விவசாய சீர்திருத்த புரட்சி 2.0 வெல்லுமா? - பஞ்சாப் விவசாயிகள் டேட்டா கார்னர்
விவசாய புரட்சி 2.0 என்று பிரதமர் மோடி அறிவித்த விவசாய சீர்திருத்த சட்டங்கள் விவசாயிகளின் தீவிரமான போராட்டங்களில் முடிந்திருக்கிறது. கோவிட் -19 காலத்திலும் கூட விவசாய சீர்திருத்தங்களை சரியாக செய்துவிடவேண்டும் என்கிற வேட்கை தணியாமல் அதனை நிறைவேற்றியுள்ளது பாஜக அரசு.
இச்சட்டம் மூலம் விவசாயிகள் அரசின் மண்டிக்கு பொருட்களை விற்றே தீரவேண்டிய கட்டாயம் இனி இல்லை. அவர்கள் விருப்பம் போல பிற மாநிலங்களுக்கு கூட விற்கலாம். தனியார் நிறுவனங்களுக்கு விற்கலாம். மேலும் தனியார் நிறுவனங்களின் குத்தகை ஒப்பந்த விவசாயமும் இனி நாடெங்கும் பெருகும் வாய்ப்புள்ளது.
செப்டம்பரில் இம்மசோதாவை அரசு மக்களவையில் தாக்கல் செய்தது. உடனே உணவு பதப்படுத்ததல் துறை அமைச்சர் ஹர்சிம்ரத் கௌர் பாதல் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரது கட்சியான சிரோமணி அகாலிதள் கட்சியும் பாஜக அரசின் கூட்டணியிலிருந்து விலகியது. பஞ்சாப்பில் வேர் கொண்டுள்ள கட்சி இது என்பதால், மெல்ல போராட்டங்கள் சூடுபிடிக்கத் தொடங்கின. பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், மத்திய அரசின் சட்டங்களுக்கு பதில் வேறு சட்டங்களை இயற்றினார். இதனை அப்படியே ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்கள் பின்பற்றின. ஆனால் மத்திய அரசு சட்டங்களில் மாறுதல்களை செயய
மறுத்துவிட்டது. எனவே விவசாயிகள் அனைவரும் திரண்டு டில்லிக்கு செல்ல முயன்றனர். இதனால் பஞ்சாப், ஹரியானா ஆகிய மாநிலங்களிலிருந்து திரளான விவசாயிகள் டிராக்டர்களில் கிளம்பினர். இதனால் பாஜக அரசு ஆட்சி செய்யும் மாநிலங்களில் எல்லைகளை மூடும் உத்தரவு கூட போடப்பட்ட அவலமும் நடந்தது.
பஞ்சாப் எப்படி விவசாயிகளின் மாநிலமாக திகழ்கிறது என்பதை புள்ளிவிவரங்களோடு பார்ப்போ்ம
பஞ்சாப் மாநிலம் இரண்டு சதவீத நிலத்தைக் கொண்டு விளைவிக்கும் தானியங்கள், உணவுப்பொருட்களால் ஒட்டுமொத்த இந்தியாவின் பத்து சதவீத உணவு உற்பத்தியை நிகர் செய்கிறது.
மொத்த மக்கள் தொகை 2.2 சதவீதம். 28 மில்லியன் பேர்.
நிலப்பரப்புரீதியாக 50 ஆயிரம் சதுர கி.மீ.
விவசாய நிலங்கள் ரீதியாக 4.2 மில்லியன் ஹெக்டேர்
தனிநபர் வருமானம் 1.66 லட்சம். தேசிய தனிநபர் வருமானம் 1.35 லட்சம்
இந்தியாவின் மொத்த கோதுமை உற்பத்தியில் பஞ்சாப்பின் பங்கு 11.9 சதவீதம். 12.84 மில்லியன் மெட்ரிக் டன்.
நெற்பயிர் உற்பத்தி 12.79 மில்லியன் மெட்ரிக் டன். இந்தியாவின் மொத்த உற்பத்தியில் 12.5 சதவீதமாகும்.
இந்துக்கள் 38.5 சதவீதம்
சீக்கியர்கள் 57.7 சதவீதம்
பிறர் 3.8 சதவீதம் பேர்.
சாதி ரீதியாக பார்த்தால் ஜாட் சீக்கியர்கள் 21 சதவீதம், தலித்துகள் 31.9 சதவீதம், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் 31.3 சதவீதம் உள்ளனர். இதில் மேல்சாதியினர் அளவு 12 சதவீதம் ஆகும்.
நடப்பு ஆண்டில் கோதுமை அறுவடை 30 சதவீதமும், நெற்பயிர் அறுவடை 20 சதவீதமும் அதிகரித்துள்ளது.
பஞ்சாப் மாநில விவசாயிகளின் உணவுப்பொருட்களை மத்திய அரசு 85 சதவீதம் கொள்முதல் செய்துவிடுகிறது.
சீக்கியர்கள் வெளிநாடுகளிலு்ம பரவி வாழ்கிறார்கள். பஞ்சாப்பில் சிறுபான்மையினரான சீக்கியர்கள் 50 சதவீதம் பேர் உள்ளனர். விளைச்சல் சதவீதம் 99 ஆக உள்ளது. தேசிய அளவு 50 சதவீத த்தை இன்னும் தாண்டவில்லை.
பஞ்சாப்பில் 1.1 மில்லியன் மக்கள் வாழ்வாதாரமாக விவசாயமே உள்ளது.
இங்கு விவசாயிகள் வீட்டுக்கு 1.22 லட்சம் ரூபாய் விவசாய மானியம் வழங்கப்படுகிறது. இது நாட்டிலேயே அதிக அளவு.்
ஒரு ஹெக்டேர் நிலத்தில் நெல் 3.5 டன் நெற்பயிர், 4 டன் கோதுமை விளைவிக்கப்படுகிறது.
இந்தியா டுடே
கருத்துகள்
கருத்துரையிடுக