பெரிய கேள்விகளை விட சிறிய கேள்விகளுக்கு விடை தேடுங்கள்! - எல். மகாதேவன், ஹார்வர்ட் பேராசிரியர்
கரையான் புற்றில் அறிவியல் உள்ளது!
ஹார்வர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் எல்.மகாதேவன், தினசரி வாழ்க்கையில் பார்க்கும் விஷயங்கள் மூலம் அறிவியலை விளக்கி வருகிறார்.
தினசரி வாழ்க்கையில் பார்க்கும் பல்வேறு விஷயங்களுக்கு அறிவியல் காரணங்களை பலரும் கூறுவதில்லை. அப்படி கூறினாலும் அது மாணவர்களுக்கு கொட்டாவியை வரவழைக்கும். இதிலிருந்து மாறுபட்டு அறிவியலை விளக்குகிறார் ஹார்வர்டு பல்கலைகழக பேராசிரியர் எல்.மகாதேவன். அப்ளைடு மேத்தமேட்டிக்ஸ் படித்தவரின்
மேசையில் உள்ள பல்வேறு கருவிகள், பொருட்கள் அனைத்துமே தினசரி வாழ்க்கையில் உள்ளவைதான். அவற்றின்மூலமே எளிதாக அறிவியலை விளக்குவது இவரின் பாணி.
சிறிய கேள்விகளுக்கு விடை தேடி அவற்றின் மூலம் நிறைய தெரிந்துகொள்ளலாம் என்று சொல்லும் மகாதேவன் சீரியோஸ் விளைவு(“Cheerios effect”) என்பதை தினசரி பாலில் கலந்து உண்ணும் உணவு மூலம் விளக்குகிறார். இயற்பியலையும், கணிதத்தையும் தினசரி வாழ்க்கையில் கையாளும் பொருட்கள் மூலம் விளக்கும், மகாதேவன் 300க்கும் மேற்பட்ட அறிவியல் கட்டுரைகளை எழுதி வெளியிட்டிருக்கிறார்.
1995ஆம் ஆண்டு ஸ்டான்ஃபோர்டு பல்கலையில் பட்டம் பெற்றவர், கேம்பிரிட்ஜ், எம்ஐடி, ஹார்வர்டு ஆகிய கல்வி நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார். லண்டனிலுள்ள ராயல் சொசைட்டியிலும் அங்கம் வகித்துள்ளார். காகிதத்தை பல்வேறு மடிப்புகளாக மடித்து அதில் கருந்துளை, இயற்கணித சூத்திரங்கள் பலவற்றையும் விளக்கிக் காட்டுவது பேராசிரியர் மகாதேவனின் திறமை. ஏறத்தாழ இருபது ஆண்டுகளாக காகித்ததை ஒரிகாமி, கிரிகாமி வடிவில் மடிப்பது, வெட்டுவது என பயின்று வருகிறார். இதன் அறிவியலை பிறருக்கும் கற்பித்து வருகிறார். இதில் 3டி வடிவத்தை நடப்பு ஆண்டில் உருவாக்கியுள்ளார்.
2009ஆம் ஆண்டு இந்தியாவிலுள்ள பெங்களூருவில் விவசாய கல்லூரிக்கு சென்றவர், அங்கு கரையான் புற்றைப் பார்த்து, அதன் அமைப்பை வடிவியல் மூலம் உருவாக்க முயன்று வருகிறார். ’’கரையான் புற்று, மனித உடலின் நுரையீரல் போல செயல்பட்டு, சீதோஷ்ண நிலையைக் கட்டுப்படுத்துகிறது. அதன் கட்டுமானத்தை, அறிவியலை அறிவது எதிர்காலத்தில் நமக்கு உதவும்’’என்கிறார் பேராசிரியர் எல்.மகாதேவன்.
தகவல்
quantamagazine.
https://www.quantamagazine.org/l-mahadevan-finds-math-inspiration-in-the-mundane-20201026/?utm_source=pocket&utm_medium=email&utm_campaign=pockethits
கருத்துகள்
கருத்துரையிடுக