கூகுள் நியூஸில் சார்பு செய்திகளா? - உண்மை நிலவரம் இதோ
கூகுள் நியூஸ் யாருக்கு ஆதரவு?
அண்மையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்,
கூகுளில் ட்ரம்ப் என டைப் செய்தால் எதிர்மறையான செய்திகளையே காட்டுகிறது என அதனையும்
போலிச்செய்தி ஊடகம் என ட்விட்டரில் விளாசியிருந்தார். உண்மையில் கூகுள் அல்காரிதம்
என்பது இடது, வலது என்றில்லாமல் செய்திகளை கூறுவதோடு தன்னை மாற்றிக்கொண்டே இருப்பதும்கூட.
ஊடகங்களின் சார்பு அரசியல்வாதிகளால்,
மக்களால் தொடர்ச்சியாக கேள்விகேட்கப்படுவது வாடிக்கையான ஒன்று. கூகுளின் தேடுதல் வசதிகள்
நாளடைவில் ஒருவருக்கு என்ன தேவையோ அதை மட்டுமே காட்டும். ஆனால் செய்திகளின் தேர்வு
அப்படியல்ல. கலிஃபோர்னியா, டெக்சாஸ், வடக்கு கரோலினா ஆகிய நகரங்களில் பல்வேறு அரசியல்
சார்பு கொண்ட ஆட்களின் மூலம் செய்த ஆய்வில் கூகுளின் செய்தித் தேர்வு அரசியல் ஐடியாக்களின்
படி அமையவில்லை என்பது உறுதியாகியுள்ளது. 2016 ஆம் ஆண்டு அமெரிக்கத் தேர்தலில் ஃபேஸ்புக்,
இவ்வாண்டில் ட்விட்டரும் சார்பு பிரசார செய்திகளுக்காக விமர்சனம் செய்யப்பட்டன. மனிதர்களின்
கருத்தியல்களை டெக் நிறுவனங்களில் அல்காரிதங்கள் அடையாளம் காண்பதில்லை. ட்ரம்பின் போலிச்செய்தி
அவதூறு, ஒட்டுமொத்த ஊடகங்கள் மீதான நம்பிக்கைச்சுவரை மெல்ல உடைத்து வருகிறது.