இடுகைகள்

லியோன் ஃபெஸ்டிங்கர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நேரம் தவறாமல் சாப்பிடுவது, லக்கி சீட்டில் உட்காருவது என பழக்கத்தை மாற்றிக்கொள்ளாத மனிதர்களின் உளவியல்!

படம்
  எங்கள் அலுவலகத்தில் ஹசார் என்ற ஓவியர் பணியாற்றி வந்தார். அவருக்கு வேலையில் பெரிதாக ஈடுபாடு ஏதும் கிடையாது. காலையில் பத்து மணிக்கு வருபவர், வந்தவுடனே சோற்றுக்கு யார் என்ன கொண்டு வந்தார்கள் என ஹர ஹர மகாதேவகி குரலில் விசாரிக்கத் தொடங்குவார். தான் எங்கே உட்காருவது, தனக்கு வேண்டும் விஷயங்கள் மீது தீவிர ஆர்வம் உண்டு. அதை யாரும் தடுக்க கூடாது என்று நினைப்பார். தான் வேலைக்கு வரும்போது அலுவலகத்தில் மின்விளக்கு எரிய வேண்டும் என்பதே அவரது சென்டிமெண்ட். ஆனால் அலுவலகமோ நீங்கள் வேலை செய்யும்போது மின் விளக்கை பயன்படுத்துங்கள். சீட்டில் இல்லாதபோது விளக்கை அணைத்து விடுங்கள் என மிரட்டல் விடுத்திருந்தது. அதை நான்  கடைபிடித்தபடியே இருந்தேன். ஒருமுறை காலையில் அப்படி வேலை செய்துகொண்டிருந்தபோது,தனது இருக்கைக்கு விளக்கு போடவில்லை என சண்டைக்கு வந்துவிட்டார் ஹஸார். அவருக்கு இருந்த சென்டிமென்ட் பற்றி எனக்கேதும் தெரியவில்லை.  அலுவலக விதியை விளக்கியபோதும், அதை அவர் துளியும் ஏற்கவில்லை. இவர் மட்டுமல்ல இதுபோல நிறைய முட்டாள்தனமான கொள்கைகளை நம்புகிற பைத்தியங்கள் உலகம் முழுக்க உண்டு. உலகம் தட்டையானது, குறிப்பிட்ட நேர