இடுகைகள்

பேடிஎம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

புதிய சூப்பர் ஆப்பில் என்ன இருக்கிறது? டாடா நியூ

படம்
  புதிதாக சந்தையில் சூப்பர் ஆப் ஒன்று களமிறங்கியுள்ளது. புதிதாக என்றால் இதற்கு முன்னால் ஏதாவது ஆப் இருக்கிறதா என மிகச்சிலர் கேள்வி கேட்கலாம். நிச்சயமாக.. மைஜியோ, பேடிஎம் ஆப் ஆப்களை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? மை ஜியோ ஆப்பில் நீங்கள் அந்த நிறுவனம் வழங்கும் பல்வேறு தினசரி மளிகை தொடங்கி எலக்ட்ரானிக்ஸ், உடைகள், சினிமா, இணையம் வரையிலான சேவைகளைப் பெறலாம். இதில் பணத்தை பிறருக்கு அனுப்பும் சேவைகளையும் செய்யலாம். பேடிஎம் இந்த வகையில் பிரபலமாக இருந்தது. இப்போதுதான் பங்குச்சந்தை சரிவால் சற்று தடுமாற்றத்தில் உள்ளது. பேடிஎம் ஆப்பில் பேடிஎம் மால் என்ற வசதியைப் பயன்படுத்தி நிறைய பொருட்களை சேவைகளைப் பெறலாம்.  2016இல் அறிமுகமான மை ஜியோவில் 100 மில்லியன் பேர், 2010இல் அறிமுகமான பேடிஎம்மில் 100 மில்லியன் பேர் உள்ளனர். இப்போது அதாவது ஏப்ரல் 2022இல் அறிமுகமான டாடா நியூவில் ஒரு மில்லியன் பேர் உள்ளனர். உள்ளனர் என்ற அர்த்ததை ஆப்பை தரவிறக்கம் செய்தனர் என புரிந்துகொள்ளுங்கள். இன்று வரையில் இந்த ஆப்களை அவர்கள் எத்தனை பேர் பயன்படுத்துகிறார்கள் என்று துல்லியமாக தெரியவில்லை.  சூப்பர் ஆப் என்பதன் அடிப்படையே

மினி ஆப் ஸ்டோரின் பின்னணி என்ன? - கூகுளை எதிர்க்க தயாராகி விட்ட பேடிஎம் நிறுவனம்

படம்
      கூகுள் தனது பிளே ஸ்டோரில் இடம்பெறும் ஆப்களுக்கு 30 சதவீதம் கட்டணத்தை அதிகரித்துள்ளது. இதனால் 50க்கும் மேற்பட்ட இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பேடிஎம் நிறுவனத்தின் பின்னால் திரண்டுள்ளன. எனவே இவர்களை முன்வைத்து பேடிஎம் நிறுவனம், பேடிஎம் மினி ஆப் ஸ்டோர் ஒன்றைத் தொடங்கியுள்ளது. மினி ஆப் ஸ்டோர் தொடங்குவதற்கு பேடிஎம்மிற்கு இன்னொரு வலுவான காரணமும் உண்டு. சில நாட்களுக்கு முன்னர்தான், அதிலுள்ள சூதாட்ட விளையாட்டு பற்றி கூகுளுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட பேடிஎம் ஆப்பை தனது பட்டியலிலிருந்து விலக்கியது. மினி ஆப் ஸ்டோரை நீங்கள் பேடிஎம் ஆப் மூலம் அணுகி எதனையும் இன்ஸ்டால் செய்யாமல் பயன்படுத்த முடியும். இதிலும் ஆப்களை தேவை என்றால் காசு கொடுத்து வாங்கிக்கொள்ளலாம். ஆனால் டெவலப்பர்களுக்கு மட்டும் ஆப்களை வாங்குவதற்கு இலவச சலுகை கொடுக்கிறார்கள். இப்போதே 300க்கும் மேற்பட்ட ஆப்கள் பேடிஎம்மில் இடம்பெற்றுள்ளன. ஏறத்தாழ 5 ஆயிரம் டெவலப்பர்களிடம் பேசி வருகிறது பேடிஎம் நிறுவனம். செப்டம்பர் 17 அன்று பேடிஎம் ஐபிஎல் தொடங்குவதை முன்னிட்டு பல்வேறு சலுகைகளை மக்களுக்கு அறிவிக்கத் தொடங்கியது. அதில் அதிகளவு பேடிஎம் ஆப்ப

ஆன்லைன் விளையாட்டு: அதிகரிககும் மவுசு!

படம்
        cc       ஆன்லைன் விளையாட்டு : அதிகரிககும் மவுசு ! உலகளவில் திரைப்படம் , பாடல்கள் ஆகியவற்றை விட அதிகளவு வளர்ச்சி பெற்றுவரும் துறையாக ஆன்லைன் விளையாட்டுத்துறை வளர்ந்து வருகிறது . இதனால் கூகுள் , ஃபேஸ்புக் , ஆப்பிள் உள்ளிட்ட பெரும் டெக் நிறுவனங்கள் இத்துறையில் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளன . இந்தியாவில் விளையாட்டுத்துறையில் ஏராளமான ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் குதித்துள்ளன . அமேஸான் , ரிலையன்ஸ் ஜியோ , பேடிஎம் ஆகிய நிறுவனங்கள் ஆன்லைன் விளையாட்டு சார்ந்து முதலீடுகளை குவித்து வருகின்றன . இதுதொடர்பான ஆய்வில் டிவிட்டர் தனிப்பயனர் ஒருவருக்கு ரூ .600, ஃபேஸ்புக் ரூ .1,423 , கூகுள் , ரூ .2,023 சம்பாதித்து உள்ளன . எபிக் கேம்ஸ் நிறுவனத்தின் தனி விளையாட்டாக ஃபோர்ட்நைட் மட்டும் ரூ .7,196 சம்பாதித்து உள்ளது . இதிலிருந்தே ஆன்லைன் விளையாட்டுகளுக்கு மக்களிடையே உள்ள செல்வாக்கை அறிந்து கொள்ளலாம் . பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதிலிருந்து ஆன்லைன் விளையாட்டுத் துறை அபரிமிதமான வளர்ச்சி பெற்று வருகிறது . பல்வேறு சமூக வலைத்தளங்களிலும் உலகளவில் முன்னணி ஆன்லைன் விளையாட்டு வீரர்களைப் பின்பற்