இடுகைகள்

கிருஷ்ணா லிம்ப் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

விலங்குகளுக்கு செயற்கைக் கால்களைக் கிடைக்கச் செய்யும் மருத்துவர்!

படம்
  மருத்துவர் தபேஷ் மாத்தூர் 2014ஆம் ஆண்டு மருத்துவர் தபேஷ் மாத்தூர், ஹிங்கோனியா பசு மறுவாழ்வு மையத்திற்கு பணி மாற்றம் செய்யப்பட்டார். இந்த பசு அமைவிடம் ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் உள்ளது. இங்கு அதிகளவு பசு இறப்பு நடந்ததால், அதனைக் குறைக்கவே மருத்துவர் அழைக்கப்பட்டார்.  பசுக்கள்,  ஏராளமான பிளாஸ்டிக் கழிவுகளை சாப்பிட்டிருந்தன. அதுதான் இறப்பிற்கான முக்கியமான காரணம்.  எனவே, அவற்றைக் காப்பாற்ற தினசரி ஏதேனும் ஒரு பசுவுக்கு அறுவை சிகிச்சை செய்து வந்தார் மருத்துவர் தபேஷ். இதனால் பசுக்களின் இறப்பு பெருமளவில் குறைந்தது. அத்தோடு பசுக்களின் பிரச்னை முடியவில்லை. விபத்துக்குள்ளாகி கால்கள் முடமான பசுக்களின் இறப்பு பற்றியும் புகார்கள் வந்தன.  விபத்துக்குள்ளாகி அகற்றப்பட்ட கால்களால் முடமாகிப் போன பசுக்களின் வாழ்நாள் குறைந்து வந்தது. அதனை சரிசெய்ய, செயற்கைக் கால்களை பொருத்த மருத்துவர் முடிவு செய்தார். எனவே, கிருஷ்ணா லிம்ப் என்ற பிராண்டின் பெயரில் இவரே கால்களை உற்பத்தி செய்யத் தொடங்கினார். இன்றுவரை 160 செயற்கைக்கால்களை உருவாக்கி பொருத்தியுள்ளார். இதனால் பசுக்களின் வாழ்நாளும் நீண்டுள்ளது.  செயற்கைக் கால்களை