ஆறாத ரணம் - ராமர் கோவில்

 







டெல்லியிலுள்ள மசூதி இடிக்கப்பட்ட காட்சி



ஆறாத புண்ணில் உப்பை பூசும் ராமர் கோவில் திறப்பு விழா


கடந்த ஜனவரி 22 ஆம் தேதி ராமர் கோவில் திறந்து வைக்கப்பட்டது. அயோத்தியில் இருந்த நூற்றாண்டு கால மசூதியை, 1992ஆம் ஆண்டு இந்துத்துவ கும்பல் தாக்கி இடித்தது. இதில் திட்டமிட்டு உருவாக்கிய கலவரம் காரணமாக 2 ஆயிரம் மக்கள் இறந்தனர். புதிதாக திறந்த கோவிலின் திறப்புவிழாவில், புதிய யுகம் பிறந்துவிட்டது என இந்திய பிரதமர் மோடி கூறினார். பிறர், இதை இந்து தேசியவாதம் என்றே கருதுகிறார்கள். 


அயோத்தியா நகரம் ராமர் பிறந்த இடமாக கருதப்படுகிறது. அங்குள்ள மசூதியை இடித்தபோது வலதுசாரி இந்துத்துவ கட்சியான பாஜக முன்னேறத் தொடங்கியது. இப்போது ஆட்சியில் உள்ளதால், அங்கு கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்தியாவின் மதச்சார்பற்ற இயல்பு மடைமாறி மதம் சார்பான நாடாக மாற்றப்பட்டுள்ளது பாஜகவின் வெற்றி என்று கூறலாம். காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது, முஸ்லீம் அகதிகளுக்கு குடியுரிமையை மறுத்தது, ராமர்கோவிலை கட்டியது ஆகிய அம்சங்கள், இந்தியாவில் வாழும் முஸ்லீம்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றுவதை நோக்கமாக கொண்டது. இதன் காரணமாக மோடி, இந்துத்துவ தேசிய தலைவராக மாறியுள்ளார். அதேநேரம் பாபர் மசூதியை இடித்துவிட்டு அங்கு கோவில் கட்டி திறந்ததை தேசிய கொண்டாட்டமாக ஆளும் பாஜக அரசு மாற்றியுள்ளது. இது, சிறுபான்மையினரான இஸ்லாமியர்களின் புண்ணில் உப்பைத் தடவுவது போல... இதுபோன்ற செயல்பாடு அவர்களை அச்சத்தில் தள்ளியுள்ளது என பத்திரிகையாளர் ராணா ஆயுப் கூறினார். எதிர்க்கட்சியான காங்கிரஸ், கோவில் கட்டி திறந்ததை அரசியல் செயல்பாடு என்று விமர்சித்தது. 

சிறுபான்மையினர்துறை அமைச்சரான இரானி, ராமர் கோவில் திறப்பு, இஸ்லாமியர்களை அச்சுறுத்தவில்லை. பன்மைத்துவத்தை மட்டுமல்ல பொறுமையைக் காட்டுவதாக அமைந்துள்ளது என்று கருத்து கூறினார். 


ராமர் கோவில் திறப்புவிழா, அதிகாரப்பூர்வமற்ற முறையில் மோடி மூன்றாவது முறையாக தேர்தலில் போட்டியிடுவதற்கானதாக மாறியது. கோவிலைக் கட்டி திறந்தது மோடியை ஆற்றலுள்ளவராக உலகிற்கு காட்டியுள்ளது. அவரின் தேர்தல் பிரசாரத்திற்கும் உதவும்விதமாக மாறியுள்ளது என வில்சன் சென்டரைச் சேர்ந்த வில்சன் குஜெல்மன் கூறினார். 

யாஸ்மின் செர்ஹான்

டைம் வார இதழ் 

மூலக்கட்டுரையை தழுவியது

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்