இடுகைகள்

அமலா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கார் விபத்தில் இறந்த அம்மாவை காப்பாற்ற கடந்தகாலத்திற்கு செல்லும் மகனின் கதை! ஒக்கே ஒக்க ஜீவிதம்

படம்
  ஒகே ஒக்க ஜீவிதம் தெலுங்கு சர்வானந்த், ரீது வர்மா, வெண்ணிலா கிஷோர், பிரியதர்ஷி இயக்கம் - ஶ்ரீகார்த்திக்   நிகழ்காலத்தை நாம் சந்திக்கும் கஷ்டங்களுக்கு காரணமான இறந்தகாலத்தை நான்கு நாட்களில் மாற்ற முடிந்தால்…. அதுதான் ஒக்கே ஒக்க ஜீவிதம் படத்தின் கதை. படம் அம்மா, மகன் பாசத்தை அடிப்படையாக கொண்டது. படத்தில் டைம் மெஷின் வருகிறது. பார்க்க சரவணபவன் ஹோட்டல் டிபன் கேரியல் போல உள்ளது. நாம் இங்கு பார்க்க வேண்டியது அதை வைத்து காலத்தில் பயணித்து சென்று என்ன செய்கிறார்கள் என்றுதான். நிலவை சுட்டிக்காட்டும்போது எனது விரலைப் பார்க்காதே நிலவைப் பார் என ஓஷோ சொல்லுவார் அல்லவா? 2019ஆம் ஆண்டிலிருந்து 1998ஆம் ஆண்டிற்கு கால எந்திரத்தில் பயணிக்கிறார்கள் மூன்று நண்பர்கள். அங்கு சென்று இறந்த காலத்தை மாற்ற முயல்கிறார்கள். இதற்கு நிகழ்காலத்தில் உள்ள பிரச்னைகளே காரணம். அவை என்னவென்று பார்க்கலாம். ஆதிக்கு இசைமேல் பைத்தியம். பாடல் பாடலாக வீட்டின் ஸ்டூடியோவில் பாடி கேசட்டாக அடுக்கி வைத்திருக்கலாம். அதெல்லாமே அவரது அம்மா காலத்திலிருந்து பாதுகாத்து வரும் சொத்து. அவரது அம்மாதான் இன்ட்ரோவெர்டான ஆதிக்கு ஒரு

தம்பி மனைவியின் அத்துமீறிய உறவால் தூக்குதண்டனைக்கு உள்ளாகும் அண்ணன் வாழ்க்கை! மௌனம் சம்மதம்

படம்
    மௌனம் சம்மதம்     மௌனம் சம்மதம் மது இளையராஜா தம்பி மனைவியை கொன்ற வழக்கில் தொழிலதிபர் ஜெய்சங்கர் மாட்டிக்கொள்கிறார். அவர் பேசுவதற்கு வாய்ப்புகளே வழங்கப்படாமல் தூக்குதண்டனை வழங்கப்படுகிறது. இதனை எப்படி உடைத்து, வழக்குரைஞர் மம்மூட்டி அவரை வெளியே கொண்டுவருகிறார் என்பதுதான் கதை. நிதானமாக நடைபெறும் படம். நடந்த விஷயங்களை தொழிலதிபரின் வீட்டில் வாழும் ஒவ்வொருவரும் அவரவர் பார்வையில் சொல்லுகிறார்கள். இதைத்தான் நாம் பார்க்கிறோம். இதன் வழியாக நாம் நினைப்பதும், வழக்கை எப்படி மம்மூட்டி தீர்க்கிறார் என்பதையும் குறைந்த பட்ச சண்டைகளுடன் சொல்லியிருக்கிறார் இயக்குநர். மம்மூட்டி, அமலா ஆகியோர் இடையிலான தொடக்க காட்சியே அசத்தலாக இருக்கிறது. பொதுவாக மோசமாக கண்ணில் தென்படும் ஒருவரை நல்லவராக காட்டுவது, அப்படி நினைப்பது கூட கடினம். அதனை இந்த கதாபாத்திரத்தில் செய்து காட்டியிருக்கிறார் இயக்குநர். பாடல்கள் அனைத்தும் கேட்கும் பார்க்கும் ரகமாக உள்ளன. திரில்லர் படத்தில் பாடல்கள் ஹிட் ஆவது அவசியமில்லை என்று நினைக்கிற காலம் இது. நிதானமான படத்தில் பல்வேறு கதாபாத்திரங்கள் மீது சந்தேகப்பட வாய்ப்பு உள்ளது. இதில் தம்பி சர