இடுகைகள்

டிடெக்டிவ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஜோம்பி தனது கடந்தகாலத்தை தானே டிடெக்டிவ்வாகி கண்டறியும் கதை!

படம்
              ஜோம்பி டிடெக்டிவ் கொரிய தொடர் ராகுட்டன் விக்கி மருத்துவக் கழிவு கொட்டிக்கிடக்கும் இடத்தில் இருந்து ஒரு உருவம் எழுகிறது . அதுதான் நாயகன் காங் மின்கோ . எழுந்தவர் சிகரெட் பிடிக்கிறார் . வாயில் புகைவிட நினைத்தால் வயிற்றில் உள்ள ஓட்டை வழியாக புகை வெளியே செல்கிறது . அப்போதுதான் அவர் வயிற்றில் துப்பாக்கியால் சுடப்பட்டிருப்பதை உணர்கிறார் . அங்கிருந்த கண்ணாடியில் முகத்தைப் பார்த்தால் அதிர்ந்துபோ கிறார் . இறந்து புதைக்கப்பட்டவர் மீண்டும் உயிர் வந்தால் உடல் சதைகள் எப்படி சிதைந்து கிடக்கும் . அப்படித்தான் அவர் உடல் முழுக்க பஞ்சர் ஒட்டியது போல சதைகள் கிழிந்து ஒ ட்டுப்போடப்பட்டது போல உள்ளன . சுருக்கமாக வாழும் பிணம் . அதாவது ஜோம்பி . அவருக்கு தான் யார் , பெயர் , ஆதார் எண் , வங்கியில் கொடுத்த பான் எண் , வீட்டு முகவரி என எதுவுமே நினைவில்லை . தான் யார் , எப்படி கொல்லப்பட்டோம் . ஏன் ஜோம்பி ஆனோம் என்ற உண்மையை மெல்ல கண்டுபிடிக்கிறார் . இந்த கதையை நகைச்சுவையாக கூறியிருக்கிறார்கள் . அடுத்த பாகம் தொடங்கி ஒளிபரப்பப்பட்டாலும் ஆச்சரியப்பட ஏதுமில்லை . காங் சன்ஜ

மாஃபியா உதவியுடன் குற்றவழக்குகளை ஆராயும் கேம்பிரிட்ஜ் பட்டதாரி!

படம்
  மை ரூம்மேட் இஸ் டிடெக்டிவ் சி டிராமா ராக்குட்டன் விக்கி 36 எபிசோடுகள் பார்க்க நன்றாகவே இருக்கின்றன. தலைப்பு சற்று பொருந்தி வரவில்லை. கொரிய டிராமாக்களைப் பார்த்து இப்படி தலைப்பு வைப்பார்கள் போல. லூ யாவோ என்பவரைத் தேடி காவல்துறை நிறையப் பேர் வந்திருக்கிறார்கள். தூங்கி எழுந்தவர், ஐயையோ என தப்பி ஓடுகிறார். ஆனால் எதிரே வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சியோவோ, லூவின் மூக்கில் குத்தி அவரை லாக்கப்ப்பிற்கு அழைத்து செல்கிறார். வழக்கு இதுதான். அவர் தொழிலதிபர் ஒருவரை கொன்றிருக்கிறார் என காவல்துறை சந்தேகப்படுகிறது. முன்தினம் நடந்த விருந்தில், லூ கடன் கொடுத்த தொழிலதிபரை திட்டியது   அனைவருக்கும் தெரிந்த செய்தியாகிவிடுகிறது. எனவே, காவல்துறை லூவை முக்கிய குற்றவாளியாக கருதுகிறது. லூ, சாசோன் என்ற வெளிநாட்டு வங்கியில் பணியாற்றுகிறார். தனது மீதுள்ள குற்றத்தை அவரே துடைப்பதோடு குற்றவாளியையும் கண்டுபிடித்து கொடுக்கிறார். அதிலிருந்து இன்ஸ்பெக்ட்ர் சியோவோ, ஆலோசகர் லூ யாவோ, பத்திரிகையாளர் பாய் யூனிங் ஆகிய மூவரும் கூட்டணி போட்டு குற்றங்களை கண்டுபிடிக்க தொடங்குகிறார்கள். கேம்ப்ரிட்ஜில் பட்டம் பெற்ற லூ, வாடகை

பெலுடா கதைகள் - பம்பாய் கொள்ளையர் மற்றும் தங்கக்கோட்டை!

படம்
புத்தக விமர்சனம் பம்பாய் கொள்ளையர்கள் - தங்க கோட்டை சத்ய ஜித்ரே பெலுடா தொடர்கதை வரிசை தமிழில்: வீ.பா. கணேசன் பாரதி புத்தகாலயம் இரண்டு நாவல்களும் சந்தேஷ் என்ற பத்திரிகையில் தொடராக வெளிவந்த துப்பறியும் கதைகள்தான்.  பெலுடா, தபேஷ் என்ற இருவர்தான் இதில் நாயகர்கள். பெலுடா  எனும் பிரதேஷ் மித்தர் புகழ்பெற்ற உண்மை ஆய்வாளர். இவரின் உறவினர், சிறுவன் தபேஷ். பம்பாய் கொள்ளையர்கள் கதையில் எழுத்தாளர் லால்மோகன், ஒரு கதை எழுதுகிறார். அதில் மும்பையிலுள்ள சிவாஜி கோட்டை பற்றி பெலுடா தகவல் கொடுக்க, கடத்தல் கும்பல் தங்கியிருப்பதாக எழுதிவிடுகிறார். இதனைப் படிக்கும் கடத்தல்காரர், அவரைப் பின்தொடர்கிறார். அப்போது, அதிர்ஷ்டவசமாக அவரது கதையை படமாக தயாரிக்க மும்பையைச்சேர்ந்த கோரே என்ற தயாரிப்பாளர் இசைகிறார். அதற்கு மும்பைக்குச் செல்லும்போது, அவரின் கையில் சன்யால் எனும் மற்றொரு படத்தயாரிப்பாளர் பார்சல் ஒன்றை கொடுக்கிறார். அதனை மும்பையில் சிவப்பு சட்டைக்கார ரிடம் ஒப்படைக்கிறார். ஆனால் இப்பணியை பெலுடா விரும்பவில்லை. எழுத்தாளர் லால்மோகன் சின்ன உதவிதானே, அடுத்த கதையை சன்யால் வாங்கிக்கொள்கிறார் என