கிரியேட்டிவிட்டியை அடையாளம் காண்பது எப்படி? - சில அறிவுறுத்தல்கள்....

 








புதுமைத்திறன் உலகம்

கிரியேட்டிவிட்டியை உருவாக்கிட பிறருக்கு தெரியாத கலை வடிவம் ஏதும் கிடையாது என எழுத்தாளர் ரிக் ரூபின் கூறுகிறார். இவர் இதுபற்றி, தி கிரியேட்டிவ் ஆக்ட் – எ வே ஆஃப் பீயிங் என்ற நூலை எழுதியிருக்கிறார்.’’ நீங்கள் கிரியேட்டிவிட்டியை நாடகம் போல எடுத்துக்கொண்டு முன்னேறி செல்லுங்கள். நிஜ உலகைப் போலவே அனைத்து விஷயங்களையும் உருவாக்குங்கள். அது சிறியதாக அல்லது  வினோதமாக கூட இருக்கலாம். புதிய பரிசோதனை முயற்சிகளை செய்து பாருங்கள். உங்கள் நண்பர்களுக்கு நீங்கள் உருவாக்கியதை காட்ட நினைத்தால் உலகில் அதை வெளியிடலாம்.’’ என்பது இவரது கருத்து.

தனி பார்வை

‘’உங்களுக்கென தனி பார்வையை உருவாக்கிக்கொள்ளுங்கள்’’ என ஒளிப்பதிவாளர் ரோஜர் டீக்கின்ஸ் கூறுகிறார். இவர் 50 திரைப்படங்களைப் பார்த்து அதன் வழியாக தனக்கான கிரியேட்டிவிட்டி பாதையை உருவாக்கிக்கொண்டார். தன்னை வழிநடத்திய திரைப்படங்களாக எ பியூட்டிஃபுல் மைண்ட் தொடங்கி 1917 என்ற திரைப்படங்கள் வரை குறிப்பிடுகிறார்.’’யாரையும் நகல் செய்யாதீர்கள்’’ என்றும் குறிப்பிட மறக்கவில்லை.

ஆற்றலின் பிரதிபலிப்பு

‘’நான் திரைப்படங்களுக்கான நடிகர்களை அடையாளம் காண முயன்றபோது, அவர்களை மட்டுமல்ல, அவர்களிடமிருந்து வெளிப்பட்ட ஆற்றலையும் அடையாளம் கண்டேன். அவர்களும் என்னை அடையாளம் கண்டார்கள். அதனால்தான் நாங்கள் அனைவரும் ஒன்றாக வேலை செய்ய முடிந்தது. நாங்கள், வெளியிட்ட ஆற்றல் மூலம் ஒருவருக்கொருவரை பிரதிபலித்தோம் ‘’ என்றார் திரைப்பட நடிகர் தேர்வு இயக்குநர் ஜெனிஃபர் வெண்டிடி..

எளிமை

‘’மிக கடுமையான முயற்சி செய்துகாட்ட அவசியமில்லை. செய்யும் விஷயங்கள் எளிமையாக இருந்தாலே போதுமானது. பிறரைவிட பெரிய புத்திசாலியாக இருப்பது இங்கு முக்கியமில்லை’’ என்கிறார் எழுத்தாளர் லூசி சான்ட். இவர் ‘லோ லைஃப் – லுர்ஸ் அண்ட் ஸ்னேர்ஸ் ஆஃப் ஓல்ட் நியூயார்க்’ என்ற நூலை எழுதியுள்ளார்.

 

‘’எனது உடலில் எண்டோர்பினை சுரக்கவைக்க ஜிம்மிற்கு செல்கிறேன். மனநிலையை மாற்றிக்கொள்ள பிடித்த நாவல்களை வாசிக்கிறேன். உங்களை ஸ்மார்ட் ஆன ஆளாக மாற்றிக்கொள்ள போதைப்பொருட்களை நாடாதீர்கள். அது பைத்தியக்காரத்தனம். போதைப்பொருள் உங்களை இப்போதுள்ளதை விட ஸ்மார்ட்டான ஆளாக மாற்றாது’’ என்கிறார் வெல்வெட் அண்டர்கிரவுண்ட் நிறுவனத்தின் துணை நிறுவனர் ஜான் கால்.

‘குறித்து வைத்துக்கொள்ளுங்கள்’

‘’நான் எனது ஸ்மார்ட்போனை குளிக்கும்போது கூட அருகில் வைத்திருப்பேன். திடீரென தோன்றும் ஐடியாக்களை அதில் குறித்து வைத்து எனக்கு மின்னஞ்சல் அனுப்பிவைத்துக்கொள்வேன். மின்னனஞ்சலை படிக்காமல்  உள்ள மின்னஞ்சல் பட்டியலில் சேமித்து அன்றைய நாளின் முடிவில் அதை படித்துப் பார்ப்பேன். நல்ல ஐடியாக்கள் என்றால் அதை சோதித்துப் பார்ப்பேன்’’ என்கிறார் அமெரிக்காவின் பிரபல சமையல் கலைஞரான கால்வின் இங்க்.

ஆராய்ச்சி முக்கியம்

‘’ஒரு வடிவமைப்பாளராக, தேடும் கேள்விகளுக்கான பதில்களை பெறுவதற்கு ஆராய்ச்சி செய்கிறேன். சில சமயங்களில் துறையில் நீங்கள் பெற்றுள்ள அனுபவம், மரபான ஆராய்ச்சி என்பதை முக்கியத்துவம் கொண்டதாக மாறும். இயற்கை சூழலில், கிரியேட்டிவிட்டிக்கான சிக்கல் குறையும். இந்த வகையில், அந்த சூழல் எனக்கு உதவுகிறது’’ என்றார் காலணி வடிவமைப்பாளரான சேல்ஹே பெம்புரி.

நேர்த்தி

‘’தொடக்கத்தில் நீங்கள் உருவாக்கும் பொருட்கள் நேர்த்தியானவையாக இருக்காது. அப்படி இருக்கவேண்டும் என எந்த அவசியமும் இல்லை. இந்த அனுபவங்கள் உங்களுக்கு கற்பதற்கான வாய்ப்பை அளிக்கின்றன. நீங்கள் செய்யும் விஷயங்களை தொடர்ந்தாலே அதில் கற்றுக்கொள்ள நிறைய வாய்ப்புகள் கிடைக்கும்’’ வடிவமைப்பாளர் நிக்கோல் மெக்லாகின்.

வெற்றி

‘’உங்கள் மனதில் கோட்பாடாக உள்ள சிந்தனைகளை, கைகள் படைப்பாக துல்லியத்தோடு வெளிக்கொண்டு வந்தாலே வெற்றிதான்’’ என்றார் சர்லியச ஓவியர்  அலெஜாண்ட்ரோ கார்டெனாஸ்.

GQ Magazine

image -pixabay

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்