இடுகைகள்

ஐபோன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

2020 ஆம் ஆண்டின் பரிசோதனை முயற்சி படங்கள்! - ஓடிடியை சுவாரசியப்படுத்தும் புதிய இயக்குநர்கள்

படம்
              ஓடிடியாகட்டும் சினிமாவாகட்டும் சோதனை முயற்சிகள் எப்போதும் வந்துகொண்டே இருக்கும் . இந்த படங்களில் பட்ஜெட் குறைவாக இருந்தாலும் ஐடியாரீதியாக நிறைய முயற்சிகள் செய்திருப்பார்கள் . இன்று ஓடிடி தளம் இதற்கான வாய்ப்பாக உள்ளது . அப்படி வந்த படங்களைப் பார்ப்போம் . கார்கோ இறந்துபோனவர்களை திரும்ப பூமிக்கு அனுப்பி வைக்கும் பணியை நாயகன் செய்துவருகிறார் . அவருக்கு உதவும் உதவியாளர் கூட அப்படி பூமிக்கு வந்தவர்தான் . பட்ஜெட் குறைவுதான் என்றாலும் அறிவியல் கான்செப்டிக் இந்திய புராண சமாச்சாரங்களை கலக்கி சிறப்பாக செய்திருக்கிறார்கள் . விக்ரம் மாசே , சுவேதா திரிபாதி ஆகியோர் நடித்திருக்கிறார்கள் . இவர்கள் பயன்படுத்தும் பல்வேறு பொருட்கள் வேண்டாம் என தூக்கியெறிந்தவைதான் . அதையெல்லாம் கவலைப்படாமல் படத்தைப் பார்த்தால் ரசிக்கலாம் . டைஸ் பிஜய் நம்பியார் இதற்கு முன்னர் எடுத்த படங்கள் எப்படியோ அப்படித்தான் இந்தபடமும் . புல்கித் சாம்ராட் , ஹர்ஸ்வர்த்தன் ரானே ஆகியோருக்கு இடையிலான முரண்பாடுகள்தான் படம் . படத்தின் இசை , காட்சிக்கோப்பு என அனைத்துமே பரிசோதனை முயற்சிதான் . படத

சிறந்த ஸ்மார்ட் போன்கள் 2019

படம்
2019 சிறந்த ஸ்மார்ட் போன்கள் ஆப்பிள் 11 புரோ சிறப்பான கேமரா, குறைந்த வெளிச்சத்திலும் ஜி.வி. வெங்கட்ராம் போல புகைப்படம் எடுக்கும் தரத்தில் ஆப்பிளை அடித்துக்கொள்ள ஆளில்லை இத்துறையில் . ஏ13 பயோனிக் சிபியூ பிரமாதமாக இருக்கிறது. எந்த டாஸ்க்கிலும் சுணங்காத சிறந்த போன் இதுவே. சாம்சங் கேலக்ஸி 10 ஆப்பிளுக்கு போட்டி கொடுக்கும் அளவு தரம், விலை அனைத்தும் கொண்டது. சிறப்பான ஸ்க்ரீன் என்று சொன்னால் சாம்சங் முதலாளியே அடிக்க ஓடிவருவார். அதை வைத்துத்தானே மார்க்கெட்டையே பிடித்தார்கள். சிம்பிளான போன், நிறைய வசதிகள், எடை குறைவு என எதிர்பார்ப்பிற்கு மேலே சொல்லு என வசீகரிக்கிறது சாம்சங். கூகுள் பிக்சல் 4 வெகு நாட்களாக மார்க்கெட்டில் முன்னுக்கு வரத் துடித்து  சாதித்துவிட்டது கூகுள். பிக்சல் 4, 90 ஹெர்ட்ஸ் திரை, வேகமான முகமறிதல் திறக்கும் வசதி, ஸ்பேம் விளம்பரங்களை ஒதுக்கும் வசதி என நவீன இளைஞர்களுக்கான வசதியில் முன்னாடி செல்கிறது. இரவு வானத்தைக்கூட இந்த போன் மூலம் அழகாக படம் எடுக்க முடியும் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். கேமராவின் ஜூம் செய்யும் வசதிகளும் பிரமிக்க வைக்கின்றன. கொடுக்க

