இடுகைகள்

தொடர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

காலதாமதம் ஆன காதலை மீட்டெடுக்க முயலும் அறுவை சிகிச்சை வல்லுநர்!

படம்
  நாட் டூ லேட் 11 எபிசோடுகள் சீன டிராமா ராக்குட்டன் விக்கி ஆப் பள்ளிக்காலத்தில் டிங் ரான், தன்னுடன் படிக்கும் மாணவியைக் காதலிக்கிறான். அவன் அகவயமானவன். எனவே, தனது உணர்வுகளை வெளிப்படையாக உணர்த்த முடியவில்லை. அவன் காதலிக்கும் மாணவிக்கும் டிங் ரான் மீது விருப்பம்தான். காதல்தான். ஆனால், அதை அவள் வெளிப்படையாக டேட்டிங் பண்ணலாமா என்று கூறும்போது, டிங் ரான் அதை சரியாக புரிந்துகொள்ளாமல் மறுத்துவிடுகிறான். காலம் கடக்கிறது. பத்து ஆண்டுகளுக்குப் பிறகு சந்திக்கிறார்கள். இந்த முறை, டிங் ரானின் அப்பா, அவன் காதலித்த பெண்ணின் அம்மாவை மணம் செய்துகொள்ள போகிறார். இதனால் டிங்ரான், அவனது முன்னாள் காதலி என இருவருமே ஒரே வீட்டில் வாழவேண்டிய நிலை. அக்கா, தம்பி என உறவு மாறும் சூழ்நிலை. ஒன்றாக வாழும் சூழ்நிலையில் அதுவரை மறைந்திருந்த காதல் புதிதாக துளிர்விடத் தொடங்குகிறது. அதை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதே கதை.  தொடரில் மொத்தம் ஆறு பாத்திரங்கள்தான். முக்கியப்பாத்திரங்கள். அதனால் பழி, வஞ்சம், துரோகம், வன்முறை என பிரச்னை இல்லாமல் பார்க்கலாம். ரசிக்கலாம். பதினொரு எபிசோடுகள்தான். நேரமும் மிச்சம் பாருங்கள்.  டிங் ரா

பெற்றோரால் அடித்து துன்புறுத்தப்படும் சிறுவன், தற்காப்புக்கலை கற்று கொள்ளைக்காரனாக மாறும் கதை!

படம்
  நைன் ஹெவன்ஸ் ஸ்வார்ட் மாஸ்டர்  மாங்கா காமிக்ஸ் 70-- ரீட்மாங்காபேட்.காம் சிறந்த வாள் வீரனின் இரண்டாவது மனைவிக்கு பிறந்தவன் இயோன் ஜூக்கா. அம்மா பிரசவத்தின்போது இறந்துவிடுகிறார். முதல்மனைவியை விட இரண்டாவது மனைவி மீது காதல் கொண்ட அப்பா, மனைவி இறப்புக்கு காரணம் மகன்தான் என அவனை வெறுத்து ஒதுக்குகிறார். வெறுப்பும் விரக்தியும் அவரை நோயுறச்செய்கிறது. இதனால் இயோன், அவரது முதல் மனைவியான சித்தியிடம் சிக்கி வன்கொடுமைகளை அனுபவிக்கிறார். அடித்து உதைக்கப்படுகிறார். கழித்து கட்டப்பட்ட உணவை சாப்பிட்டு உயிர் வாழ்கிறார். இந்த சூழ்நிலையில் குடும்பத்தின் பாரம்பரிய கலைகளை அவர் அடைத்து வைக்கப்பட்ட அழுக்கு அறையில் கற்கிறார். மொத்தம் பத்து ஆண்டுகள் இப்படி பயிற்சியில் போகிறது. இறுதியாக கலைகளைக் கற்றுக்கொடுத்த கண்ணாடி, தேர்ச்சி பெற்றவுடன் அவனை வெளியே வழியனுப்பி வைக்கிறது. இதுபற்றி அவனது சித்தி அறிவதில்லை. குடும்ப கலையைக் கற்க தனது மூத்த மகனை, கணவரின் தம்பி வீட்டுக்கு அனுப்பி வைக்கிறாள்.  இயோன் உயிர்தப்பி ஓடி காட்டுக்குள் மயங்கி விழுகிறான். அங்கு அவனை கொள்ளையர்கள் குழு கண்டெடுத்து தங்களோடு வேலை செய்ய வைத்துக்கொள

