2020 ஆம் ஆண்டின் பரிசோதனை முயற்சி படங்கள்! - ஓடிடியை சுவாரசியப்படுத்தும் புதிய இயக்குநர்கள்
ஓடிடியாகட்டும் சினிமாவாகட்டும் சோதனை முயற்சிகள் எப்போதும் வந்துகொண்டே இருக்கும். இந்த படங்களில் பட்ஜெட் குறைவாக இருந்தாலும் ஐடியாரீதியாக நிறைய முயற்சிகள் செய்திருப்பார்கள். இன்று ஓடிடி தளம் இதற்கான வாய்ப்பாக உள்ளது. அப்படி வந்த படங்களைப் பார்ப்போம்.
கார்கோ
இறந்துபோனவர்களை திரும்ப பூமிக்கு அனுப்பி வைக்கும் பணியை நாயகன் செய்துவருகிறார். அவருக்கு உதவும் உதவியாளர் கூட அப்படி பூமிக்கு வந்தவர்தான். பட்ஜெட் குறைவுதான் என்றாலும் அறிவியல் கான்செப்டிக் இந்திய புராண சமாச்சாரங்களை கலக்கி சிறப்பாக செய்திருக்கிறார்கள். விக்ரம் மாசே, சுவேதா திரிபாதி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இவர்கள் பயன்படுத்தும் பல்வேறு பொருட்கள் வேண்டாம் என தூக்கியெறிந்தவைதான். அதையெல்லாம் கவலைப்படாமல் படத்தைப் பார்த்தால் ரசிக்கலாம்.
டைஸ்
பிஜய் நம்பியார் இதற்கு முன்னர் எடுத்த படங்கள் எப்படியோ அப்படித்தான் இந்தபடமும். புல்கித் சாம்ராட், ஹர்ஸ்வர்த்தன் ரானே ஆகியோருக்கு இடையிலான முரண்பாடுகள்தான் படம். படத்தின் இசை, காட்சிக்கோப்பு என அனைத்துமே பரிசோதனை முயற்சிதான். படத்தை புரிந்துகொள்ள முடிகிறதா என சோதித்துப் பார்த்து படத்தைப் பாருங்கள். தலைவலி ஏற்பட்டால் நாங்கள் பொறுப்பல்ல.
கள்ள நோட்டம்
இரண்டு சிறுவர்கள் ஒன்றாக சேர்ந்து படம் எடுக்க முயல்வதுதான் படத்தின் கதை. கோ புரோ கேமராவில் எடுத்து படத்தை எடிட் செய்திருக்கிறார்கள். ராகுல் ரிஜி நாயரின் கதை சுவாரசியமாக இருக்கிறது. உங்களுக்கு பிடித்திருந்தால் படத்தை பார்க்கலாம்.
டிராமா
போலீஸ் ஸ்டேஷனில் கொலை வழக்கை ஆராயும் விசாரணை அதிகாரி வேலை செய்யும்போது திடீரென மின்சாரம் கட்டாகிறது. அந்த சூழ்நிலையில் அங்கு என்ன நடக்கிறது என்பதுதான் படம். படத்தின் இயக்குநர் அஜூ குலுமுலா முழுப்படத்தையும் ஒரே ஷாட்டில எடுத்திருக்கிறார். இதில் கிஷோர், சார்லி என இரண்டு நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். ஓடிடி தளத்திற்கு கேட்டாலும் கூட தியேட்டர்தான் என இயக்குநர் உறுதியாக இருக்கிறார்.
அகண்டன்
சென்னையில் சாலையோரம் உணவகம் நடத்துகிற தம்பதிகளைப் பற்றிய படம். முழுக்க ஐபோனில் எடுக்கப்பட்டிருக்கிறது. ஏன் சார் ஐபோனில் படம் எடுத்தீர்கள் என்று கேட்டதிற்கு அதுதான் எதிர்காலம் என பதில் சொல்லியிருக்கிறார். படத்தின் இயக்குநர் டூலெட் படத்தில் நாயகராக நடித்தவரான சந்தோஷ் நம்பிராஜன்.
கருத்துகள்
கருத்துரையிடுக