இடுகைகள்

இளவரசி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மறுபிறப்பெடுத்து இரண்டாயிரம் ஆண்டுகளாக அடைத்து வைத்த தீயசக்தியுடன் போராடும் பூசாரி!

படம்
  ஃபிரம் நவ் ஆன் இட்ஸ் ஷோ டைம் ஃபிரம் நவ் ஆன், இட்ஸ் ஷோ டைம் கே டிராமா ராக்குட்டன் விக்கி இரண்டாயிரம் ஆண்டுகளாக அடைக்கப்பட்ட தீயசக்திக்கும், அதை அடைத்த பூசாரிக்குமான   ஜென்மச் சண்டை. தொன்மைக் கால கொரியா. அங்குள்ள சிற்றரசு நாடு. அதில் வாழும் தலைமை பூசாரி, பஞ்சம் தீர்க்க தனது புனித கண்ணாடியைக் கொண்டு   வேண்டிய மழையை வரவைக்கிறார். நாடு செழிப்புறுகிறது. நாட்டு மக்களும் மகிழ்கிறார்கள். அந்த நாட்டின் மன்னரின் மகள், அதாவது இளவரசி அனைவரின் முன்னிலையில் தான் பூன் சிக் என்ற தலைமை பூசாரியை காதலிப்பதாக பேனர் பிடித்து சொல்கிறாள். பூன் சிக்கிற்கு என்ன சொல்வது என்று தெரியாத நிலை, இளவரசியை தான் விரும்புகிறேன் என்று சொன்னால் அடுத்த நொடி அவரின் தலையை வெட்டி எறிந்துவிடுவார்கள். அவரின் இனத்தை   அழித்து வீடுகளை கொளுத்திவிடுவார்கள். எனவே இளவரசியிடம் அரச குல ஆட்களைப் பார்த்து மணந்துகொள்ளுங்கள். தான் தாழ்ந்த குலத்தை சார்ந்தவன் என்று கூறுகிறார். ஆனால், இளவரசி கேட்பதாக இல்லை. தலைமை பூசாரியும், இளவரசியும் குணத்தில் ஒன்று போலத்தான். தன்னை அழித்துக்கொண்டாவது பிறருக்கு நன்மை செய்பவர்கள். இதுதான் அவர்களை

இளவரசியைக் கரம்பிடித்து சுரங்க மாஃபியாவை ஒழிக்கும் போலீஸ்காரர்! - சர்தார் கப்பர் சிங் - பவன், காஜல்

படம்
  சர்தார் கப்பர் சிங் இயக்கம் பாபி (கே.எஸ்.ரவீந்திரா) கதை, திரைக்கதை, தயாரிப்பு பவர்ஸ்டார் பவன் கல்யாண் இசை ராக்ஸ்டார் டிஎஸ்பி   கப்பர் சிங் படத்திற்கு பிறகு அதேபோல தயாரிக்கப்பட்டிருக்கும் மற்றொரு படம். இங்கு கப்பார் சிங்கோடு சர்தார் கூடுதலாக சேர்கிறது. இது தனிக்கதையாக உருவாகிறது. இந்த கதையில் குடும்ப பாசம் ஏதும் கிடையாது. தொடக்க காட்சியில், திருடர் கூட்டத்தை போலீசார் விரட்டி வர,   கழுத்தில் கத்தி வைத்தாலும் கூட துணிச்சலாக அவர்களைக் காட்டிக்கொடுக்கிறான் சிறுவன் ஒருவன். அவன்தான் நாயகன். சர்தார் கப்பர் சிங். அவன் ஆதரவற்ற சிறுவனாக இருக்கிறான். அவனைப்போலவே இருக்கும் இன்னொரு சிறுவனுக்கும் அவனே பெயர் சூட்டி தனது நண்பனாக்கிக் கொள்கிறான். இவர்கள் வேறு யாராக இருக்க முடியும்? நட்பிற்கு உதாரணமான சர்தார் கப்பார் சிங்கும், அவரது நண்பரான சாம்பாவும்தான். (பவன்-அலி= நட்பே துணை ) சர்தார் கப்பர் சிங் படம், தெலுங்கு பேசும் ஆந்திரத்தில் உருவாக்கப்படவில்லை. ரந்தம்பூர் எனும் இடத்தில், இன்றும் ராஜாக்கள் தொழில்களை கையகப்படுத்தி இயற்கை வளத்தை மக்களை நசுக்கி வரும் இடத்தில்   நடைபெறுகிறது.

