆற்றல், மின்சாரம், சாலை பராமரிப்பு நிறுவனங்களை ரமோன் நடத்தி வருகிறார். நாட்டின் வலிமையை, வளர்ச்சியை அதிகரிக்கும் வகையில் பிலிப்பைன்ஸ் மக்களின் கல்வி, திறன் அதிகரிக்கவேண்டும். வறுமை நிலையில் உள்ள சிறுவர்கள் மட்டுமல்ல வயது வந்தோருக்கும் கூட நல்ல பணி கிடைக்கவேண்டும். அல்லது அவர்கள் சுயமாக தொழில் தொடங்கி முன்னேற வேண்டும். அதற்கான திறன்களை வழங்க முயல்கிறோம் என்று தான் வளர்ந்த டோன்டோ மாவட்டத்தில் பள்ளி வளாகம் ஒன்றைத் தொடங்கி வைத்து பேசினார். 

ரமோன், சான் மிகுல் பவுண்டேஷன் என்ற அமைப்பைத் தொடங்கி அதன் வழியாக பள்ளிகளைக் கட்டுவது, கோவிட் 19 நிவாரண நிதி, நகர ஆறுகளை தூய்மைப்படுத்துவது, கல்விக்கான உதவித்தொகை, மருத்துவ உதவிகளை வழங்கி வருகிறது. ஆர்எஸ்ஏ பவுண்டேஷன் என்ற தன்னார்வ தொண்டு அமைப்பிற்கும் கல்வி சார்ந்து நிதி நல்கையை கொடுக்கிறது. 


-ஜேபி

லீ கா ஷிங்

மூத்த ஆலோசகர்

சிகே அசெட்ஸ் ஹோல்டிங்க்ஸ் அண்ட் சிகே ஹட்சிசன்ஸ் ஹோல்டிங்க்ஸ்

வயது 95 ஹாங்காங்க்

li ka shing

ck asset holding

ck hutchison holdings


ஹாங்காங்கில் லீயின் பட்டப்பெயர், சூப்பர்மேன். நிலம், மளிகைப் பொருட்கள் விற்பனை, துறைமுகம், தகவல்தொடர்புசேவை, அடிப்படை கட்டுமானம் என பல்வேறு துறைகளில் சாதித்த தொழிலதிபர். 1980ஆம் ஆண்டு தொடங்கி, கல்வி, உடல்நலம் தொடர்பான ஆராய்ச்சிகளுக்கு நிதியுதவியை வழங்கி வருகிறார். அண்மையில் ஹாங்காங் சீன பல்கலைக்கழகம், ஹாங்காங் பல்கலைக்கழகம் என இரண்டுக்கும் செயற்கை நுண்ணறிவு துறையில் ஆய்வு செய்ய நிதி நல்கியிருக்கிறார். இந்த பல்கலைக்கழகங்கள் மருத்துவ கல்லூரிகளை நடத்தி வருகின்றன. மருத்துவத்தில் செயற்கை நுண்ணறிவை எப்படி பயன்படுத்துவது என்று ஆய்வுகளை செய்யவிருக்கின்றன . லீ கா ஷிங் பவுண்டேஷன் மூலம் 7.7 மில்லியன் டாலர்களை வழங்கியுள்ளார். 


ஃபேஸ்புக், ஸ்பாட்டிஃபை, ஜூம் ஆகிய நிறுவனங்கள் உருவான காலத்திலேயே அதில் முதலீடு செய்து லாபம் பார்த்த தொழிலதிபர். செயற்கை நுண்ணறிவு மக்களை மேம்படுத்தும் என்பதை முன்னதாக கணித்துக் கூறிய தீர்க்கதரிசி. 


-ஜான் காங்க்


நந்தன் நீல்கேனி

துணை நிறுவனர், தலைவர், இன்ஃபோசிஸ்

வயது 68, இந்தியா


2017ஆம் ஆண்டு சொத்துக்களை தானமாக அளிக்கும் ஒப்பந்தத்தில் மனைவி சகிதமாக கையெழுத்திட்டவர். 1999ஆம் ஆண்டு முதலே கல்வி நிறுவனங்களுக்கு நிதி உதவிகளை செய்து வருகிறார். பெங்களூருவில் ஏக்ஸ்டெப் பவுண்டேஷன் எனும் கல்வி தொடர்பான தன்னார்வ அமைப்பை நடத்தி வருகிறார். இதற்கு 996 மில்லியன் தொகையை ஒதுக்கியுள்ளார். மெட்ராஸ் ஐஐடியில் உள்ள ஏஐ4பாரத் என்ற ஆய்வு அமைப்பிற்கு 664 மில்லியன் டாலர்களை வழங்கியுள்ளார். 

ஐஐடி பாம்பே அமைப்பிற்கு 38 மில்லியன் டாலர்களை தானமளித்துள்ளார். இளங்கலை படிப்பாக அங்கு மின்னணு பொறியியல் படித்தவர் நீல்கேனி. அந்த நன்றிக்கடனை தீர்க்கவே இப்படியான தான ஏற்பாடு. ஐஐடி பாம்பே நிறுவனம், அதற்கு பிரதியுபகாரமாக நிர்வாக அலுவலக கட்டிடத்திற்கு நீல்கேனி பெயரை சூட்டியுள்ளது. மேற்கு நாடுகளில் உள்ள சமூக பாதுகாப்பு எண்ணை, இந்தியாவில் ஆதார் என்ற பெயரில் உருவாக்கி சாத்தியப்படுத்திய தொழில்நுட்ப ஆளுமை. 

-ஏஆர்

thanks -forbes







கருத்துகள்