நாங்கள் மக்களிடம் முதலீடு செய்கிறோம்! - ஶ்ரீதர் வேம்பு, இயக்குநர், ஜோஹோ

 






ஶ்ரீதர்வேம்பு, ஜோஹோ நிறுவன இயக்குநர்

ஶ்ரீதர் வேம்பு படம் - மனிகண்ட்ரோல்





ஶ்ரீதர் வேம்பு

நேர்காணல்


 

உங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் பணியாளர்கள் பலரும் புகழ்பெற்ற கல்வி நிறுவனத்தில் பட்டங்களைப் பெற்றவர்கள் அல்ல. தொழில்நுட்பத் துறையில் வேலை இல்லாமல் தவிக்கும் பட்டதாரிகளைப் பார்க்க முடிகிறது. ஒருவர், இரண்டு வேலைகள் செய்து வாழவேண்டியிருக்கிறது. திறமையானவர்களுக்கு தட்டுப்பாடு ஏறபட்டிருக்கிறதா? இந்த பிரச்னையை எப்படி பார்க்கிறீர்கள்?

சந்தையில் நிறைய நிறுவனங்கள் திறமைசாலிகளை தேடுகிறார்கள். இந்தியாவைப் பொறுத்தவரை திறமைசாலிகள் இருந்தாலும் அவர்களை வழிகாட்டி வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல யாரும் முயல்வது இல்லை. நாங்கள் அந்த பணியை செய்கிறோம். இதன் மூலம் ஊழியர்களின் திறன் உயர்கிறது. அவர்கள் எங்களோடு விசுவாசமாக பணியாற்றுகிறார்கள். இவர்கள் மூலமே எங்கள் நிறுவனத்தின் வளர்ச்சியும் உயர்கிறது. நாங்கள் தொழிலில் முதலீடு செய்வதை விட மக்களின் மீது முதலீடு  செய்கிறோம்.

மூன்லைட்டிங் (இரு நிறுவனங்களில் பணிகளை செய்வது) பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பொறியாளர் ஒருவர் ஒரு நிறுவனத்தில் இருந்துகொண்டு யூட்யூப் சேனல் நடத்துவது, ட்விட்டர் கணக்கில் கருத்துகளை பதிவிடுவது என்பது இயல்பான போக்காக இருக்கிறது.

 ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்துவிட்டு மற்றொரு நிறுவனத்திற்காக பணியைச் செய்வது என்பது, நம்பிக்கையை குலைக்கும் செயல்தான். இதை தனிநபராக முழுமையாக தீர்மானித்து கூறமுடியாது. நான் தனியார் நிறுவனத்தின் இயக்குநராக இருக்கிறேன். இதைத் தவிர்த்து கிராமங்களின் மேம்பாடு பற்றி பேசி வருகிறேன். ஜோஹோ நிறுவனத்தைப் பொறுத்தவரையில் உங்களில் பொது அறிவைப் பயன்படுத்த வேண்டியது அவசியம். அதுதான் எங்கள் கொள்கை.

உங்கள் தந்தை,சென்னை உயர்நீதிமன்றத்தில் ஸ்டெனோவாக பணியாற்றியவர். அவரது வாழ்க்கை உங்களது தொழில்வாழ்க்கையில் செல்வாக்கு செலுத்தியுள்ளதா?

நிச்சயமாக. என்னுடைய வாழ்க்கையில் மதிக்கும் விஷயங்கள் அனைத்துமே பெற்றோரிடமிருந்து வந்தவைதான். என்னுடைய அப்பா, தனது சம்பளத்திற்கேற்ப அடக்கமான வாழ்க்கையை வாழ்ந்தார் என்றால் நானும் அப்படித்தான் வாழ வேண்டுமா என்ற கேள்வி எனக்குள் உருவானதுண்டு.

அப்பாவின் வருமானம் பெரியளவு இல்லை என்றாலும், அவர் கடனே வாங்காமல் தான் வாழ்க்கையை நடத்தினார். அவரின் கொள்கை எனக்குள் படிந்துபோய்விட்டது. இதனால் பணம் என்பதும், என்னுடைய வாழ்க்கை என்பதும் தனியாக மாறிவிட்டன. பணத்தை வைத்து சமூகத்திற்கு ஏதாவது செய்யலாமே என்று எண்ணம் உருவாகிவிட்டது.

இப்போது நான் கிராமத்தில் வாழ்ந்து வருகிறேன்.  இங்கு உள்ள பிரச்னைகளை சீர் செய்ய என்னிடமுள்ள பணத்தை பயன்படுத்துகிறேன். இதைக் கடந்து பணத்தின் மீது தனிப்பட்ட ஆர்வம் ஏதுமில்லை. நான் என்னுடைய பெற்றோருக்கு உண்மையான மகனாக இருக்க நினைக்கிறேன். எனவே, என்னுடைய செல்வத்தை பிறருக்கு வெளிக்காட்ட விரும்பவில்லை.

நீங்கள் தொழிலதிபராக இருந்தாலும் உங்களது சொத்துகளை பிறருக்கு காட்டவிரும்பவில்லை. அதில் ஏதாவது அதிருப்தி உள்ளதா?

பணத்தை நிர்வாகம் செய்யும் பொறுப்பிலுள்ள மனிதர்களாக இருக்கிறோம். எனது குடும்பத்தின் பொறுப்பில் குறிப்பிட்டளவு நிதி உள்ளது. நாங்கள், அதை சமூகத்தின் நல்ல விஷயங்களுக்கு பயன்படுத்துகிறோம். இந்த விஷயத்தை நான் இப்படித்தான் பார்க்கிறேன். நான் வளர்ந்து வந்த பின்னணியில், என்னிடமுள்ள செல்வத்தை பிறருக்கு வெளித்தெரியும்படி காட்ட விரும்பவில்லை.

 

உதயம் முகர்ஜி

பிஸினஸ் டுடே

 





கருத்துகள்

பிரபலமான இடுகைகள்