சாதி வன்முறைகளை மறைக்கவே இந்தியா அகிம்சை நாடு என்று கூறப்பட்டது! - அபர்ணா வைதிக், வரலாற்று ஆய்வாளர்
வரலாற்று ஆய்வாளர் அபர்ணா வைதிக்
அசோகா பல்கலைக்கழக பேராசிரியர்
லவ் ஜிகாத் முயற்சிகள் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் புழக்கமாகி நடைபெற வாய்ப்புள்ளதா?
இந்து என்பதை நம்மில் பலரும் கேட்டுப்பழகியது 19ஆம் நூற்றாண்டு வாக்கில்தான் என்பதை நினைவுகூருங்கள். அப்போதிலிருந்து இந்து என்பது பெரும்பான்மையான பல்வேறு ஊடகங்களில் ஒலித்தபடிதான் இருக்கிறது. ஆனால் லவ் ஜிகாத் என்ற சட்டம் இப்போது குறிப்பிட்ட மாநிலத்திற்கான சட்டமாக உள்ளது. நாளை இது நாடு முழுக்க அமலாகும் வாய்ப்புள்ளது.
லவ் ஜிகாத் என்ற சட்டம் இருபதாம் நூற்றாண்டைச் சேர்ந்த சட்டமாக இருந்தாலும் இது இந்து முஸ்லீம் என்ற இரு மதங்களைக் கொண்டது மட்டுமல்ல. முஸ்லீம், கிறிஸ்துவ அமைப்புகள் உத்தரப்பிரதேசத்ததிலுள்ள சமர், சந்தால், தோம், லாய் பேகிஸ் என்ற தாழ்த்தப்பட்ட சாதிப்பிரிவினரை தங்கள் மதத்திற்கு மாற்றிவந்தன. இதனால்தான் ஆரிய சமாஜமும், இந்து மகாசபையும் இந்து மக்கள் எண்ணிக்கையில் குறைகின்றனர் என்று குரல் எழுப்பி பேரணிகளை நடத்தினர். லவ் ஜிகாத் என்பதே மேல்சாதியைச் இந்து பெண்களை கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் கைப்பற்றி விடுவார்கள் என்ற பேரச்சத்தில் உருவானது ஆகும்.
பாலியல்ரீதியான பயம் என்பதோடு முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் தங்களுடைய மத த்தவர்களாக மாற்றி இந்துக்களின் பசுக்களையும் கூட பசுக்களையும் கூட வணிகத்திற்கு பயன்படுத்திக்கொள்கின்றனர். எனவேதான் இந்து சபையினர் லவ் ஜிகாத், கௌரக்சா ஆகிய திட்டங்களை உருவாக்கி தங்களது அடையாளங்களான பசுக்களையும் பெண்களையும் பாதுகாக்கத்தொடங்கியுள்ளனர். இதனால்தான் கர்வாப்சி என்ற பெயரில் தாழ்த்தப்பட்டவர்களை முஸ்லீம் அமைப்பினர் மதமாற்றம் செய்வதை தடுக்க முயல்கின்றனர்.
இந்திய சமூகம் அகிம்சையானது என்ற வதந்தி எப்படி பரவியது?
இந்ந வதந்திதான் பல நூற்றாண்டுகளாக சாதிகளிடையே நிலவி வந்த வன்முறை சம்பவங்களை மக்கள் பார்க்கமுடியாமல் செய்தது. இதற்காக இதை மறைத்து பல்வேறு கதைகள் புனையப்பட்டன. ராஜா ராம்மோகன்ராய், விவேகானந்தர் இதற்கு பயன்பட்டனர். காந்திய தேசிய இயக்கம் பற்றி பேசப்படுவது, மௌரிய மன்னர் அசோகரின் செயல்பாடுகள் என பலரும் எழுதுவதும் பேசுவதும் வன்முறையை பூசி மெழுகத்தான். இந்திய வரலாற்றை மேம்போக்காக பார்ப்பவர்களுக்கு 3ஆம் நூற்றாண்டு பக்தி இயக்கம் தொடங்கி அமைதியான நாடாக இருப்பது போலத் தோன்றும். அடிப்படையில் இந்தியா அமைதியான இதயத்தைக் கொண்டுள்ள சகிப்புத்தன்மையான நாடுதான். தாராளவாதிகள் இந்தியாவை வன்முறையில்லாத தேசம் என பிறர் நினைக்க மெனக்கெட்டனர்.
பாதிக்கப்பட்டவர்களை மறைக்க இந்த வதந்தி பயன்பட்டதா?
இப்படி தாராளவாதிகள் நடந்துகொண்டதால் வன்முறை என்பது சாதிகளுக்கு்ள் நடைபெறவில்லை என்று பிறர் எண்ணும்படி சூழல் உருவானது. இன்னொன்று வெளியிலிருநுத வந்த முஸ்லீம்கள் இந்துகளைத் தாக்கினர் என்று பாசாங்கான பிம்பம் ஒன்றை உருவாக்குவதற்கும் இது வசதியாக போய்விட்டது.
இந்தியாவின் வன்முறை வரலாற்றை விவாதிப்பது மக்களுக்கு உதவும் அல்லது உதவாது என நினைக்கிறீர்களா?
வன்முறை பற்றி பெரும்பாலும் நாம் பேசாமல் இருப்பதற்கு முக்கியக் காரணம், சாதி சார்ந்த எண்ணமும் கௌரவமும்தான். சாதியும் பாலினம் சார்ந்த தாக்குதல்களும் எப்போது இந்தியாவில் நடந்துகொண்டுதான் உள்ளன. இதை எதிர்ப்பு தெரிவித்து இந்திய சமூகத்திற்கு முதலில் கவனப்படுத்தியவர் ஜோதிபா புலே. இவருக்கு பிறகுதான் அயோத்தி தாசர், மறைமலை அடிகள், பெரியார், அம்பேத்கர் என பல்வேறு சீர்திருத்த தலைவர்கள் தோன்றினர். தாழ்த்தப்பட்ட அடிமைப்பட்ட மக்களுக்கு இடையே பெரும் எழுச்சியை 1930-40களில் ஏற்படுத்திய தலைவர்கள் இவர்கள். தாழ்த்தப்பட்ட மக்களுடையது என்பதால்தான் பூலேவின் எழுத்துக்கள் பரவலாக அனைவரிடமும் சென்று சேரவில்லை. மேலும் அம்பேத்கர், பெரியாரின் எழுத்துகள் பாடமாகாததன் காரணம் கூட அது ஆரியர்களுடையது இல்லை என்பதால்தான். காந்தியினுடைய இந்து சுயராஜ்யம் பாடமாக இருக்கும்போது, அம்பேத்கரின் சாதி ஒழிப்பு ஏன் எங்குமே வாசிப்படுவதற்கு வாய்ப்புகள் இல்லாமல் இருக்கின்றன என்பதைப் பற்றி நாம் நிச்சயம் பகிரங்கமாக பேசியே ஆகவேண்டும். இது நிச்சயம் சாதிகளின் வன்முறையை ஒழித்து வைக்கும் முயற்சிதான்.
டைம்ஸ் ஆப் இந்தியா
இந்திரஜீல் ராய்
கருத்துகள்
கருத்துரையிடுக