கோவிட் -19 தடுப்பு மருந்துகள் ஒரு பார்வை!
கோவிட் -19 மருந்துகள் ஒரு பார்வை!
பைசர் பயோன்டெக்
கோவிட் -19 நோய்த்தொற்றுக்கு முன்னரே ஃப்ளூ வைரசிற்காக இதேபோன்ற மருந்தை ஆர்என்ஏக்கு தயாரித்த நிறுவனம் இது.
மூன்று நிலைகளிலும் சோதனைகள் முடிந்துவிட்டன. சோதனை முடிவுகள் டிசம்பரில் வெளியாகவிருக்கின்றன. இங்கிலாந்தில் அரசுடன்இணைந்து அவசர நிலைக்கு மருந்துகளை பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.
மூன்றாவது நிலை சோதனையில் 44 ஆயிரம் மக்களுக்கு சோதிக்கப்பட்டதில் 95 சதவீதம் திறனுடன் செயல்பட்டது. தலைவலி, உடல் பருமன் ஆகிய பிரச்னைகள் சிலருக்கு ஏற்பட்டன. வேறு தீவிர பிரச்னைகள் ஏற்படவில்லை.
நடப்பு ஆண்டில் 50 லட்சம் மருந்துகள் தயாரிக்கப்படுவதாக கூறப்படுகின்றன. மாசம் முடியப்போகுதே எப்போது என்று கேட்க கூடாது. அடுத்த ஆண்டு நூறு கோடிக்கும் அதிகமாக மருந்துகள் தயாரிக்கப்படவிருக்கின்றன. ஒரு மருந்து பாட்டிலின் விலை ரூ. 1440 வரும். மருந்தை மைனஸ் 70 டிகிரி செல்சியஸில் வைத்து பராமரிக்கவேண்டும்.
ஆஸ்ட்ராஸெனிகா ஆக்ஸ்போர்டு
மூன்றாவது நிலை சோதனையில் 23 ஆயிரம் மக்கள் பங்கேற்றனர். இந்த சோதனை வரும் டிச. 22 முடிவடைகிறது. இடைக்கால முடிவுகள் வெளியாகியுள்ளன. இருபது லட்சம் டோஸ் மருந்துகளை சீரம் இன்ஸ்டிடியூட் தயாரித்து விட்டது. இதனை இந்திய மருத்துவ தலையகமும் அங்கீகரித்துவிட்டது.
பாதுகாப்பு
70. 4 சதவீதம் திறன் கொண்ட மருந்து. 1,077 பேருக்கு மருந்து செலுத்தப்பட்டதில் பலருக்கு்ம நோய் எதிர்ப்பு சக்தி கூடியது. இங்கிலாந்து அரசு தற்காலிகமாக இந்த மருந்துக்கு அனுமதியை வழங்கியுள்ளது.
அடுத்தாடு ஒரு கோடி மருந்து டோஸ்கள் மக்களுக்கு வழங்கப்படவிருக்கின்றன.
ஒரு டோஸ் மருந்தின் விலை ரூ. 600 வரும். 2-8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் பராமரிக்கவேண்டும். அரசு இதனை பாதி விலையில் பெற்று மக்களுக்கு வழங்கலாம்.
மாடெர்னா
டிசம்பர் 2020இல் மூன்றாவது கட்ட சோதனை முடியவிருக்கிறது. இதில் 30 ஆயிரம் மக்கள் பங்கேற்றனர். இடைக்கால பரிசோதனை முடிவுகள் வெளியாகியிருக்கின்றன.
திறன் பாதுகாப்பு
இம்மருந்தின் திறன் 94.5 சதவீதமாக உள்ளது. உடல் பருமன், ஊசிபோட்ட இடத்தில் வலி, தலைவலி ஆகிய பக்கவிளைவுகள் உள்ளன. நடப்பு ஆண்டின் இறுதியில் 20 லட்சம் டோஸ்கள் தயாரிக்கபடும் என்று தெரிகிறது. நூறு கோடிக்கும் அதிகமாக டோஸ்கள் அடுத்த ஆண்டு தயாரிக்கப்படவிருக்கின்றன. 2-8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் இருந்தால் போதுமானது. அமெரிக்காவில் 19.50 டாலர்களாக விற்கப்படுகிறது.
கருத்துகள்
கருத்துரையிடுக