தேசியவிருது ஆசிரியர்!


பெண்கல்விக்கு பாடுபடும் ஆசிரியர்!

Related image
ஹரியானாவின் மேவத் பகுதியைச் சேர்ந்த ஆசிரியர் பஸ்ருதீன்கான், பெண்குழந்தைகளின் இடைநிற்றல் அளவை குறைத்து ஆசிரியர் தினத்தில் இந்தியப் பிரதமரின் பாராட்டையும் பெற்றுள்ளார்.
மேவத் நகரில் படிக்கும் மாணவர்களில் 20 சதவிகிதப் பேர் இடைநின்றுவிடுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. அறிவியல் மற்றும் கணித ஆசிரியரான பஸ்‌ருதீன்கான், உடான் எனும் தன்னார்வ நிறுவனத்தை தொடங்கி கல்வி, தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.

1993 ஆம் ஆண்டு ஜார்புரி கிராமத்தில் தன் கல்விப்பணியை 20 மாணவர்களுடன் தொடங்கிய பஸ்‌ருதீன்கான், இரண்டு ஆண்டுகளில் மாணவர் எண்ணிக்கையை 57 ஆக மாற்றிக்காட்டினார். பின் சிரோலி கிராம பள்ளியில் 96 ஆக இருந்த மாணவர்களின் எண்ணிக்கையை 638 ஆக உயர்த்தி சாதித்தவர், நூறு சதவிகித தேர்ச்சி சாதனையையும் நிகழ்த்தினார். தற்போது தப்பன் நகர நடுநிலைப்பள்ளியில் காலை 7 முதல் இரவு 7 வரை பணியாற்றுகிறார். 25 ஆண்டுகளாக ஆசிரியராக பணியாற்றும் பஸ்‌ருதீன்கான், இதுவரை பள்ளியின் அடிப்படை கட்டமைப்புக்காக  என்ஜிஓக்கள் உதவிகோரி ரூ.1.7 கோடி பெற்றுத்தந்துள்ளார். “குழந்தைகளோடு உங்களை ஈடுபடுத்திக்கொண்டால் கல்வி ஈஸிதான்” என புன்னகைக்கிறார் உதாரண ஆசிரியர் பஸ்ருதீன்கான்.


பிரபலமான இடுகைகள்