குறிப்பிட்ட பகுதியில் உள்ள கொழுப்பை மட்டும் குறைக்க முடியுமா? - மிஸ்டர் ரோனி
உடலின் குறிப்பிட்ட பகுதியில் உள்ள
கொழுப்பை மட்டும் குறைக்க முடியுமா?
இணையத்தில்,
நாளிதழில் கூறப்படும் செய்திகளை அடிப்படையாக வைத்து பலரும் இந்த கேள்வியைக் கேட்கிறார்கள்.
லிப்டன் டீ விளம்பரத்தில் கூட வயிற்றில் உள்ள கொழுப்பை குறைக்க டீ அருந்தினால் போதும்
என கூறுகிறார்கள். ஆனால் இதற்கு அறிவியல்ரீதியாக எந்த ஆதாரமும் இல்லை. உடலில் கொழுப்பு சேகரிக்கப்படுவது,
பின்னாளில் தேவைப்படும்போது எடுத்து பயன்படுத்திக்கொள்ளத்தான். வயிறு, தொடை, மார்பு
என அதை தனி மனிதர் தீர்மானிக்க முடியாது.
குறிப்பிட்ட இடத்தில் கொழுப்பைக் குறைத்து அந்த இடத்தில்
தசை அழகை கூட்ட நிறையப் பேர் முயல்கிறார்கள். கொழுப்பு குறைந்து உடல் ஒல்லியாவது அல்லது
குறிப்பிட்ட கட்டமைப்பிற்குள் வருவது உடல் முழுக்க நடைபெறும் ஒத்திசைவான செயல்பாடு.
உடல் எடை குறைப்பு இந்த வகையில் நடைபெற்றால்தான் ஆரோக்கியமானது.
எடை குறைப்பு என்பது குறிப்பிட்டளவில்
நின்றுவிட்டால், ஒருவர் தான் சாப்பிடும் உணவு முறையை மாற்ற வேண்டுமா?
உணவுமுறையில்
காய்கறிகள், குடிக்கும் நீர் அளவைக் கூட்டவேண்டும். உடல் எடை குறையாதபோது குறிப்பிட
எடையில் நிலைத்து இருக்க ஏற்றபடி கட்டுப்பாடான உணவுகளை பின்பற்றவேண்டும். அதாவது, என்ன
வகையான உணவு, எப்படி சாப்பிடுகிறீர்கள். உங்கள் வாழ்க்கை முறை, தொழில் ஆகியவற்றின்
மீதும் கவனம் செலுத்தவேண்டும்.
தினசரி எவ்வளவு லிட்டர் நீரைக்குடிப்பது
சரியானது?
நேஷனல் அகாடமிஸ்
ஆஃப் சயின்ஸ் , என்ஜீனியரிங் அண்ட் மெடிசின் அமைப்பின் பரிந்துரைப்படி பெண்கள் 2.7
லிட்டர், ஆண்கள் 3.7 லிட்டர் நீரை குடிக்கவேண்டும். இது தோராயமான அளவுதான். உங்களுக்கு
தாகமாக இருந்தால் சர்க்கரை உள்ள கார்பன் பானங்களை குடிப்பதை விட நீர் குடிப்பதே நல்லது.
எப்போது நீர் தேவைப்பட்டாலும் குடியுங்கள். எத்தனை லிட்டர் என கணக்குப்போடுவது ஆரோக்கியத்திற்கு
உதவாது. உடற்பயிற்சி செய்பவர்களுக்கு நீர் கூடுதலாக தேவைப்படும்.
டைம் வார
இதழ்
கருத்துகள்
கருத்துரையிடுக