மோசமான குற்ற வழக்குரைஞருக்கு எதிராக வாளேந்தும் இளைஞன்! - பேட் பிராசிகியூட்டர்

படம்
  பேட் பிராசிகியூட்டர் பேட் பிராசிகியூட்டர் கே டிராமா ராக்குட்டன் விக்கி ஆப் போஸ்டர் நன்றாக இருந்தால் தொடர் நன்றாக இருக்கவேண்டிய அவசியமில்லை என்று சொல்லாம். அதற்கான எடுத்துக்காட்டு இந்த தொடர். இந்த தொடரில் நடிக்க ஜின் என்ற பாத்திரத்திற்கான நடிகரை எப்படி தேர்ந்தெடுத்தார்கள் என்று தெரியவில்லை. அதிர்ச்சியான காட்சியில் கண்களை உருட்டி விழிக்கிறார். சண்டைக்காட்சிகளில்   துறுதுறுப்பாக இருக்கிறார். காதல் என்பதை பெண்களுக்கென ஒதுக்கிவிட்டனர். எனவே, நடிப்பு என்பதை ஜின் ஜூங் என்ற பாத்திர நடிகர் பெரும்பாலும் பொருட்படுத்துவதில்லை. இயக்குநரும் வராத ஒன்றை எதற்கு இழுத்துக்கிட்டு என நினைத்துவிட்டார். ஷின் ஆ ரா பாத்திரத்தில் நடித்த நடிகை நன்றாக நடித்திருக்கிறார். அடுத்து, கணினி ஹேக்கராக வருபவரின் காமெடியும், சுன் சுல் என்ற மோசடிக்காரரின் காமெடி வில்லத்தனமும் பரவாயில்லை. மீதி அனைத்துமே பரிதாபகரமான தோல்வியாக முடிகிறது. சியோ என்ற வழக்குரைஞர். பெரும்புள்ளிகளின் சட்டவிரோத விஷயங்களை பதிவு செய்து வைத்துக்கொண்டு அவர்களை மிரட்டி கொரிய சட்டத்துறையையே கைக்குள் வைத்திருக்கிறார். எந்த வழக்கை விசாரிப்பது,

அம்மாவைப் பற்றிய உண்மையை அறிய தற்காப்புக் கலை கற்கும் மகனின் கதை! டோலுவா கான்டினென்ட் -

