ஆட்டோ டிஸ்போஸபிள் சிரிஞ்சுகள் பயன்பாட்டுக்கு வரவேண்டும்!

 

 

 

 Vaccination, Doctor, Syringe, Medical, Health, Needle

 

 

டாக்டர் ஹெ்ஸ் ராட்டி


நோயியல் மருத்துவர்


இந்தியாவில் பயன்படுத்தப்படும் சிரிஞ்சுகள் பாதுகாப்பானவையா?


சிரிஞ்சுகளை மீண்டும் பயன்படுத்துவது இந்தியாவின் பொதுவான விருப்பம். பொதுவாக சிறு நகரங்கள், கிராமங்களில் இப்படித்தான் சிரிஞ்சுகளை பயன்படுத்துகிறார்கள். பயன்படுத்திய சிரிஞ்சுகளை மருத்துவக்கழிவுகளை சரியான முறையில் டிஸ்போஸ் செய்வதும் கிடையாது. இந்த சிரிஞ்சுகள் மறுசுழற்சி செய்யப்பட்டு மீண்டும் சந்தையில் விற்கப்படுவது உண்டு. இதனால் ரத்தம் சார்ந்த நிறைய தொற்றுநோய்கள் ஏற்படுகின்றன. இதற்கு ஒரே தீர்வு மருத்துவக்கழிவுகளை சரியான முறையில் வெளியேற்றுவதற்கான சட்டங்களை உருவாக்கவேண்டும். இப்படி இந்தியாவில் நடைமுறையில் உள்ள சட்டத்தை மருத்துவமனைகள் பின்பற்றி வருகின்றன.


இப்படி என்னென்ன நோய்கள் ஏற்படும்?


எய்ட்ஸ், மஞ்சள்காமாலை, ரத்தம் தொடர்பான பிற தொற்றுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.


இதற்கு என்ன தீர்வு?


ஆட்டோ டிசேபிள் சிரிஞ்சுகளை பயன்படுத்தவேண்டும். அனைத்து மாநில அரசுகளும் இதனை பயன்படுத்தவேண்டும். உலக சுகாதார நிறுவனத்தின் செயல்பாட்டு விதிமுறைப்படி ஆட்டோ டிசேபிள் வகை சிரிஞ்சுகளை நாம் பயன்படுத்த தொடங்கவேண்டும். ஒருமுறை பயன்படுத்தும் சிரிஞ்சுகளின் எண்ணிக்கை 85 சதவீதமாக உள்ளது. முறைகேடாக சிரிஞ்சுகள் விற்கப்படுவதை தடுக்க சட்டம் இயற்றப்படுவது அவசியம்.


ஏடி வகை சிரிஞ்சுகள் கொரோனா தடுப்பூசிக்கு பயன்படுத்தலாமா?


நிச்சயமாக. இந்த திட்டத்திற்கு ஏராளமான சிரிஞ்சுகள் தேவைப்படும். ஒருமுறை பயன்படுத்தும் சிரிஞ்சுகளை எந்த பொது நிறுவனமும் இதற்கு பரிந்துரைக்காது. இந்த வகை சிரிஞ்சுகள் கொரோனா பாதிப்பை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.


ஏடி வகை சிரிஞ்சுகளை நான்கு நிறுவனங்கள்தான் தயாரிக்கின்றன?



அதே நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையில் சிரிஞ்சுகளை தயாரித்தால் போதுமானது. மருத்துவப் பணியாளர்களுக்கு எப்படி பாதுகாப்பாக சிரிஞ்சுகளை பயன்படுத்தவேண்டும் என்று பயிற்சி அளிக்கவேண்டும். இந்த வகை சிரிஞ்சுகளை பயன்படுத்துவதில் மேற்பார்வை செய்வதற்கு தகுதியும் திறனும் பெற்ற நர்ஸ்கள் தேவை. மற்றபடி அனைத்து செயல்முறைகளு்ம ஒன்றுதான்.


ஏடி சிரிஞ்சுகளில் ஆபத்து ஏற்படாது என்று உறுதியாக கூறமுடியுமா?


நிச்சயமாக. கோட்பாடு அடிப்படையில் நூறு சதவீதம். ஆனால் இதனை யாராவது எடுத்து மறுசுழற்சி செயது மீண்டும் பேக் செய்து விற்கும் வாய்ப்பு உள்ளது.






கருத்துகள்