இடுகைகள்

ஆடை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஓப்பன் மைண்ட்ஸ் 2023 - கர்நாடக இசைக்கலைஞர் சஞ்சய், ஆடைவடிவமைப்பாளர் சப்யாச்சி முகர்ஜி

படம்
  சஞ்சய் சுப்ரமணியன், கர்நாடக இசைக்கலைஞர் சப்யாச்சி முகர்ஜி,ஆடை வடிவமைப்பாளர் சப்யாச்சி வடிவமைத்த சேலை- நடிகை பூர்ணா ஜகந்நாதன் ஓப்பன் மைண்ட்ஸ் 2023   சஞ்சய் சுப்ரமணியம் 55 கர்நாடக இசைப் பாடகர். கர்நாடக இசைப்பாடகர். வெள்ளை வேஷ்டி கட்டிக்கொண்டு உட்கார்ந்து பாடினால், அதை ரசிக்க பல்லாயிரம் இசை ரசிகர்கள் சபாக்களில் கூடிவிடுகிறார்கள். சஞ்சய்யின் ஆலாபனை க்கு பிரபல்யம் அதிகம். சபாக்களில் பாடுவது, இணையத்தில் இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடல்களில் உள்ள ராகங்களை சுட்டிக்காட்டி பாடுவது, யூட்யூபில் சிறு கச்சேரிகள் செய்வது, ஸடூடியோ கச்சேரி செய்வது என துடிப்புடன் இயங்கி வருகிறார். அண்மையில் கோக் ஸ்டூடியோ தமிழில் பாடகர் அரிஃபுல்லா ஷா ரபியுடன் இணைந்து பாடியிருந்தார். எதிர்காலத்தில் இதுபோல புதுமையான முயற்சியில் பங்கெடுப்பதாக கூறியுள்ளார். ஃபால்குனி ஷா 42 இசை அமைப்பாளர் பாடகியாக தொடங்கி இசையமைப்பாளராக வளர்ச்சி பெற்றவர். ஜெய்ப்பூர் கரானவில் பயிற்சி பெற்றவர், 2000ஆம் ஆண்டில் அமெரிக்காவிற்கு சென்றார். அங்கு இசையமைப்பாள் ஏஆர் ரஹ்மான், யோ யோ மா, வைகிளெஃப் ஜீன், ரிக்கி மார்ட்டின் என ஏராளமான இச

மறுசுழற்சி செய்யப்படாத ஆடைகளால் ஏற்படும் சூழல் பாதிப்பு!

படம்
  மறுசுழற்சி செய்யப்படாத ஆடைகள் உலோகங்கள், வேதிப்பொருட்கள், சிமெண்ட் ஆகிய நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் முக்கிய பொருட்கள் கரிம எரிபொருட்களை சார்ந்தே இருக்கின்றன. இவற்றை உற்பத்தி செய்யும் செயல்முறையில் பெருமளவு பசுமை இல்ல வாயுக்கள் வெளியாகின்றன. 0.98 டன்   ஸ்டீலை உற்பத்தி செய்யும்போது 1.87 டன் கார்பன் டை ஆக்சைடு வாயு வெளியாகிறது. இப்படி வெளியாகும் வாயுவை குறைக்க முடியாது. ஏனெனில் ஸ்டீல், சிமெண்ட் என இரண்டுமே நகரங்களைக் கட்டமைப்பதில் முக்கியமானவை. இவற்றுக்கு மாற்று இன்றுவரை வெற்றிகரமாக அமையவில்லை. எனவே, காற்றில் வெளியாகும் கார்பன் என்பது மென்மேலும் அதிகரித்துக்கொண்டே வருகிறது.   கனரக தொழில்துறைக்கு இப்போதைக்கு கையில் உள்ள மாற்று முறை ஸ்டீம் மீத்தேன் ரீஃபார்மிங் எனும் முறைதான். இதில் ஹைட்ரஜன் பயன்படுத்தப்படுகிறது. உலகளவில் கனரகத் தொழில்துறை 22 சதவீத கார்பன் டை ஆக்சைடு வெளியீட்டிற்கு காரணமாக உள்ளது. இதை மட்டுமே குறையாக கூற முடியாது. ஜவுளித்துறையிலும் அதிக சூழல் பாதிப்பு உள்ளது. ஆடைகளைப் பற்றிப் பார்ப்போம். இங்கிலாந்தில் விற்கப்படும் எண்பது சதவீத ஆடைகள் மறுசுழற்சி செய்யப்படுவ