படம்
  டோலுவா கான்டினென்ட் - சீன டிவி தொடர் டோலுவா கான்டினெனட் - சீன டிவி தொடர் டோலுவா கான்டினென்ட் சீன டிவி தொடர்  ஷியாபோ ஷான் - டாங் சென் கிராமத்தில் காட்டிற்குள் இரும்பு பொருட்களை செய்யும் கொல்லர் தனது ஒரே மகனுடன் வாழ்ந்து வருகிறார்.   அவரது மகனுக்கு சில முக்கியமான தற்காப்பு கலைகளை சொல்லிக்கொடுத்து வளர்க்கிறார். ஆனால், அவனது அம்மா பற்றி ஏதும் சொல்வதில்லை. மகனுக்கு அம்மா பற்றி தெரிந்துகொள்ள ஆசை என்றாலும் கூட அப்பாவின் கடுங்கோபம் அறிந்து அமைதியாக இருக்கிறான். அப்பாவுக்கு கொல்லர் வேலை செய்வதற்கான விறகுகளை வெட்டி வந்து கொடுப்பது, சமையல் செய்வது மகன் டாங் சென்னின் வேலை. மற்றபடி கிடைத்த ஓய்வு நேரத்தில் சில தற்காப்பு கலைகளை பயிற்சி செய்கிறான்.. இந்த நேரத்தில் ஸ்பிரிட் ஹால் எனும் தற்காப்புக் கலை அகாடமியைச் சேர்ந்தவர், டாங் சென்னை ஆபத்து ஒன்றிலிருந்து காத்து அவனை ஒரு தற்காப்புக் கலை ஆன்ம ஆற்றல் சோதனைக்கு வரச்சொல்கிறார். ஆனால் டாங் சென்னின் அப்பாவோ,   நீ சோதனைக்கு எல்லாம் போக வேண்டாம். தனியாக அகாடமியில் படித்து நீ என்ன செய்யப்போகிறாய் என மறுக்கிறார். ஆனால் டாங்சென் சோதனைக்குப் போகிறான். அவ

உயிருக்கு உயிரான காதலை சொல்ல முடியாமல் தவிக்கும் ஆல்பட்ரோஸ் பறவை! - டே ட்ரீமர் - துருக்கி தொடர்

படம்
                    டே ட்ரீமர் துருக்கி தொடர் 50 எபிசோடுகள் எம்எக்ஸ் பிளேயர் சனீம் என்ற பெண்தான் தொடரின் மையப் பாத்திரம் . எப்போதும் புதிய தீவு ஒன்றுக்கு சென்று தனக்கு பிடித்த காதலனுடன் வாழவேண்டும் . அதுவும் ஆல்பட்ரோஸ் பறவையைப் போலவே தன்னைக் கருதுகிறாள் . தனக்கான ஆண் இணையைக் கண்டுபிடிப்பதே அவளது வாழ்க்கை லட்சியம் . சனீமைப் பொறுத்தவரை தனக்கு தோன்றுவதை அப்படியே பேசிவிடுவாள் . எதிரிலிருப்பவர்கள் யார் , என்ன நினைத்து கேட்கிறார்கள் என்பதைப் பற்றி கிஞ்சித்தும் கவலைப்படமாட்டாள் . இதனால் அவளது குடும்பம் , தோழி அய்ஹான் , அக்கா லைலா என் எல்லோருமே அவளைப் பார்த்து மிரள்கிறார்கள் . குடும்பத்தின் மளிகைக்கடையை பார்த்துக்கொண்டு பகல் கனவு காண்பதுதான் அவளது வேலை . குடும்பத்தின் கடன் வேறு அதிகமாகிக்கொண்டிருக்க , மகள் வேறு அதிக வருமானம் வரும் வேலைக்கு போனால் நன்றாக இருக்கும் என நினைக்கிறார்கள் . அப்படி எந்த வேலைக்கு போக எனத் தேடும்போது அக்கா லைலா தனது நிறுவனத்திற்கு கூட்டிச்செல்கிறாள் . விளம்பர நிறுவனமான அங்கு அவளுக்கு கிடைக்கும் அனுபவங்கள்தான் ஜவ்வாக இழுக்கும் ஏ

நிர்வாணக் காட்சிகளை இப்போது ஆட்சேபிப்பவர்களை விட வாவ் சொல்பவர்கள்தான் அதிகம்! - மிலிந்த் சோமன்

