தி எகனாமிஸ்ட் இதழின் புத்தக தேர்வுகள் 2020!

 

 

Buddha, Meditation, Rest, Buddhism, Faith, Relaxation

 

 

 

 

 

 

 

 

 

புத்தகம் புதுசு


எ டாமினென்ட் கேரக்டர்


சமந்த் சுப்ரமணியன், டபிள்யு. டபிள்யு நார்டன்


அட்லாண்டிக் புக்ஸ்


இந்த புத்தகத்தில் இங்கிலாந்தில் அறிவியல் வளர்ந்த விதம் பற்றி ஆசிரியர் விளக்குகிறார். அரசியலும் அறிவியலும் எப்படி ஒன்றாக கலந்து மாற்றங்களை ஏற்படுத்தின ஆசிரியர் சுவாரசியமாக விளக்கியுள்ளார்.



பிரைவசி இஸ் பவர்


காரிசா வெல்ஸ்


தனிநபர்களின் தகவல்களை பெரு நிறுவனங்கள் திரட்டுவது ஏற்படுத்தும் ஆபத்துகள் பற்றி பேசுகிற நூல் இது. நூலை படிக்கும்போது பதற்றம் ஏற்படுவதற்கு பதிலாக இப்பிரச்னையை சூதானமாக எப்படி எதிர்கொள்வது என யோசிக்க வைக்கிறது.


அப்போலோ ஏரோ


நிக்கோலஸ் கிரிஸ்டாகிஸ்


லிட்டில் ப்ரௌன்


பெருந்தொற்று எப்படி நம் வாழ்க்கையில் சமூக, பொருளாதார மாற்றங்களை ஏற்படுத்தியது என ஆய்வுப்பூர்வமாக ஆசிரியர் எழுதியுள்ளார்.


புதின் பீப்புள்ஸ்


கேத்தரின் பெல்டன்


பாரர் ஸ்ட்ராஸ் அண்ட் கிரோக்ஸ்


ரஷ்ய அதிபரான புதின் பற்றி ஏராளமான நூல்கள் எழுதப்பட்டுளன. அவற்றுள் இந்த நூல் அவருக்கு நெருக்கமான ஆட்களைப் பற்றிப் பேசுகிறது. அங்கு நிலவும் சூழல், வன்முறை என்பதை படிக்க சுவாரசியமாக எழுதியுள்ளனர்.


கிளெப்டோபியா ஹவ் டர்ட்டி மணி இஸ் கான்குயரிங் தி வேர்ல்டு


டாம் பர்கிஸ்


ஹார்பர்


கருப்பு பணம் எப்படி உலகை இயக்குகிறது என கண்ணுக்கு முன்னே பார்ப்பது போல நூலை ஆசிரியர் எழுதியிருக்கிறார். இங்கு அறம் பற்றி பேச்சுகள் எழுந்தாலும் கருப்பு எண்ணம் சார்ந்த வாழ்க்கை நம்மை எப்படியோ மனதிற்குள் வசீகரத்தை உருவாக்க தவறுவதில்லை.



ஈட் தி புத்தா லைஃப் அண்ட் டெத் இன் எ திபெத்தியன் டவுன்


பார்பரா டெமிக்


ராண்டம் ஹவுஸ்


என்காபா என்ற திபெத்திய நகரம் ஒன்றின் கதை. சீன கம்யூனிஸ்ட் கட்சியால் அந்த நகரம் எப்படி கலாசாரம் இழந்து வேதனையில் சிக்கித் தவிக்கிறது என்பதை உருக்கும் மொழியில் எழுதியுள்ளார் ஆசிரியர்.



கருத்துகள்

பிரபலமான இடுகைகள்