பிளாசிபோ தெரியுமா?
போலி மாத்திரைகளின் சக்தி!
காய்ச்சலின்போது பாட்டி வைத்து
தந்த கோழி சூப் அல்லது அம்மாவின் கஷாயம் நிவாரணம் தந்ததாக நினைக்கிறீர்களா? இதைத்தான்
மருத்துவ வட்டாரத்தில் பிளாசிபோ விளைவு என்கிறார்கள்.
சில உளவியல்ரீதியிலான நோய்களுக்கும்,
மருந்தின் விளைவுகளை அறியவும் மருத்துவர்கள் கொடுக்கும் சர்க்கரை அல்லது உப்பு கலந்த
மாத்திரைகள் நோயாளிகளின் நோய்களை பெருமளவு குணப்படுத்தியுள்ளது. “மத்திய ரக மாத்திரைகளை
விட சிறிய மற்றும் பெரிய மாத்திரைகள் தம் நோய்க்கு சிறப்பான தீர்வு தருவதாக நோயாளிகள்
நினைக்கின்றனர்” என்கிறார் ஹார்வர்டு மருத்துவப்பள்ளியின் பிளாசிபோ ஆய்வு இயக்குநர்(PiPS)
ஜான் கெல்லி. வலிநிவாரணத்திற்கு பயன்படுத்தும் போலிமாத்திரைகள் வலியை மறக்க வைப்பதாக
நோயாளிகள் நம்பும்போது அவர்களுக்கு ஓபியாய்டு தேவைப்படுவதில்லை. இதன்மூலம், ஓபியாய்டு
அடிமைத்தனத்தை தடுக்கலாம். அடுத்தமுறை தலைவலி வரும்போது, ஆஸ்பிரினுக்கு பதிலாக சர்க்கரை
மாத்திரையை எடுத்துக்கொள்ளுங்கள். குணம் கிடைத்தாலும் ஆச்சரியமில்லை. ஏனெனில் மனம்
அவ்வளவு சக்தி வாய்ந்தது.
பிளாசிபோ என்பது நோயாளிகளின் பிரச்னைகளை கண்டறிய தரப்படும் போலி மாத்திரை. அதுவரை கொடுத்த மாத்திரைகளின் விளைவுகளை அறியும் இவை மருத்துவர்களால் வழங்கப்படுகிறது. பிளாசிபோவில் சர்க்கரை அல்லது உப்பு இருக்கும். உலகளவில் பிளாசிபோ மாத்திரைகள் பரிந்துரைக்கப்படுவது அதிகரித்து வருகிறது. (நன்றி: வெங்கடசாமி)