படம்
                      மிலிந்த் சோமன் திரைப்பட நடிகர் , மாடல் . நீங்கள் டிவியில் எ மவுத்புல் ஸ்கை என்ற தொடரில் நடித்து 25 ஆண்டுகள் ஆகிவிட்டன . டிடி நேஷனலில் வெளியான முதல் ஆங்கிலத் தொடர் அது . இந்தியாவில் பொழுதுபோக்கு எப்படி மாறியுள்ளது என நினைக்கிறீர்கள் ? இன்று வாய்ப்புகளும் பெருகியுள்ளன . அதைப்போலவே ஓடிடி பிளாட்பாரங்களில் கதைகளை சுதந்திரமாக கூறுவதற்கான இடமும் உள்ளது . ராமாயணம் , மகாபாரதம் ஆகிய புராண கதைகளை தாண்டி இன்று புதிய கதைகள் வருகின்றன . பிரமாதமான புதிய நடிகர்களின் வருகையும் பொழுதுபோக்கு தளத்தை மாற்றியுள்ளது .    கடந்த ஆண்டில் நீங்கள் படித்த பிடித்தமான புத்தகம் ஒன்றைச் சொல்லுங்கள் . நான் உங்களுக்கு நான் எழுதிய மேட் இன் இந்தியா நூலை சொல்லுவேன் . நீங்கள் அண்மையில் கடற்கரையில் நிர்வாணமாக ஓடும் புகைப்படத்தை பகிர்ந்திருந்தீர்கள் . இதற்கு என்னவிதமான எதிர்வினைகளை நீங்கள் எதிர்பார்த்தீர்கள் ? நான் சில மாதங்களுக்கு முன்னர் 1995 ஆம் ஆண்டு நாங்கள் எடுத்த விளம்பரம் ஒன்றின் நாளிதழ் பதிப்பை வெளியிட்டிருந்தேன் . அதில் நடித்த நானும் இன்னொருவரான மது சாப்

அப்பா, நான் உங்களை புறக்கணிக்கவில்லை! - அன்புள்ள அப்பாவுக்கு!

படம்
pexals 1 அன்புள்ள அப்பாவுக்கு,  அன்பரசு எழுதுவது, தாங்கள் நலமாக இருக்கிறீர்களா? மஞ்சள் காமாலை பாதிப்பு இன்னும் முழுதாக நீங்கவில்லை. உடல் சோர்வும், மனச்சோர்வும் வாட்டுகிறது.  தினசரி சாப்பிடுவதற்கு முன்னதாக அறையில் கீழாநெல்லி பொடியை நீரில் கலக்கி குடித்து வருகிறேன். என்ன பலன் கிடைக்குமோ தெரியவில்லை. அறையில் சமையல் செய்யும் முயற்சிகள் மிக தூரத்தில் தெரியும் விளக்கு போலவே என்னை இன்னும் ஈர்த்துவருகிறது. ஆனால் அதற்கு எந்த பயனும் இல்லை. காரணம் எனது அலுவலகப் பணிகள்தான்.  காலையில் ஐந்து மணிக்கு எழுந்துவிட்டு சிறிதுநேரம் படிப்பேன். பிறகு, டீ குடிக்க ஜனா அண்ணனோடு செல்வேன். அவர் உறுதியாக டீ குடிப்பாரா என்று எனக்கு தெரியாது. காரணம், க்ரீன் டீ என டெட்லி டீ பாக்கெட்டுகளை வாங்கி வைத்திருந்தார். அது அவரின் ஸ்டைல். விஷயத்திற்கு வருகிறேன். ஏழரை மணிக்கு வரும் 12 ஜியில் ஏறிவிடுவேன், மலம் கழிப்பது கூட தினகரன் அலுவலகத்தில்தான். எங்கள் அறையில் தண்ணீர் நிரம்பிய பக்கெட்டைப் பார்ப்பது பாலைவனத்தில் பிஸ்லரி வாட்டர் பாட்டில் கிடைப்பதை விட அரிதானது. நீங்கள் மருத்துவமனையில் மனம் கலங்கியபடி ப

நார்னியாவின் கதவைத் திறந்த எழுத்தாளர்!

