உயிரை ஆரோக்கியத்தை காக்கும் சில ஆப்கள்!















what3words

இதனை இலவசமாக தரவிறக்கிக்கொள்ள முடியும். வாழ்க்கையை எட்டு எட்டாக பிரித்துக்கொள்ள சூப்பர்ஸ்டார் சொல்லியிருக்கிறார். இந்த ஆப் 3*3 என பிரித்துக்கொள்கிறது. இதில் உள்ளவர்களுக்கு மூன்று  வார்த்தைகளை அளிக்கிறது. உங்களுக்கு அவசரநிலை என்றால் இதைவைத்து அவர்களுக்கு தகவல் அளிக்கலாம். இங்கிலாந்தில் அதிகம் பயன்படுத்தப்படும் ஆப் இது. இதன்மூலம் ஏராளமான உயிர்களைக் காப்பாற்றியிருக்கிறார்கள். 

whatsapp

வாட்ஸ்அப்பில் ஏராளமான சில்மிஷங்களை செய்திருப்போம். ஆனால் அதிலும் அவசரகால சங்கதிகள் உண்டு. ஆபத்தான சூழலில் ஒருவரின் சாட் பாக்ஸில் பிளஸ் கீயை அழுத்தி ஷேர் லைவ் லொகேஷன் அனுப்பலாம். அந்த சாட்டுக்கு உரிய நபர் உங்களது இடத்தை குறிப்பிட்ட நேரம் பார்க்க முடியும். 

skinvision

ஸ்கின் விஷன் எனும் ஆப்பிற்கு காசு கட்டியே ஆக வேண்டும். இந்த ஆப் உங்களுக்கு தோல் புற்றுநோய் ஏற்பட்டிருந்தால் அதனை கண்டுபிடித்து சொல்லும். பாதிக்கப்பட்ட இடத்தை புகைப்படம் எடுத்து ஆப்பில் அனுப்பவேண்டும். இதனை அவர்கள் சோதித்து என்ன பாதிப்பு என்று சொல்லுவார்கள். இதற்கு 30 நொடிகள் போதும். இந்த முடிவுகளைக் கூட மருத்துவர்கள்தான் சொல்கிறார்கள். ஆனாலும் பயமாக இருந்தால் நேராக வர்த்தமான், அகர்வால் என ஏதேனும் வட இந்திய மருத்துவர்களிடம் சென்றுவிடுங்கள். அதிக காசு பிடுங்கினாலும் உங்களை காப்பாற்ற வாய்ப்பு உள்ளது. 

staylive

பொதுமுடக்கம், வேலையின்மை என தற்கொலை செய்துகொள்ள நிறைய வாய்ப்புகள் காரணங்கள் ஒருவருக்கு உண்டு. இந்த எண்ணம் கொண்டவர்களை காப்பாற்றி நம்மோடு வாழ வைக்க ஸ்டே அலைவ் ஆப் உதவுகிறது. உயிருடன் இருக்க வைக்க உள்ள பல்வேறு பயிற்சிகள், வழிமுறைகள், பாறாங்கல்லில் பிரதமர் முதுகு வளைத்து செய்யும் யோகா போன்ற பயிற்சிகளை சிரித்தபடியே செய்யுங்கள் என ஆப் ஆலோசனை வழங்குகிறது. 

st john ambulance first aid

உங்களை விட அடுத்தவர்கள்தான் முக்கியம் என சொல்லும் ஆப் இது. இதனை  எந்த எதிர்ப்பேச்சும் சொல்லாமல் போனில் பதிந்து வைத்தால் பிறரை காப்பாற்றும் பல்வேறு ஆலோசனைகளை ஆப் சொல்லுகிறது. மயங்கி விழுவது, அலர்ஜி, சிபிஆர் செய்வது என நிறைய ஆலோசனைகளை வழங்குகிறது. இதற்கு நீங்கள் மயங்கி விழாமல் உறுதியாக வேர்ப்பிடித்து நின்றால் மட்டுமே விபத்துக்குள்ளானவரை காப்பாற்றலாம். இணையம் இல்லாமல் கூட இதனை பயன்படுத்த முடியுமாம். 

RD november 2021



   


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்