காஃபிதான் என் அடையாளம்- மிதிலேஷ் வாஸல்வர்




Image result for mithilesh wazalwar



காஃபியின் வளர்ச்சி!

நாக்பூரைச் சேர்ந்த மிதிலேஷ் வாஸல்வாருக்கு தெரிந்தது அனைத்தும் காஃபி பற்றி மட்டும்தான். காஃபி கொட்டைகளை வறுத்து தயாரிக்கும் ஏரோபிரஸ் போட்டியில் வெற்றிபெற்ற இந்தியர் இவர் ஒருவர்தான். 20 மணிநேரங்களாக இடைவிடாமல் வேலை செய்து உடல்எடை குறையுமளவு வேலை செய்யும் அசுரன். தற்போது காரிடார் செவன் எனும் கம்பெனியைத் தொடங்கி காஃபி கலாசாரத்தை வளர்த்தெடுத்து வருகிறார்.

“பள்ளியின் ஆறாவது மாடிக்கு சென்று கொண்டிருந்தபோது ஆசிரியர்களின் காஃபி வாசனை மூக்கிற்கு வர, என்னையே நான ்மறந்தேன். அதனால்தான் பிராண்டிற்கு பெயர் காரிடார் செவன்” என மலர்ச்சியாக சிரிக்கிறார் மிதிலேஷ். இந்தியா உலகிலேயே நான்காவது பெரிய காஃபி தயாரிப்பாளர். உலகின் காஃபி தேவையில் 4 சதவிகிதத்திற்கு இந்தியா பொறுப்பு. தற்போது இந்தியாவின் காஃபி விற்பனை சந்தை வளர்ச்சி 15.1 சதவிகிதமாக வளர்ந்துள்ளதை மின்டெல் நிறுவனத்தின் ஆராய்ச்சி அறிக்கை தகவல் கூறுகிறது. காஃபி விற்கும் காரிடார் செவன் குழந்தைகளின் காப்பகத்திற்கான நிதியை சேகரிக்கும் பொதுநலப்பணிகளிலும் ஈடுபடுகிறது. 

இரான், ஆஸ்திரேலியாவிலுள்ள காபி வல்லுநர்களை போல இந்தியாவிலும் உருவாக்குவதே மிதிலேஷின் லட்சியம்.


பிரபலமான இடுகைகள்