அழகு மற்றும் ஆடைகளை விற்கும் மசாபா குப்தாவின் ஹவுஸ் ஆஃப் மசாபா! - ஃபார்ச்சூன் 40/40

படம்
  மசாபா லவ் சைல்ட் லிப்ஸ்டிக் வடிவமைப்பாளர் மசாபா குப்தா மசாபா குப்தா நிறுவனர் ஹவுஸ் ஆஃப் மசாபா   ஆடை வடிவமைப்பாளர், எழுத்தாளர், நடிகர் என பல பரிமாணங்களைக் கொண்டவர் மசாபா குப்தா. அவரின் நிறுவனம்தான் ஹவுஸ் ஆஃப் மசாபா. இந்த நிறுவனம், லவ் சைல்ட் என்ற பெயரில் அழகு சாதனப் பொருட்களை தயாரித்து விற்கிறது. இந்த பொருட்கள் சல்பேட், பாரபீன் போன்ற வேதிப்பொருட்கள் கலப்பில்லாதவை. வீகன் முறையில் தயாரிக்கப்படுபவை. 75 நாடுகளுக்கு மசாபாவின் அழகு சாதனப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. ஹவுஸ் ஆஃப் மசாபா கடைகளில், லவ் சைல்ட் அழகு சாதனப் பொருட்கள் விற்கப்படுகின்றன. கடைகளில் வாங்க முடியாதவர்கள் இணையத்தில் உள்ள கடைகளில் வாங்கிக்கொள்ளலாம். லவ் சைல்ட் பிராண்டில் அடுத்ததாக நிறைய பொருட்கள் வெளியாக உள்ளன. மும்பையில் தனது கடையைத் தொடங்கவுள்ள மசாபாவுக்கு ஆதித்ய பிர்லா நிறுவனம் கைகொடுத்துள்ளது. இந்த நிறுவனம், மசாபாவின் ஹவுஸ் ஆஃப் மசாபா நிறுவனத்தில் 51 சதவீத பங்குகளை வாங்கியுள்ளது. இதனால், மசாபாவின் அழகு சாதனப் பொருட்கள், ஆடைகளை ஆதித்ய பிர்லாவின் கடைகளிலும் பெற முடியும். 2022இல் நெட்பிளிக்ஸில் வெளியா

காந்தியின் அடிப்படை சிந்தனைகளை உருவாக்கிய நகரம்!

