ஊழலில் கரைகண்ட தேசங்கள்!





Image result for corruption nations

ஊழல் தேசங்கள்!

நேரடியாக பிடுங்கினால் வரி, மறைவாக கொள்ளையடித்தால் ஊழல் என்ற அளவில் ஊழல் வழக்குகள் உலகளவில் உண்டு. இந்த ஆண்டில் பிரேசில் முன்னாள் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா, அர்ஜென்டினா முன்னாள் அதிபர் கிரிஸ்டினா கிர்ச்சனர், தாய்லாந்து முன்னாள் அதிபர் யிங்லக் ஷினவத்ரா ஆகியோர் ஊழல் வழக்குகள் காரணமாக செய்திகளில் அடிபட்ட பிரபலங்கள்.
ஊழல் ஏற்பட நாடுகளின சமூக அமைப்பும் முக்கியக்காரணம் என்பதை  அண்மையில் வெளியான அமெரிக்க செய்தி மற்றும் உலக அறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது. 80 நாடுகளிலுள்ள 20 ஆயிரம் குடிமக்களிடம் நடத்திய ஆய்வின் அடிப்படையில் இப்பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. முதல் இடத்தில் நைஜீரியாவும், அடுத்த இடங்களில் கொலம்பியா, பாகிஸ்தான், இரான், மெக்சிகோ ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. இதில் டாப் 10 இல் இந்தியா வரவில்லை என்பதற்கு பெருமைப்பட்டுக்கொள்ளலாம். அமெரிக்கா 61 இடத்திலும், ஆஸ்திரேலியா(79), கனடா(80) இடத்தையும் பிடித்துள்ளன.