இடுகைகள்

ஊக்கமூட்டி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இன்ஸ்டன்ட் காபி ரெடியாவது இப்படித்தான்!

படம்
pixabay காபி எங்களது பத்திரிகை அலுவலகம் உள்ள காம்ப்ளக்சை மணக்க வைப்பது சத்யா காபிக்கடைதான். இத்தனைக்கும் காபி தயாரித்து வழங்கும் கடை அல்ல. காபி பொடியை அரைத்து விற்கும் கடைதான். நூற்றுக்கணக்கு மேலான கடைகள் இருந்தாலும் அந்த கட்டடத்திற்கு அடையாளமாக அந்தக் காபிக்கடை மாறிவிட்டது.    கொஞ்சம் தள்ளி நடந்து வந்தால், மயிலாப்பூரில் டீக்கடைகளுக்கு செம போட்டியாக இருப்பது, லியோ காபி, கிரைண்ட் காபி, கோத்தாஸ் காபி கடைகள்தான். இதில் லியோ காபி, கிரைண்ட் காபி ஆகியவை காபி பொடியோடு காபியையும் தயாரித்து வழங்கத்தொடங்கிவிட்டனர்.  காபிகளில் இரண்டு வகை உண்டு. அராபிகா, ரோபஸ்டா. இதில் அராபிகா விலை அதிகம். மெதுவாக வளரும் காபி இனம். காஃபீன் அளவும் அதிகமாக உள்ளது.  காபிச்சொடி வளர்ந்து காபி கொட்டைகளை அறுவடை செய்வதற்கு ஐந்து ஆண்டுகள் தேவை. பச்சையாக இருக்கும் கொட்டைகளின் மேலோடு சிவப்பாக மாறியபின் அறுவடை தொடங்கும். சிவப்பாக உள்ள மேலோடு வெயிலில் காய வைத்து அகற்றப்படுகிறது. இதிலுள்ள பீன்ஸ் முதலில் பச்சையாகவே இருக்கும். பின் அதனை வறுத்து பக்குவப்படுத்தும்போது அதன் நிறம் கருப்பாக மாறுகிற

ஒரு கப் தேநீரில் என்ன இருக்கிறது என தெரியுமா?

படம்
  உலகம் முழுக்க பல கோடி மக்களால் பருகப்படும் பானம் தேநீர். பிரிட்டிஷார் காலத்தில் அதிகம் பயிரிடப்பட்ட பணப்பயிர், இன்றளவும் முக்கியமான ஏற்றுமதிப் பொருளாக உள்ளது. பொதுவாக மக்கள் டஸ்ட் டீயை குடித்து வந்தாலும், இதில் ஆறு வகைகள் உள்ளன. கருப்பு, மஞ்சள், பச்சை, வெள்ளை, ஊலாங், பு RCH  என ஆறு வகைகள் இன்று சந்தையில் உள்ளன. சூப்பர் மார்க்கெட்டுகளில் இவற்றை நீங்கள் வாங்கிக்கொள்ள முடியும். இல்லையெனில் அரசு கடைகளான டேட்டீ கிளைகளில் பல்வேறு வகை டீ வகைகள் கிடைக்கின்றன. காபியை விட டீயில் காஃபீன் அளவு அதிகம். ஆனால் தேயிலையை தூளாக மாற்றும் பல்வேறு படிநிலைகளில் காஃபீன் அளவு குறைந்துவிடுகிறது. ஒரு கப் டீயில் 50 மி.கி. காஃபீன் உள்ளது. அதேயளவு காபியில் 175 மி.கி. காஃபீன் உள்ளது. காரணம் தேயிலைக்கும், காபி கொட்டைகளுக்கும் உள்ள வேறுபாடுதான். இதனால்தான் டீயை விட்டுத்தர முடிந்தவர்கள் அதிகம் பேர் உள்ளனர். ஆனால் காபியை பலரும் விட்டுத்தர முடியாமல் அடிமையாக மாறக் காரணம் அதிலுள்ள காஃபீன்தான். இன்று டீயிலும் கூட பல்வேறு கலப்படங்கள் வந்துவிட்டன. டீ, காபி இயல்பாகவே உடலை ஊக்கமூட்டும் தன்மை கொண்டது.

மது அருந்தினால் உடலில் என்ன நடக்கிறது?

படம்
ஆல்கஹால் ஊக்கமூட்டியா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும். இதனைக் குடித்தவுடன் உடலில் நெகிழ்வுத்தன்மை ஏற்பட்டது போன்ற இலகுவான தன்மை ஏற்படும். காற்றில் பறப்பது போல. இதனால்தான் இலகுவான இந்நேரத்தில் பல்வேறு ரகசிய விஷயங்களை நண்பர்களிடம் கொட்டி விடுகின்றனர். ஆனால் அதேசமயம் இதனை குடித்தான் பேசினான் என்று ஒதுக்கிவிட முடியாது. குடித்தாலும் அம்மாவுக்கும், மனைவிக்கும் வேறுபாடு தெரியாமல் போவதில்லை என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். ஊக்கமூட்டியா அல்லது மூளைத்திறன் குறைப்பு மருந்தா காபி, டீ ஆகியவற்றை குடிக்கிறீர்கள். இவற்றின் அளவு அதிகமானால் என்னாகும்? சிம்பிள். தூக்கம் வராது. இரவில் டீ, காபி குடிப்பதை தொடர்ந்தால் இன்சோம்னியா எனும் தூக்க குறைவு பிரச்னை எழும். அதுவே ஆறுமணிக்கு ஆபீஸ் விட்டதும் மது அருந்துவதை வழக்கமாக்கினால் என்னாகும்? உங்களின் இதயத்துடிப்பு குறையும். மூளை ரிலாக்ஸ் ஆனது போல தோன்றும். ஆனால் உங்கள் உடலில் ஒட்டுமொத்த பணிகளையும் மது தடுத்து மாய உலகை உருவாக்குகிறது. டீ, காபி ஆகியவற்றிலுள்ள காஃபீன் உடலை ஊக்கமூட்டி, தூங்கி வழிந்துகொண்டிருந்தால் கூட உங்களுக்கு கூடுதலாக அரைமணிநேரம் ப