சிறுமிக்காக தனது வாழ்க்கையை தியாகம் செய்யும் ராணுவ வீரனின் கதை! - சீதாராமம்- ஹனு ராகவப்புடி

படம்
  சீதாராமம் - தமிழ்  துல்கர் சல்மான், மிருணாள் தாக்கூர், ராஷ்மிகா, தருண் பாஸ்கர்  இயக்குநர் ஹனுமந்த் ராகவப்புடி இசை - விஷால் சந்திரசேகர் ஒளிப்பதிவு - பிஎஸ் வினோத் தேசப்பற்று ஊற்றியெழுதிய காதல் கதை.  இதில் இரண்டு விஷயங்களைச் சொல்லுகிறார்கள். தேசப்பற்று என்பதோடு மனிதநேயம் என்பது எல்லைகளைக் கடந்தது. அதை நாம் இரும்புவேலிகளால் அடைக்க முடியாது என்பதையும், பலரின் தியாகங்களால்தான் நமக்கு உயிர்வாழும் வாய்ப்பும் சுதந்திரமும் கிடைத்திருக்கிறது.  இதை தொடர்புடையவர்களே மறந்துவிட்டால் என்னாகும் என்ற கேள்வியையும் எழுப்புகிறது.  கதை 1964 - 1985 என்ற காலகட்டத்திற்குள் நடைபெறுகிறது. அஃப்ரின் என்ற பெண்ணுக்கு அவரது தாத்தாவின் சார்பாக ஒரு கடிதம் கிடைக்கிறது. அதை அவள் கொண்டுபோய் சீதா மகாலட்சுமி என்பவரிடம் ஒப்படைக்க வேண்டும். அப்போதுதான் அவளுக்கு தாத்தாவின் சொத்து கிடைக்கும். அதை அவள் தான் மன்னிப்பு கேட்காமல் இருக்க பயன்படுத்திக்கொள்ளலாம். யாருக்காகவும் மன்னிப்புக் கேட்க கூடாது. தான் செய்வதெல்லாம் சரி என நினைப்பு கொண்டவள் அஃப்ரின்.  இங்கிலாந்தில் படித்துக்கொண்டிருக்கிறார்கள். அங்கு இந்திய அதிகாரி ஒருவரின் கார

கோப்ளின் அரசரின் மகளை மீட்கும் ஸ்கூபி டூ குழு! - ஸ்கூபி டூ அண்ட் தி கோப்ளின் கிங்

படம்
                ஸ்கூபி டூ அண்ட் தி கோப்ளின் கிங் அனிமேஷன் படம் வார்னர் பிரதர்ஸ் - ஹன்னா பார்பரா இந்த படம் மாயாஜால மந்திரங்களைக் கொண்டது . கோப்ளின் அரசரின் மகளை பிடித்து வைத்துக்கொண்டு அவரின் சக்தியைப் பெற்று அனைவரையும் அடக்கியாள நினைக்கும் மேஜிக் கலைஞரை எப்படி ஸ்கூபி டூ , சேகி தோற்கடிக்கிறது என்பதுதான் கதை .    இந்த கதையில் வெல்மாவுக்கு ஓய்வு கொடுத்துவிட்டதால் முழுக்கதையையும் தங்கள் பாணியில் ரகளையாக நகர்த்திச்செல்வது ஸ்கூபி டூ மற்றும் சேகி இணைதான் . கோப்ளின் அரசரின் இளவரசி , தோற்றுப்போன மாய தந்திரக்கலைஞரை நையாண்டி செய்கிறது . அதனை பிடித்துவிட்ட அவர் , அதன் சக்தியை வைத்து பிற மந்திரப் பொருட்களை வயதான கலைஞர் ஒருவரிடமிருந்து பெறுகிறார் . குறிப்பிட்ட தினத்தில் கோப்ளின் அரசரையும் அவரது கூட்டத்தையும் உயிர்பெறச்செய்து , அவரின் கையில் உள்ள ஆயுதத்தைப் பெற்றால் உலகத்தை ஆள முடியும் என்பது மாய தந்திரக்கலைஞரின் பேராசை . இதனை படாதபாடுபட்டு அறியும் சேகி , ஸ்கூபிடூ இணை பூசணிக்காய் ஒன்றின் உதவியுடன் சூனியக்காரிகளை சந்திக்கின்றனர் . அவர்களின் பறக்கும் துடைப்பத்தைப்