இடுகைகள்

நர்மதா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அணைகளை எதிர்த்துப் போராடும் இயற்கை போராளி மேதா பட்கர்!

படம்
    இயற்கை செயல்பாட்டாளர் மேதா பட்கர் மேதா பட்கரைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். இயற்கை சார்ந்த இதழ்களில் இவரைப் பற்றி அதிகம் வந்திருக்கும். நர்மதா நதியில் கட்டப்படும் அணைகளை தடுத்து போராட்டங்களை நடத்திய வகையில் உலகம் முழுக்க பிரபலமானார். நர்மதா பச்சா அந்தோலன் எனும் அமைப்பை கட்டமைத்து அணையால் ஏற்படும் பாதிப்பால் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என போராட்டம் நடத்தினார்.  இயற்கைப் போராளி மேதா பட்கர் சர்தார் சரோவர் எனும் அணையைக் கட்டக்கூடாது என 22 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய உறுதியான மனம் கொண்டவர் மேதா பட்கர். இந்த போராட்டங்கள் கூட 32 ஆண்டுகள் கள ஆய்வுகள், விவாதங்களுக்கு பிறகே நடைபெற்ற ஒன்று. டாடாவின் சமூக அறிவியல் கழகத்தில் சமூகப் பணி படிப்பில் எம்.ஏ படித்தவர் மேதா. மும்பையில் வாழும் குடிசைவாசிகளுக்கான வீடு கோருதல், ஆந்திராவில் கோவ்வாடா அணு உலை திட்டத்திற்கு எதிர்ப்பு, ஆக்கிரப்பு வீடுகளுக்கு எதிர்ப்பு, கூட்டுறவு சர்க்கரை ஆலை சங்கங்களில் அரசியல்வாதிகள் இருப்பதற்கு எதிர்ப்பு என மேதா பட்கர் ஏராளமான பிரச்னைகளுக்கு போராடியுள்ளார்.    சாதி, மதவாதம் மக்களுக்கு எதிரான புறக்கணிப்புகள

சர்ச்சைகளின் நாயகி அருந்ததி ராய்!

படம்
  எழுத்தாளர் அருந்ததி ராய் சூசன்னா அருந்ததி ராய் நவம்பர் 24ஆம் தேதி, 1961ஆம் ஆண்டு பிறந்தவர். பெண்ணியவாதியான மேரி ராய், கொல்கத்தாவின் தேயிலை தோட்ட மேலாளர் ரஜிப் ராய் ஆகியோருக்கு மகளாக பிறந்தார். இவருக்கு சகோதரர் ஒருவர் உண்டு. அவரது பெயர் லலித்குமார் கிறிஸ்டோபர் ராய்.  ஷில்லாங்கில் பிறந்தவர், கேரளா, தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களிலும் வளர்ந்தார். இவரது இரண்டாவது வயதிலேயே பெற்றோர் விவாகரத்து பெற்றுவிட்டனர். கட்டுமானம் வடிவமைப்பு படிப்பில் பட்டம் பெற்றுள்ளார் அருந்ததி ராய். 1988ஆம் ஆண்டு அன்னி கிவ்ஸ் இட் தோஸ் ஒன்ஸ் என்ற படத்திற்கு திரைக்கதை எழுதி தேசிய விருதை வென்றார். 1992ஆம் ஆண்டு எலக்ட்ரிக் மூன் என்ற படத்திற்கு திரைக்கதை எழுதினார். இதே ஆண்டில்தான் சிறிய விஷயங்களின் கடவுள் என்ற நூலை எழுத தொடங்கினார். 1996ஆம் ஆண்டில் நூல் பணியை முடித்தார். இந்த நாவலுக்கான பரிசாக மேன்புக்கரை 1997இல் வென்றார். இந்த நாவல்தான் உலகம் முழுக்க இவரை அறிய வைத்தது.  சிறிய விஷயங்களின் கடவுள் சுயசரிதைத் தன்மை கொண்ட நாவல் ஆகும். ரகேல், எஸ்தா என இரட்டையர்களின் வாழ்க்கையை அரசியல், ஜாதி பின்புலத்தில் வைத்து பேசுகிற கதை இத