இடுகைகள்

ஸ்டெராய்டு ஆபத்து! லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆணழகும், ஸ்டெராய்டு ஆபத்தும்!

படம்
ஆணழகின் ஆபத்து! –  அர்னால்டு போல முஷ்டி மடித்து காட்டுவதும், வாரணம் ஆயிரம் சூர்யாவின் கிளாமர் சிக்ஸ்பேக்கை காப்பியடித்து மப்பாக கெத்து காட்டுவதும் ஆணழகின் பெருமைதான். ஆனால் அவர்களின் ஆண்டுக்கணக்கான உழைப்பை இரண்டே மாதங்களில் சாதிக்க அடம்பிடிக்கும்போதுதான் ஸ்டெராய்ட் நம்மைப் பார்த்து குரூரமாக புன்னகைக்கிறது. இந்தியாவில விற்கப்படும் 70% புரத சப்ளிமெண்டுகள் ஆபத்தானவை. இந்த டயட் பொருட்களில் மினரல்களும், வைட்டமின்களும்(40%) இயற்கை சப்ளிமெண்டுகளும்(30%), புரதம், அமினோ அமிலங்கள்(15%) உள்ளன என தொழில்துறை அமைப்பான அசோசெம் ஆய்வு தெரிவிக்கிறது. புரத சப்ளிமெண்டுகளில் உள்ள ஸ்டெராய்டு பிரச்னை ஒருபுறம் என்றால் இனி ஸ்லிம்ஃபிட் உடைதான் என் ஸ்டைல் என கட்டழகு கனவுடன் ஜிம்முக்குள் நுழையும் தொந்தி யூத்துகளின் கூட்டமும் அதிகரித்துவருகிறது. ஸ்டெராய்டு ஆபத்தை பலரும் கண்டுகொள்ளாததன் காரணம் இதில் புழங்கும் காசு. இந்திய ஃபிட்னெஸ் சந்தையின் மதிப்பு 4 ஆயிரத்து 500 கோடிக்கும் அதிகம். 2020 ஆம் ஆண்டு இதன் மதிப்பு 2 பில்லியனாக அதிகரிக்கும். இத்துறையில் போதியளவு கட்டுப்பாடுகள் இல்லாததால் நாட்டின