படம்
ஒரு படம் ஒரு ஆளுமை ! லிஜி Ready Player one புதிய உலகத்தில் வாழ்ந்த அற்புத அனுபவத்தை அள்ளித் தருகிறது ‘ ரெடி பிளேயர் ஒன் ’. 2045 ம் ஆண்டு . நிஜ உலகின் சலிப்பிலிருந்து விடுபட , மக்கள் தேர்ந்தேடுக்கும் மாய உலகம் ஒயாசிஸ் . விர்ச்சுவல் ரியாலிட்டி கேமின் மூலமாக இதனுள் நுழையலாம் . ஓயாசிஸை உருவாக்கிய ஹேலிடே மூன்று புதிர்களை இந்த விளையாட்டில் வைத்திருக்கிறார் . ‘ புதிர்களைக் கண்டுபிடிப்பவர்களுக்கு ஓயாசிஸ் சொந்தம் ’ என்று சொல்லிவிட்டு இறந்துவிடுகிறார் . பல்லாண்டுகளாக விடுவிக்கமுடியாத புதிரை கண்டுபிடுத்து டெக் உலகின் கவனத்தை ஈர்க்கிறது ஹீரோவின் அணி . ஹீரோவுக்குப் போட்டியாக  ஐஒஐ நிறுவனம் ஆயிரக்கணக்கான நபர்களைக் களத்தில் இறக்குகிறது . யாருக்கு ஓயாசிஸ் கிடைத்தது என்பதே மீதிக்கதை   . எர்னஸ்ட் கிளைனின் நாவலைத் தழுவிய இப்படத்தின் தொழில்நுட்ப நேர்த்தி , உச்சம் . தான் நேசிக்கின்ற படங்களின் காட்சிகளை ஆங்காங்கே கோர்த்து திரைக்கதையை சுவாரஸ்யமாக்கியிருக்கிறார் இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் . சி . எஸ் . லீவிஸ் குழந்தைகளுக்கான கதை எழுதுவதில் தனித்துவம் கொண்

ஒரு படம் ஒரு ஆளுமை

படம்
  ஒரு படம் ஒரு ஆளுமை - லிஜி மான்செயூர் இப்ராஹிம் பிரான்ஸில் பாலியல்தொழில் நடைபெறுமிடத்தில் தந்தையுடன் வசித்து வருகிறான் மோசஸ் . தாயற்றவனுக்கு தந்தையும் வழிகாட்டாததால் பொய் , களவு , சூது , மாது என மோசஸ் அலைபாய்கிறான் . அப்போது மளிகை கடைக்காரர் இப்ராஹிம் அறிமுகமாகிறார் . இப்ராஹிமின் கடையில் புகுந்து பொருட்களை திருடுவது மோசஸின் வழக்கம் . மோசஸின் திருட்டை அறிந்தாலும் அவனை மகன் போல கருதி கண்டும் காணாமல் இருக்கிறார் . இச்சூழலில் திடீரென மோசஸின் தந்தை தற்கொலை செய்துகொள்ள , அனாதையாகும் மோசஸிடம் அளவற்ற அன்பு காட்டுகிறார் இப்ராஹிம் . புதிய கார் வாங்கி மோசஸூடன் அதில பயணிக்கிறார் . வழியில் நேரும் விபத்தில் இப்ராஹிம் மரணிக்கிறார் . உயிர்பிழைத்த மோசஸ் மளிகைக்கடையை எடுத்து நடத்துவதோடு படம் முடிகிறது . ஒரு சிறுவனுக்கும் முதியவருக்குமான ஆழமான நட்பை அழகாகச் செல்லுலாய்டில் சொன்ன இப்படத்தின் இயக்குநர் பிராங்காய்ஸ் டுபெய்ரான் . சலிமா பேகம் (Salima Begum) பள்ளிப்பருவத்தை கடந்து வந்த அனைத்து மாணவர்களின் வாழ்விலும் ரோல்மாடலாக சில தனித்துவமான ஆசிரியர்கள் இருப்பார்கள் . அத்தகை