மழை பெய்யும்போது இணையமும், செல்போனும் செயல்படாது! - இதற்கான அறிவியல் காரணம் என்ன?

 

 


Woman, Person, Female, Behind, Glass, Window, Looking

மழைக்காலத்தில் ஏற்படும் இயற்கையான தடங்கல்கள்!



மழைக்காலத்தில் ஸ்மார்ட்போன்கள், இணையப் பயன்பாடு என இரண்டுமே பல்வேறு இடையூறுகளை சந்திக்கின்றன


1860ஆம் ஆண்டு, ஸ்காட்லாந்தைச் சேர்ந்த இயற்பியலாளர் ஜேம்ஸ் மேக்ஸ்வெல், புதியவகை மின்காந்த அலையை கண்டுபிடித்தார். அதற்குப்பிறகு இயற்பியலாளர் ஹென்ட்ரிச் ஹெர்ட்ஸ், மேக்ஸ்வெல்லின் கோட்பாட்டை சோதித்துப் பார்த்து, அதனை உறுதியும் செய்தார். 1895ஆம் ஆண்டு கோல்கட்டாவில் சர் ஜெகதீஷ் சந்திரபோஸ், மின்காந்த அலை மூலம் 23 மீட்டர் தூரத்தில் வயர்களின்றி செய்தியை அனுப்பமுடியும் என்பதை செய்து காட்டி அனைவரையும் பிரமிக்க வைத்தார். இன்று நாம் செய்தியை இணையத்தின் வழியாக எந்த நாட்டிற்கு வேண்டுமானாலும் அனுப்ப முடியும். இதற்கு காரணமாக இருப்பது எலக்ட்ரான்கள். அவற்றில் உருவாகும் மின்காந்தவிசை.


Umbrella, Night, Rain, Dark, Urban, City, Person 

இரு எலக்ட்ரான்களுக்கு இடையில் மின்காந்த விசை உருவாகும்போது நாம் செய்தி அனுப்ப முடிகிறது. எளிய உதாரணமாக நாம் ஒளியை குறிப்பிட்ட கோணத்தில் அலைநீளத்தில் கண்களால் பார்ப்பதால், அதனை எளிதாக உணர்ந்துவிடுகிறோ்ம். தொலைத்தொடர்பு வசதி முன்னேறாத காலத்தில் ்பிளாஷ்லைட்டை மோர்ஸ்கோடு முறையில் பயன்படுத்தி பிறரை தொடர்பு கொண்டனர். நாம் இணையம் மூலம் பிறருக்கு செய்தி அனுப்புவது கூட மின்காந்த விசையை ஒருவருக்கொருவர் அனுப்பிக்கொள்வது என குறிப்பிடலாம்.


ஆப்டிகல் ஃபைபர், செல்போன் டவர்கள் என இருவழிகளில் உலகம் முழுக்க செய்திகள் அனுப்பப்பட்டு வருகின்றன. ஆப்டிகல் ஃபைபரில் மின்காந்த அலைகள், அடர்த்தியான ஒன்றிலிருந்து அடர்த்தி குறைந்த ஊடகத்திற்கு மாறுவதாக கூறலா்ம். நிலம், கடல் என ஆப்டிகல் பைபர் இணைப்பு உலகம் முழுவதையும் இணைத்துள்ளது. மின்காந்தவிசை என்பது தொலைத்தொடர்புக்கு பயன்படும்போது, அகச்சிவப்பு கதிர்களாக மாற்றப்படுகிறது. இக்கதிர்கள், ஒளியை விட நீண்டவை என்பதால் நமது கண்களுக்குத் தெரிவதில்லை.


மழைக்காலத்தில் ஆப்டிகல் பைபர் வயர்களில் நீர் நுழைவதால் சிக்னல் பலவீனமாகிறது. மழை பெய்யும்போது ஸ்மார்ட்போன் மூலம் இணையத்தைப் பயன்படுத்துவது கடினம். அவற்றைப் பயன்படுத்தும் வேகம் குறையும். ரேடியோ அலைகளை மழைத்துளிகள் ஈர்ப்பதுதான் காரணம். இதனால் பெரும்பாலும் அழைப்பு, குறுஞ்செய்தி, இணையத்தை பயன்படுத்துவது,. டிடிஹெச் டிவி ஆகிய செயல்பாடுகள் முடக்கப்படும். மழைத்துளிகளின் அடர்த்தி, ஆவியாகும் அளவு ஆகியவையும் ரேடியோ அலைகளை ஈர்த்து அதனை வெப்பமாக்குகிறது. அதாவது, மைக்ரோ ஓவன் செயல்படுவது போல. நவீன அறிவியல் இந்த பிரச்னைக்கும் விரைவில் தீர்வு கண்டுபிடிக்க வாய்ப்புள்ளது.

தகவல்

IE


Internet connection in the rain

varun mahija

 Thanks

dinamalar pattam



கருத்துகள்

பிரபலமான இடுகைகள்