வாவ் சொல்ல வைக்கும் ஆப்ஸ்கள் - 2019

படம்
ஸ்பெக்ட்ரா கேமரா இது ஐபோனுக்கான ஆப். அழுக்கான சூழலிலும் பளிச்சென புகைப்படம் எடுக்க உதவும் ஆப். ட்ரைபாட் இல்லாமல் சிறப்பான ஷேக்கிங் இல்லாத படங்களை எடுக்கலாம். மேலும் எந்த கூட்டத்திலும் உங்களுக்கு தேவையான ஆட்களை மட்டும் தனியாக பிரித்தெடுக்கும் ஏ.ஐ நுட்ப வசதி இந்த ஆப்பில் உண்டு. அதனால்தான் ஆப்பிள், இந்த ஆப்பிற்கு ஆப் ஆப் தி இயர் என்ற விருதைக் கொடுத்து கௌரவித்துள்ளது. மூன்று பௌண்டுகள் கொடுத்துத்தான் இதை நீங்கள் வாங்க வேண்டும். அஃபினிட்டி பப்ளிசர் அடோப் இன்டிசைனுக்கு நிகரான வேறு ஆப்களை தேடுகிறீர்களா? உங்களுக்காகத்தான இந்த ஆப் உதவுகிறது. ஏராளமான டூல்கள் உண்டு. உங்களுக்கு புத்தகங்களை வடிவமைப்பதில் ஆர்வம் உண்டா, சந்தேகமே வேண்டாம் உடனே இதனை காசு கொடுத்து வாங்கி பின்னி எடுங்கள். ஆப்பிள் நிறுவனம் இந்த ஆப்பிற்கும் விருது வழங்கி பாராட்டியுள்ளது. விலை - 48 பௌண்டுகள் ஜம்போ இலவச ஆப்தான். ஃபேஸ்புக், ட்விட்டர் என அனைத்திலும் கிடக்கும் குப்பைகளை நித்ய கர்மவாசியாக சுத்தம் செய்கிறது. தேவையில்லாத விளம்பரங்கள், உங்களை பின்தொடரும் ஆப்களை துடைத்தெறிய ஜம்போ உங்களுக்கு உதவும். புரோ

ஆப்பிள் மூலம் சீனா லாபம் ஈட்டுகிறதா?

படம்
ஆம், இல்லை என்று கூற முடியாது. ஆனால் சீனா இதில் ஈட்டும் லாபம் குறைவுதான். ஆனால் அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு உள்ள கோபம், அமெரிக்காவிற்கும் சீனாவுக்குமான வர்த்தக இடைவெளிதான். கடந்த ஆண்டில் மட்டும் 420 பில்லியன் டாலர்கள் இடைவெளி உருவாகி இருக்கிறது. ஆப்பிள் நிறுவனம் இதுகுறித்து, நாங்கள் சீனாவில் காசு குறைவு என்பதற்காக தயாரிக்கவில்லை. அங்கு தயாரிப்பதற்கான திறன்கள் உள்ளது என்று கூறியுள்ளதைக் கவனிக்க வேண்டும். இதை ட்ரம்ப் காது கொடுத்து கேட்க வாய்ப்பில்லை. அடிப்படையில் ஒரு முதலாளி உற்பத்திச்செலவு குறைவான இடத்தில்தானே கொடுத்து தன் பொருளை உற்பத்தி செய்வார். அதுதான் அவருக்கு அதிக லாபத்தைக் கொடுக்கும். வியாபாரத்தை சேவையாக யாராவது செய்வார்களா? குறைந்த முதலீடு அதிக லாபம் என்பதுதான் பெரும்பாலான வியாபாரிகளின் வணிக தந்திரம். ஐபோனின்(ஐபோன் எக்ஸ் ) தயாரிப்புச்செலவு ஒரு போனுக்கு 370 டாலர்கள். இந்த செலவு அமெரிக்காவில் செய்தால் சரி என்கிறார் ட்ரம்ப். இங்கு வரி அதிகம் என்பதால் பெரும்பாலும் சீனாவில் தயாரித்து அசெம்பிள் செய்து விற்பனைக்கான விஷயங்களை மட்டும் அமெரிக்க ஸ்டோர்களில், இணையத்தில் செய்