படம்
  காந்தி படிக்கச்சென்ற இங்கிலாந்தின் லண்டன் நகரம் . அந்த நகரம்தான் ஆங்கில தேசத்தின் சட்டங்களோடு அவரின் மனவலிமையையும் திடமாக உருவாக்கிய இடம் . இங்கு அவர் படித்த மத ரீதியான நன்னெறி நூல்களும் , சந்தித்த நூல்களும் காந்தி என்ற அடையாளத்தை வலிமையாக்கின . அதைப்பற்றி விரிவாகப் பார்ப்போம் . வைஷ்ணவ குலத்தில் பிறந்த காந்தி இந்து , சமணம் ஆகிய மதத்தினரின் பல்வேறு சடங்குகளை அறிந்துகொள்ள அவரது அம்மாவே காரணம் . லண்டன் நகரில் வழக்குரைஞர் படிப்பிற்காக தங்கியிருந்த காலகட்டம் அவரை சிந்தனையாளராக மாற்றியது . வாழ்க்கை முழுமைக்குமான லட்சியவாத கருத்துகளை அவர் லண்டனில்தான் பெற்றார் . 1888-1891 ஆண்டில் லண்டனில் சட்டம் படிக்க வழக்குரைஞராக காந்தி சென்றார் . பிறகு , 1906-1931 காலகட்டத்தில் , அரசியல் காரணங்களுக்காகவும் பணிக்காகவும் நான்கு முறை காந்தி பயணித்தார் . இந்தியா காலனி தேசமாக இருந்தது . இ்ங்கிலாந்து அதனை ஆண்டு வந்த பேரரசு . இதனால் லண்டன் நகரம் பல்வேறு முக்கியமான தலைவர்கள் வந்து செல்லும் இடமாக புகழ் பெற்றிருந்தது . காந்தி முதல்முறையாக லண்டனுக்கு வந்தபோது தன்னோடு டைரி ஒன்றை வைத்திருந்தார் . அதில் பல்வேறு குறிப்

மனதிற்கு பிடித்த விஷயத்தை செய்தால் வெற்றி! ஸ்கை க்ரூ நிறுவனர், மலோபிகா

படம்
  மலோபிகா பானர்ஜி எம்ஜே  பாடகர், நடிகர், பாடலாசிரியர் ஸ்கைக்ரூ நிறுவனர் மலோபிகாவின் பெயருக்கு பின்னே இருக்கும் அத்தனையும் நிஜம். அவ்வளவு ஆர்வமாக பல்வேறு வேலைகளை செய்துவருகிறார். ஸ்கை க்ரூ என்பது அவரின் ஆடை நிறுவனமாகும். பாரம்பரிய இழைகளில் தேவையான திருத்தங்களோடு கஸ்டமைஸ்டு உடைகளை தைத்து கொடுப்பது இவரது நிறுவன பாணி.  உள்ளூர் சார்ந்த விஷயங்களை முக்கியமாக நினைக்கிறார். ஆர்வமும், அர்ப்பணிப்புமான தனது நிறுவனத்தை வளர்ச்சியடையச் செய்ய உழைத்து வருகிறார்.  உங்களின் ரோல்மாடல் யார்? என்னுடைய குடும்பம்தான் என்னுடைய ஊக்கசக்தி, ஆற்றல் அனைத்துமே. சரியாக வேலை செய்தால் முடிவுகள் சிறப்பாக இருக்கும் என என் அம்மா கொடுக்கும் ஊக்கம் அற்புதமானது. இதனால் நான் நினைத்த இலக்குகளை எதிர்காலத்தில் அடைவேன் என நம்புகிறேன்.  மன அழுத்தத்தை எப்படி சமாளிக்கிறீர்கள்? பொதுமுடக்க காலத்தைப் பற்றி கேட்கிறீர்கள். நான் அப்போது சமையல் செய்துகொண்டிருந்தேன். அதுதான் மன அழுத்தத்தை போக்கும் ஒரே வேலையாக இருந்தது. காய்கறியை சீராக ஒன்றுபோல வெட்டுவது எனக்கு பிடித்திருந்தது. மன அழுத்தம் வரும்போது நடனமாடுவது எனக்கு பிடித்தமானது. இது உடலையு

காஷ்மீரில் உருவாகும் தொழில்முனைவோர்கள்!- சுயதொழிலில் ஆர்வம் காட்டும் பெண்கள்!

