தொழில்நுட்பம் மூலம் பாகுபாட்டை குறைக்க முயலும் பெண்மணி! - அஜாயி









 அபிசோயே அஜாயி அகின்ஃபோலாரின் 

சமூக செயல்பாட்டாளர்



இவரது பெயரை சரியாக உச்சரிக்க சொல்லி போட்டியே நடத்தலாம். கட்டுரையில் அஜாயி என்று வைத்துக்கொள்வோம்.  1985ஆம் ஆண்டு  மே 19 அன்று நைஜீரியாவின் அகுரே என்ற நகரில் பிறந்தார். லாகோஸ் பல்கலைக்கழகம், தகவல் தொழில்நுட்பக் கழகம் ஆகியவற்றில் படித்தார். வணிக நிர்வாகத்தில் பிஎஸ்சி பட்டதாரி. 

பியர்ல்ஸ் ஆப்பிரிக்கா யூத் பவுண்டேஷன் என்ற தன்னார்வ அமைப்பின் தலைவர். ஏழை, எளிய மக்களின் கல்விக் கனவுக்கு தோள் கொடுக்கும் அமைப்பு. 

இந்த அமைப்பு வழியாக பெண்களுக்கு வருமானத்திற்கான தொழில்வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கிறார் அஜாயி. இதன்மூலம் பெண்கள் தனியாக இயங்க முடியும். இந்த வகையில் நானூறு பெண்களுக்கு மேல் பயிற்சி கொடுத்துள்ளார்.  நைஜீரியாவில் வாழும் ஏழை, பணக்காரர்களுக்கான இடைவெளி அதிகம். அதைக் குறைக்க அஜாயின் அமைப்பு பெரும் முயற்சி எடுத்து வருகிறது. 

பெண்கள் என்பவர்கள் உலகிலுள்ள புழக்கத்தில் இருக்கும் தொழில்நுட்பத்தை பயன்படுத்துபவர்கள் மட்டுமல்ல. அதனை அவர்கள் உருவாக்குவார்கள் என்று அஜாயி கூறுகிறார்.  2018ஆம் ஆண்டு சிஎன்என் தொலைக்காட்சியில் நாயகர்கள் வரிசையில் அஜாயி இடம்பெற்றார். 

பிபிசி தொழில்நுட்பம் நூறு பட்டியலிலும் இடம்பெற்ற நூறு மனிதர்களில் அஜாயியும் ஒருவர்.

டெல் மீ வொய் இதழ் 



 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்