இடுகைகள்

செய்தி அரசியல்! லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கூகுள் நியூஸில் சார்பு செய்திகளா? - உண்மை நிலவரம் இதோ

படம்
கூகுள் நியூஸ் யாருக்கு ஆதரவு? அண்மையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், கூகுளில் ட்ரம்ப் என டைப் செய்தால் எதிர்மறையான செய்திகளையே காட்டுகிறது என அதனையும் போலிச்செய்தி ஊடகம் என ட்விட்டரில் விளாசியிருந்தார். உண்மையில் கூகுள் அல்காரிதம் என்பது இடது, வலது என்றில்லாமல் செய்திகளை கூறுவதோடு தன்னை மாற்றிக்கொண்டே இருப்பதும்கூட. ஊடகங்களின் சார்பு அரசியல்வாதிகளால், மக்களால் தொடர்ச்சியாக கேள்விகேட்கப்படுவது வாடிக்கையான ஒன்று. கூகுளின் தேடுதல் வசதிகள் நாளடைவில் ஒருவருக்கு என்ன தேவையோ அதை மட்டுமே காட்டும். ஆனால் செய்திகளின் தேர்வு அப்படியல்ல. கலிஃபோர்னியா, டெக்சாஸ், வடக்கு கரோலினா ஆகிய நகரங்களில் பல்வேறு அரசியல் சார்பு கொண்ட ஆட்களின் மூலம் செய்த ஆய்வில் கூகுளின் செய்தித் தேர்வு அரசியல் ஐடியாக்களின் படி அமையவில்லை என்பது உறுதியாகியுள்ளது. 2016 ஆம் ஆண்டு அமெரிக்கத் தேர்தலில் ஃபேஸ்புக், இவ்வாண்டில் ட்விட்டரும் சார்பு பிரசார செய்திகளுக்காக விமர்சனம் செய்யப்பட்டன. மனிதர்களின் கருத்தியல்களை டெக் நிறுவனங்களில் அல்காரிதங்கள் அடையாளம் காண்பதில்லை. ட்ரம்பின் போலிச்செய்தி அவதூறு, ஒட்டுமொத்த ஊடக

செய்திகளை அதிகம் விவாதிப்பது யார்?

செய்திகளை தேடுவது யார் ? ட்ரம்பின் அதிரடி ட்வீட்டுகள் , நியூயார்க் டைம்ஸின் செய்தி தலைப்புகள் என இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட இணைய வழி செய்தி நிறுவனங்களை பியூ ஆய்வு நிறுவனம் ஆராய்ச்சி செய்து அறிக்கை (2017) வெளியிட்டுள்ளது .  ஆய்வில் கருப்பினத்தவர்களில் மூன்றில் இருபங்கினர் செய்திகளை தேடி அதற்கான விவாதித்துள்ளது தெரியவந்துள்ளது . இதில் வெள்ளையர்கள் மூன்றில் ஒரு பங்குதான் . கருப்பர்கள் 46 சதவிகிதம் செய்திகளை தேடி அறிய முயற்சித்துள்ளனர் . 24 மணிநேர செய்திகளைப் பார்க்கும் அமெரிக்கர்களில் 70 சதவிகித வெள்ளையர்களும் , 55 சதவிகித கருப்பர்களும் சோர்வடைகின்றனர் . பொதுவாக கருப்பினத்தவர்கள் பாசிட்டிவ்வான செய்திக்கு உடனடியாக பதில் அளித்திருப்பது தெரியவந்துள்ளது . எனவே செய்தி வரும் தொழில்நுட்பம் எது ? என்னவிதமாக செய்தியை உள்ளடக்கியது என்ற விழிப்புணர்வு மிக முக்கியம் .