கருப்பினத்தவர்களுக்கு மருத்துவம், வேலைவாய்ப்பு கிடைக்க உதவும் மனிதர்கள்!
லியாண்ட்ரிஸ் லிபுர்ட்
leandris liburd
கருப்பினத்தவர்களுக்கு பாகுபாடு இல்லாமல் மருத்துவ வசதிகள் கிடைக்க சிடிசி அமைப்பில் ஹெல்த் ஈகுவிட்டி என்ற அமைப்பின் இயக்குநராக இருந்து செயல்பட்டு வருகிறார். ஏறத்தாழ முப்பது ஆண்டுகளாக பணியில் நிறம், இனம் கடந்து அனைத்து மக்களுக்கும் ஆரோக்கியம் சார்ந்த புரிதலை ஏற்படுத்த முனைந்திருக்கிறார்.
ஆரோக்கியம் என்றவுடன் உணவுமுறை, உடற்பயிற்சியுடன் பலரும் நின்றுவிடுவார்கள், லியாண்ட்ரிஸ், ஒருவர் மருத்துவரைச் சென்று பார்க்க போக்குவரத்து வசதி இருக்கிறதா என்பது வரையில் கவனிக்கிறார். அரசின் சக துறைகள், மக்களின் இனக்குழு அமைப்புகள் ஆகியவற்றுடன் இணைந்து பாகுபாடு இல்லாமல் மக்களுக்கு ஆரோக்கிய விழிப்புணர்வு செய்து வருகிறார். அலுவலக பணியில் உள்ளவருக்கு நோய் என்றால் கூட சம்பள வெட்டுடன் விடுமுறை கிடைக்கும். அதை லியாண்ட்ரிஸ் மாற்றி, சம்பளத்துடன் விடுப்பு என்பதை நடைமுறையாக்கியிருக்கிறார். நாம் நமக்குள் உள்ள வேறுபாடுகளை களைந்தால்தான் நோய்களை எளிதாக முன்னதாக கண்டறிந்து தடுக்கமுடியும் என்றார் லியாண்ட்ரிஸ்.
-அலைஸ் பார்க்
டைம் வார இதழ்
இமானி எல்லிஸ்
imani ellis
இமானி, கருப்பின, பழுப்பு நிறம் கொண்ட தொழில்நுட்ப பணியாளர்களுக்கான பணிவாய்ப்பு, வேலை செய்யும் பாதுகாப்பான இடங்களை அமைத்து தர முயன்று வருகிறார். 2022ஆம் ஆண்டு தனது வேலையைக் கைவிட்டு கிரியேட்டிவ் கலெக்ட்டிவ் என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். அடுத்த ஆண்டு கல்ச்சுரல் கான் என்ற விழாவைத் தொடங்கினார். இதில், ஒரு அங்கமான வேலைவாய்ப்பு விழாவில் பத்தாயிரம் பேர் பங்கேற்றனர். இந்தளவு மக்கள் ஆதரவு கொடுப்பார்கள் என்பதே அவரே எதிர்பார்க்கவில்லை.
இமானி தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து கருப்பினத்தவர்களுக்கு தொழில்நுட்ப வல்லுநர்களுடன் தொடர்பு ஏற்படுத்தித் தரும் கிரியேட்டிவ் கலெக்டிவ் என்ற அமைப்பை தொடங்கினார். அதை தனது அபார்ட்மென்ட் அறையில்தான் உருவாக்கினார். 2017ஆம் ஆண்டு, கல்ச்சுரல் கான் என்ற ஆண்டு விழாவைத் தொடங்கினார். இது கருப்பினத்தவர்களுக்கான கம்யூனிட்டி விழா. நாம் ஒரு அழகான பாதுகாப்பை உருவாக்க வேண்டிய தேவையிருக்கிறது. இங்கு நீங்கள் பயப்படாமல் கேள்விகளைக் கேட்கலாம். உங்களை அறிமுகமற்ற நண்பர்களுக்கு அறிமுகப்படுத்திக்கொள்ள முடியும் என்றார் எல்லிஸ்.
-மோய்சஸ் மென்டிஸ்
டைம் வார இதழ்
கருத்துகள்
கருத்துரையிடுக