2021ஆம் ஆண்டு நடைபெற்ற முதல்முறை விஷயங்கள்!

அமிதாப் பையா நம்பர் 1 இந்தி சினிமா நடிகரான அமிதாப் பச்சன், இந்தியாவில் தனது திரைப்படங்கள் தொடர்பான என்எஃப்டி டோக்கன் விற்பனையைத் தொடங்கினார். இவரைப் பின்பற்றி இன்னும் நிறைய நட்சத்திரங்கள் இந்த தொழிலில் இறங்கினர். எல்லாமே வியாபாரம்தான் ப்ரோ? வாட்ஸ்அப் தனது புதிய பிரைவசி கொள்கைகள் அறிமுகப்படுத்தியது. தனது தகவல்களை தாய் நிறுவனமான பேஸ்புக்குடன் பகிர்ந்துகொள்ள பயனர்கள் ஒத்துழைக்குமாறு அக்ரி, டிஸ் அக்ரி நிபந்தனைகள் இருந்தன. இதன் காரணமாக பலரும் பயந்துபோய் டெலிகிராம்,சிக்னல் என மாறிவிட்டு பிறகு மீண்டும் வாட்ஸ்அப்புக்கே வந்தனர். ஏன் இப்படி? வாட்ஸ் அப் அளவுக்கு மேற்சொன்ன ஆப்கள் சமர்த்து கிடையாது. நீதிமன்றத்தில் வாட்ஸ்அப்பும் நாங்கள் யாரையும் புதிய கொள்கைக்கு கட்டாயப்படுத்தவில்லை என சம்பிரதாயமாக பேசி பஞ்சாயத்தை முடிவுக்கு கொண்டு வந்துவிட்டது. ட்ரோன் தாக்குதல் ஜம்முவில் இரண்டு விமானப்படை தளங்களில் பாகிஸ்தான் ராணுவம் ட்ரோன்கள் மூலமாக தாக்குதலை நடத்தியது. இந்த வகையில் தாக்குதல் நடப்பது இதுவே முதல்முறை. முதல் மாற்றுப்பாலின மருத்துவர் மருத்துவர் அக்சா ஷேக் என்பவர் முதல் மாற்றுப்பாலின மருத்துவராக தடுப்பூசி மருத்துவ மையத்தை நடத்தி வருகிறார். நான்தான் இந்த வகையில் முதல் மருத்துவர், ஆனால் இதில் நான் கடைசியாக இருக்கவில்லை. மாற்றுப்பாலினத்தவர்கள் பலரும் பல்வேறு துறையில் பணியாற்ற வேண்டும் என்பதே எனது ஆசை என பேட்டி கொடுத்துள்ளார். நூறு சதவீதம் தடுப்பூசி! ஜம்மு காஷ்மீரில் உள்ள கிராமம் வேயன். இங்குள்ள மக்கள் 362 பேரும் முறையாக கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர். இதற்கு உள்ளூர் சுகாதாரத்துறை அதிகாரிகள், பணியாளர்களே காரணம். எனவே இந்தியாவின் முதல் தடுப்பூசி போட்ட கிராமமாக இந்த கிராமத்தை கூறலாம். செயற்கைக்கோள் பள்ளி பெங்களூருவிலுள்ள மல்லேஸ்வரம் அரசுப் பள்ளி முதல் அரசு பள்ளியாக செயற்கைக்கோளை தயாரித்து விண்ணில் ஏவியுள்ளது. மந்தனா மலையில் ஏறிய சாதனை புனேவில் உள்ள மலை ஏறும் குழுவின் பெயர் கிரிபிரேமி. இந்த குழுவினர் மந்தனா எனும் மலையில் 6510 மீட்டர் ஏறி சாதித்துள்ளனர். இமாலய மலைத்தொடரில் இந்த மலை உள்ளது. இபைக் தபால்காரர் பெங்களூருவில் உள்ள தபால்காரர்கள் 15 பேர், இபைக்கைப் பயன்படுத்தி தபால்களை பட்டுவாடா செய்து வருகின்றனர். இந்த வகையில் இது சோதனை முயற்சிதான் என்றாலும் நாட்டில் இது முக்கியமான முதல் முயற்சி. உத்தரகாண்டில் பசுமை வீடு உத்தரகாண்டில் பசுமையான பொருட்களை வைத்தே வீடு கட்டியிருக்கிறார்கள். சோலார் பேனல்களை மின்சாரத்திற்கு பயன்படுத்துகிறார்கள். 5 ஆயிரம் லிட்டர் நீரை, மழைநீர் சேகரிப்பு மூலம் பெறுகிறார். சணல்களை வைத்து வீடுகட்டியதற்காக இந்த வீட்டை பிரபலமாக பேசிவருகிறார்கள். 10 ஆயிரம் ரன்கள் வேறு யார் இந்தளவு ரன்களை அடிக்க முடியும்? மித்தாலி ராஜ்தான். உலக கிரிக்கெட் போட்டிகளில் வட்டத் தொப்பியை அணிந்துகொண்டு துணிச்சலாக நின்று பத்தாயிரம் ரன்களை அடித்து சாதித்திருக்கிறார். இதற்கு முன்னால் இந்த சாதனையை செய்தவர் இங்கிலாந்து வீரரான சார்லட் எட்வர்ட்ஸ் ஆவார். பாலின வேறுபாடு இல்லாத உடை இதிலும் கேரளம்தான் முன்னிலை. படிப்பில்தான் எப்போதும் முன்னாடி வருவார்கள். ஆனால் இப்போது சமூக புரட்சியிலும் தடம் பதித்துவிட்டார்கள். பாலுசேரி அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளிதான் இந்த சாதனைக்கு சொந்தக்கார ர்கள். பள்ளி, மாணவிகள் சுடிதார் குர்தாவிலிருந்து சர்ட் பேண்டிற்கு மாறிக்கொள்ள அனுமதி தந்திருக்கிறார்கள். பாலியல் அத்துமீறலுக்கு தண்டனை பத்திரிகையாளர் பிரியா ரமணி, எம்ஜே அக்பர் மீது தொடுத்த வழக்கில் வென்றார். பெரியளவில் பேசப்பட்ட விவகாரத்தில் பிரியாரமணிக்கு ஆதரவாக தீர்ப்பு கிடைத்தது. மீடூ விவகாரத்தில் இது முக்கியமான வெற்றி. ஜெய் பீம் அமேசானின் அடையாளமாகவே மாறிவிட்ட சூர்யாவின் நிறுவனம் தயாரித்த ஜெய்பீம்தான் இந்த சாதனை செய்துள்ளது. ஐஎம்டிபி தளத்தில் அதிக ரேட்டிங் பெற்றுள்ள படம் ஜெய்பீம்தான். ஷசாங் ரெடெம்சன் என்ற படத்தை தாண்டி உலகளவில் சாதனை படைத்துள்ளது. அக்னிச்சட்டி கூட்டம் அரசியல் செய்தும் கூட படத்தின் வெற்றியை யாரும் தடுக்க முடியவில்லை. காரணம் படம் இணையத்தில் ஓடிடி வழியில் ஓடி மக்களின் மனதை வென்றது. பெண்களின் பங்கேற்பு முதல்முறையாக பெண்களின் பங்கேற்பு, ராணுவத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் தேர்வில் வென்று ராணுவத்தில் இணையவிருக்கிறார்கள். டைம்ஸ் ஆப் இந்தியா

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்