படம்
  பெண் தொழில்முனைவோர் காஷ்மீரில் தொழிலை நடத்துவது கடினமானது. தீவிரவாதிகள் தொல்லை, அரசின் இணையத்தடை ஆகியவை அங்கு தொழில் நடத்தலாம் என்று நினைத்தவர்களைக் கூட எண்ணத்தை மாற்றும்படி செய்திருக்கிறது. இதில் தப்பி பிழைத்து விடாமுயற்சிய செய்தவர்கள் மட்டுமே இப்போது காஷ்மீரில் வெற்றி பெற்றுள்ளனர்.  சாடியா முஃப்டி அப்படிப்பட்டவர்தான். அறிவியல் பட்டப்படிப்பு படித்தவருக்கு ஸ்ரீநகரில் இரண்டு டிசைனர் பொட்டிக் கடைகள் உள்ளன. இவற்றை உருவாக்குவதற்கு அவர் மிகவும் போராடியிருக்கிறார். இதற்கு ஐந்து ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது. ஜெகாங்கீர் சௌக், ஹஸ்ராத்பால் எனும் இரு இடங்களில் ஹேங்கர்ஸ் தி குளோஸெட் என்ற பெயரில் கடைகள் செயல்பட்டு வருகின்றன.  முஃப்டி தான் வெற்றி பெற்றதே போதும் என்று இருக்காமல், ஏராளமான பயிற்சி வகுப்புகளை எடுத்து வருகிறார். இவரை முன்னுதாரணமாக கொண்டு பல்வேறு பெண்கள் இத்தொழிலை செய்வதற்கு தயாராகி வருகின்றனர். பெண்கள் பெரும்பாலும் அரசு வேலைக்கு போகாதநிலையில் ஆடை வடிவமைப்பு தொழில் அவர்களை ஈர்த்து வருகிறது.  கொரோனா கால பொதுமுடக்கம், வேலைவாய்ப்பின்மை, இணைய முடக்கம், அரசியல் பிரச்னைகள் என அங்குள்ள தொழில்

கார்பன் வெளியீட்டைக் குறைக்கும் பல்வேறு நிறுவனங்களின் முயற்சி! - உணவு, ஆடை ஆகியவற்றில் பரவும் புதிய பாணி

படம்
                  சூழலுக்கு உகந்த பொருட்களைப் பயன்படுத்தும் உலகம் ! கடந்த மார்ச்சில் ஆங்கிலேயரான ஸ்டெல்லா மெக்டார்டினி தன்னுடைய உடையில் மைலோ காளான்களை பயன்படுத்தினார் . இதுதான் உலகில் முதல் சூழலுக்கு உகந்த பொருள் என்று கூறப்படுகிறது . ஆய்வகத்தில் வளர்க்கப்படும் மைசீலியம் என்ற பொருளைப் பயன்படுத்தி தோலுக்கு பதிலாக இதனை உருவாக்கியுள்ளனர் . எதற்கு இந்த முயற்சி , சூழலில் ஏற்படும் மாசுபாடுகளை குறைக்கும் முயற்சிதான் . பெரும் ஃபேஷன் பிராண்டுகளும் இந்த முயற்சியில் இணைந்துள்ளன . பிரெட்டில் பயன்படுத்தும் சீஸைக்கூட பாலிலிருந்து தயாரிக்காமல் அதனை தாவர புரதம் சார்ந்து உருவாக்கி பயன்படுத்தினால் கார்பன் வெளியீடு குறையும் என கண்டுபிடிப்பாளர்கள் மூலையில் உட்கார்ந்து யோசித்து செயல்படுத்தி வருகிறார்கள் . விலை சற்று அதிகமாக இருந்தாலும் சூழலுக்கு அதிக மாசுபாடு ஏற்படுத்தாத பொருள் என்பதில் பெருமை கொண்டவர்களாக இருக்கிறார்கள் . இந்தியாவில் இப்படி சூழலுக்கு உகந்த இறைச்சியை தயாரிக்கும் பல்வேறு பிராண்டுகள் உருவாகியுள்ளன . எவால்வ்டு புட்ஸ் , வெஜ்ஜி சாம்ப் , குட் டாட் , வெஸ்லே , வெஜி