இந்தியாவில் பாதிக்கும் மேலான பெண்களுக்கு ரத்தசோகை பிரச்னை உள்ளது! - யுனிசெப் ஊட்டச்சத்துத்துறை தலைவர் அர்ஜன் டி வக்த்

 

 

 

Outlook India Photo Gallery - The Power Of Poshan

அர்ஜன் டி வக்த்

 


அர்ஜன் டி வக்த


யுனிசெப் ஊட்டச்சத்து துறை தலைவர்


ஆந்திரம், தெலுங்கானாவில் யுனிசெப் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்க என்ன வித நடவடிக்கைகளை எடுத்து வருகிறது?


நாங்கள் இந்திய அரசின் போஷான் அபியான் என்ற திட்டத்தில் இணைந்து செயல்பட்டு வருகிறோம். தெலங்கானா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் நாங்கள் பல்வேறு செவிலியர்கள் நர்ஸ்கள் ஆகியோரோடு இணைந்து பணிபுரிந்து வருகிறோம். இவர்களோடு இணைந்து குழந்தைகளுக்கு உணவு, தாய்ப்பால் அளிப்பது பற்றி விழிப்புணர்வு அளித்து வருகிறோம்.


யுனிசெப் அமைப்பு, உலக உணவு திட்டத்துடன் இணைந்து ஐசிடிஎஸ் அதிகாரிகளோடு பணியாற்றி வருகிறது. கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் பொது விநியோக முறையை மேம்படுத்தி வருகிறோம்.



குழந்தைகளுக்கு ஏற்படும் ஊட்டச்சத்து பற்றாக்குறையை குறைப்பது எப்படி?


குழந்தை பிறந்த முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ஆப்டிமல் நியூட்ரிஷன் என்று கூறும் வகையில் உணவுகளை வழங்கவேண்டும். அதுதான் அவர்கள் பிழைத்திருக்கச் செய்யும். இதோடு தாய்ப்பாலை ஊட்டுவது. இது குழந்தைக்கு பிழைத்திருப்பதற்கான வாய்ப்பை உறுதி செய்யும்.


தாய்ப்பாலை சரியான முறையில் வழங்காத தால்தான் உலகில் பிறக்கும் குழந்தைகளி்ல ஐந்தில் ஒருவர் இறந்துபோகிறார். முறையாக தாய்ப்பாலை குடித்து வளரும் குழந்தைகள் வயிற்றுப்போக்கு, நிம்மோனியா ஆகிய நோய்களை தாங்கி வளருகிறார்கள். தாய்ப்பாலை சரியானபடி குழந்தைகளுக்கு வழங்கும்போது அவர்கள் ஐந்து வயதுக்குள் இறக்கும் சதவீதம் குறைகிறது.



தாய்ப்பால் கொடுத்தால் கோவிட் -19 நோய் பரவாதா?


நீங்கள் சொல்லுவதற்கு எந்தவித அறிவியல் ஆதாரமும் கிடையாது. தாய்ப்பால் குழந்தைகளுக்கு ஆறுமாதம் கொடுப்பது மட்டுமே அவர்களை பல்வேறு நோய்களிலிருந்து காப்பாற்றும். தாயின் பால் மூலமாக வைரஸ் பரவுவது என்று யாரும் அறிவியல் ஆராய்ச்சிகளில் கூறவில்லை. எனவே தைரியாமாக தாய்ப்பாலை குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.


பெருந்தொற்று ஏற்பட்டதால் ஊட்டச்சத்து குறைபாடு பிரச்னை அதிகரித்திருக்கிறதா?


கோவிட் -19 நோய்த்தொற்று பரவலால் பல்வேறு குடும்பங்களால் ஊட்டச்சத்தான உணவுகளை குழந்தைகளுக்கு தரமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. பள்ளிகளில் குழந்தைகளுக்கு கிடைத்து வந்த மதிய உணவும் கூட இப்போது அவை மூடப்பட்டிருப்பதால் அதுவும் கிடைப்பதில்லை. நாம் உடனடியாக இந்த பிரச்னையை கவனத்தில் எடுத்து தீர்க்கவேண்டும். இல்லையெனில் நிலைமை இன்னும் மோசமாகும் வாய்ப்பு உள்ளது.


ஊட்டச்சத்து குறைபாடு என்ற பிரச்னை மட்டும்தான் உள்ளதா?


இந்தியாவில் உள்ள 14-49 வயது வரையிலான அரைப்பகுதி பெண்களுக்கு ரத்தசோகை பாதிப்பு உள்ளது. 40 லட்சத்திற்கும் மேற்பட்ட சிறுவர்கள் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 20 லட்சமாக உள்ளது.


டைம்ஸ் ஆப் இந்தியா


பப்பா மஜூம்தார்


ஆக.19, 2020


கருத்துகள்