அழகு மற்றும் ஆடைகளை விற்கும் மசாபா குப்தாவின் ஹவுஸ் ஆஃப் மசாபா! - ஃபார்ச்சூன் 40/40
மசாபா லவ் சைல்ட் லிப்ஸ்டிக் |
வடிவமைப்பாளர் மசாபா குப்தா |
மசாபா குப்தா
நிறுவனர்
ஹவுஸ் ஆஃப்
மசாபா
ஆடை வடிவமைப்பாளர்,
எழுத்தாளர், நடிகர் என பல பரிமாணங்களைக் கொண்டவர் மசாபா குப்தா. அவரின் நிறுவனம்தான்
ஹவுஸ் ஆஃப் மசாபா. இந்த நிறுவனம், லவ் சைல்ட் என்ற பெயரில் அழகு சாதனப் பொருட்களை தயாரித்து
விற்கிறது.
இந்த பொருட்கள்
சல்பேட், பாரபீன் போன்ற வேதிப்பொருட்கள் கலப்பில்லாதவை. வீகன் முறையில் தயாரிக்கப்படுபவை.
75 நாடுகளுக்கு மசாபாவின் அழகு சாதனப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. ஹவுஸ் ஆஃப்
மசாபா கடைகளில், லவ் சைல்ட் அழகு சாதனப் பொருட்கள் விற்கப்படுகின்றன.
கடைகளில்
வாங்க முடியாதவர்கள் இணையத்தில் உள்ள கடைகளில் வாங்கிக்கொள்ளலாம். லவ் சைல்ட் பிராண்டில்
அடுத்ததாக நிறைய பொருட்கள் வெளியாக உள்ளன.
மும்பையில்
தனது கடையைத் தொடங்கவுள்ள மசாபாவுக்கு ஆதித்ய பிர்லா நிறுவனம் கைகொடுத்துள்ளது. இந்த
நிறுவனம், மசாபாவின் ஹவுஸ் ஆஃப் மசாபா நிறுவனத்தில் 51 சதவீத பங்குகளை வாங்கியுள்ளது.
இதனால், மசாபாவின் அழகு சாதனப் பொருட்கள், ஆடைகளை ஆதித்ய பிர்லாவின் கடைகளிலும் பெற
முடியும்.
2022இல் நெட்பிளிக்ஸில்
வெளியான மசாபா மசாபா தொடரில் நடித்து வருபவர் வடிவமைப்பாளர் மசாபா குப்தாதான். இதுவும்
மசாபாவை உலகமெங்கும் பிரபலப்படுத்தியுள்ளது.
ஆர்னிகா தாகூர்
கருத்துகள்
கருத்துரையிடுக