இடுகைகள்

எரிக் எரிக்சன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பிறக்கும் உயிர்களுக்கான நோக்கம் - எரிக் எரிக்சன்

படம்
  பிறந்த உயிர்களுக்கு குறிப்பிட்ட நோக்கம் இருக்கிறது. அதை நிறைவேற்றிக்கொள்ளவே உயிர்கள் முயல்கின்றன என உளவியலாளர் எரிக் எரிக்சன் கருதினார். மனிதர்களின் ஆளுமை எட்டு வகையான நிலைகளைக் கொண்டது. இந்த நிலை பாரம்பரியம், சூழல் ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டு இயங்குகிறது என்று கூறினார்.   நம்பிக்கை/ அவநம்பிக்கை - ஒரு வயது குழந்தையின் தேவைகள் நிறைவேற்றப்பட்டால் நம்பிக்கை உருவாகிறது. அப்படி நிறைவேறாதபோது அவநம்பிக்கை உருவாகிறது. இந்த அவநம்பிக்கை குழந்தையின் எதிர்கால உறவுகளைப் பாதிக்கிறது.  சுயமான இயக்கம்/ சந்தேகம், அவமானம் - பதினெட்டு மாதம் முதல் 2 ஆண்டுகள் புதிய விஷயங்களை குழந்தை செய்யத் தொடங்குகிறது. ஆனால், செய்யும் செயலில் சந்தேகம், தோல்வியானால் அவமானம் அடைகிறது. வெற்றி, தோல்வி என இரண்டையும் குழந்தை வேறுபடுத்திப் பார்க்கிறது.  செயல்/குற்றவுணர்வு - மூன்று தொடங்கி ஆறு வயது வரை குழந்தை, குறிப்பிட்ட நோக்கத்துடன் செயல்களை செய்யத் தொடங்குகிறது.இந்த காலகட்டத்தில் செய்யும் செயல்களுக்கு தரப்படும் தண்டனை, கடுமையான குற்றவுணர்ச்சியில் தள்ளுகிறது.    செயலூக்கம்/ தாழ்வுணர்ச்சி - ஆறிலிருந்து பனிரெண்டு வயது வரை இந்