அணைகளை எதிர்த்துப் போராடும் இயற்கை போராளி மேதா பட்கர்!
இயற்கை செயல்பாட்டாளர் மேதா பட்கர் |
மேதா பட்கரைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். இயற்கை சார்ந்த இதழ்களில் இவரைப் பற்றி அதிகம் வந்திருக்கும். நர்மதா நதியில் கட்டப்படும் அணைகளை தடுத்து போராட்டங்களை நடத்திய வகையில் உலகம் முழுக்க பிரபலமானார். நர்மதா பச்சா அந்தோலன் எனும் அமைப்பை கட்டமைத்து அணையால் ஏற்படும் பாதிப்பால் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என போராட்டம் நடத்தினார்.
இயற்கைப் போராளி மேதா பட்கர் |
சாதி, மதவாதம் மக்களுக்கு எதிரான புறக்கணிப்புகளை எதிர்த்து போராடியுள்ளார். மக்களின் வாழும் உரிமை, அரசியல் சட்டம் மக்களுக்கு வழங்கியுள்ள உரிமைகளை பாதுகாக்க சாலையில் இறங்கி போராட இவர் என்றுமே தயங்கியதில்லை.
மும்பையில் சுதந்திரப் போராட்ட வீரர் வசந்த் கனோல்கர் என்பவருக்கு 1954ஆம் ஆண்டு டிசம்பர் 1 அன்று பிறந்தார். இவரது அம்மா இந்து கனோல்கரும் பெண் உரிமைகளுக்காக போராடி பெண்மணிதான். எப்போதும் ஊக்கப்படுத்தும் பெற்றோர் அமைந்துவிட்டால் பிறகு எதைக் கண்டு பயப்படவேண்டும்? மேதா தைரியமான பெண்ணாக வளர்ந்தார். சமூநீதிக்கான அன்னை தெரசா விருது(2014), ரைட் லிவ்லிஹூட் விருது(1991) ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார்.
கருத்துகள்
கருத்துரையிடுக